fbpx
  • No products in the basket.

3.10. அப்துல் ரகுமான்

மதுரையில் பிறந்தவர்

தமிழக அரசின் “பாரதிதாசன் விருது”, தமிழ்ப்பல்கலைக்கழகம் வழங்கிய, “தமிழ் அன்னை விருது” போன்ற பல பரிசினை பெற்றுள்ளார்

தொன்மம் என்ற இலக்கிய உத்தியை மிகுதியாகப் பயன்படுத்தியவர்


சிறப்பு பெயர்கள்:

· இவர், “மரபுக் கவிதையின் வேர் பார்த்தவர்; புதுக்கவிதையில் மலர் பார்த்தவர்” எனப் பாராட்டப்படுபவர்

· கவிக்கோ

· விண்மீன்கள் இடையே ஒரு முழுமதி

· வானத்தை வென்ற கவிஞன்

· சூரியக் கவிஞன்

· தமிழ்நாட்டு இக்பால்


இதழ்:

· கவிக்கோ


படைப்புகள்:

· ஐந்தாண்டுக்கு ஒரு முறை(கவிதை தொகுதி)

· மரணம் முற்றுப்புள்ளி அல்ல

· சுட்டுவிரல்

· அவளுக்கு நிலா என்று பெயர்

· உன் கண்ணில் தூங்கிக் கொள்கிறேன்

· பால்வீதி

· நேயர் விருப்பம்

· பித்தன்

· ஆலாபனை(சாகித்ய அகாடமி விருது)

· தீபங்கள் எரியட்டும்

· சொந்த சிறைகள்

· முட்டைவாசிகள்

· விதைபோல் விழுந்தவன்(அறிஞர் அண்ணாவை பற்றி)

· காலவழு

· விலங்குகள் இல்லாத கவிதை

· கரைகளே நதியாவதில்லை

· இன்றிரவு பகலில்

· சலவை மொட்டு


மொழி பெயர்ப்பு:

தாகூரின் 'சித்ரா ' (2005)


ஆய்வு நூல்கள்:

புதுக்கவிதையில் குறியீடு (முனைவர் பட்ட ஆய்வேடு, 1989)

கம்பனின் அரசியல் கோட்பாடு (ஏவிம் அறக்கட்டளைச் சொற்பொழிவு, 1990)


பதிப்பித்த நூல்கள்:

குணங்குடியார் பாடற்கோவை (1980), மேலும் 5 சிறு கவிதைத் தொகுதிகள்


ஆய்வு கட்டுரைகள் : 15

ஆய்வு சொற்பொழிவுகள்:

ஐம்பதுக்கும் மேல்


கவிதை வாசிப்புக்கும், சொற்பொழிவுக்கும் சென்று வந்த நாடுகள்:

இலங்கை, மலேயா, சிங்கபூர், பேங்காக், ஆங்காக், ஐக்கிய அரபு எமிரேட்டு, சவுதி அரேபியா, அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, குவைத், பக்ரைன்.


விருதுகள்:

குன்றக்குடி அடிகளார் - பாரிவிழா விருது கவியரசர்(1986) தஞ்சைத்தமிழ்ப் பல்கலை - தமிழன்னை விருது. (1989) தமிழக அரசு - பாரதிதாசன் விருது, கலைமாமணி விருது(1989) சாகித்திய அகாதெமி - சாகித்திய அகாதெமி விருது.(1999) தி.மு.க - கலைஞர் விருது (ஒரு இலட்சம் ரூபாய்)(1997) கொழும்பு கம்பன் கழகம் (கொழும்பு) - கம்ப காவலர்(2006) கம்பன் கழகம், சென்னை - கம்பர் விருது(2007) தினதந்தி - சி.பா.ஆதித்தனார் இலக்கியப் பரிசு(2007) பொதிகை தொலைக்காட்சி, சென்னை - பொதிகை விருது(2007)


பாராட்டுக்கள்: வெற்றி பல கண்டு நான் விருது பெற வரும் போது வெகுமானம் என்ன வேண்டும் எனக் கேட்டால், அப்துல் ரகுமானைத் தருக என்பேன்' - முத்தமிழர் அறிஞர் டாக்டர் கலைஞர்

'நான் கலீல் ஜிப்ரானைப் படிக்கும் போதெல்லாம் 'தமிழில் இப்படி எழுத யாருமில்லையே' என ஏங்குவேன். அந்த ஏக்கம் இப்போது இல்லை. இதோ, அப்துல் ரகுமான் வந்துவிட்டார். இவருடைய கவிதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட்டால், 'யார் இந்தக் கவிஞன்?' என்று உலகம் விசாரிக்கும்.' - கவியரசு கண்ண தாசன்.

'கம்பனுக்கும் தோன்றாத கற்பனைகள் ரகுமானுக்கு தோன்றுகின்றன - வாகீசக் கலாநிதி கி.வா.ஜ.

இன்று பலர் புதுக்கவிதை எழுதுகின்றார் எழுதுகின்ற கவிஞர்களுள் அப்துல் ரஹ்மான் முன் நிற்கும் மோனையைப் போல் முன் நிற்கின்றார் முன்னேறி முன்னேறி வளர்ந்து, தம்மைப் பின்பற்றும்படி செய்து வருவதோடு பெரும்புகழுக்குரியவராய் விளங்குகின்றார் மன்றத்தில் இவரைப் போல் புதுமையாக மற்றவர்கள் பாடுதற்கே முடியவில்லை - உவமைக் கவிஞர் சுரதா, 'நேயர் விருப்பம்' முன்னுரையில்

ஒடிந்து விழும் சிந்தனையோ, விஞ்ஞானத்தை ஒதுக்குகின்ற பழமைகளோ, சமுதாயத்தில் படிந்திருக்கும் தீமைகளை வெள்ளைத் தாளில் பதிவு செய்யும் பாடல்களோ நூலில் இல்லை உடனடியாய் இந்நூலை ஆங்கிலத்தில் ஒழுங்காக மொழிபெயர்த்தால் ரகுமான் கீர்த்தி கிடுகிடென மேனாட்டில் பரவும் அந்தக் கீர்த்தியினைப் பெறும் தகுதி இவருக் குண்டு - உவமைக் கவிஞர் சுரதா, 'நேயர் விருப்பம்' முன்னுரையில் ரகுமான்! கவியரங்களில் நீ எப்போதும் பிறரை வெல்வாய், இன்று உன்னையே நீ வென்றுவிட்டாய்!' - தமிழறிஞர் அ.ச.ஞா.

 
© TNPSC.Academy | All Rights Reserved.
 😎 Our Students! - 236 (Gr 2 & 2A) & 56 (Group 4)
Join New Batch
close-image