fbpx
  • No products in the basket.

21. பழமொழி

நூற்குறிப்பு

மக்கள் தம் பட்டறிவால் பெற்ற கருத்தை சுருக்கமாக கூறியதே பழமொழியாகும்.

பழமொழியை மூதுரை, முதுமொழி, உலக வசனம் எனவும் கூறுவர்.

ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு பழமொழி இடம்பெறுமாறு பாடப்பெற்ற 400 வெண்பாக்களைக் கொண்ட நூல் பழமொழி. இதனைப் பழமொழி நானூறு எனவும் குறிப்பிடுவர்.

34 அதிகாரம், 400 பாடல்கள்

ஆசிரியர் குறிப்பு

பழமொழி என்னும் நீதிநூலை இயற்றியவர் முன்றுறையரையனார். இவர் சமண சமயத்தை சார்ந்தவர்

“அரையன்” என்பது அரசரைக் குறிக்கும் சொல். இவர் பாண்டிய நாட்டு முன்றுரை என்னும் ஊரை ஆட்சிபுரிந்த சிற்றரசர் என ஆராய்ச்சியாளர் கூறுவர்.

இவர் வாழ்ந்த காலம் கி.பி. எட்டாம் நூற்றாண்டுகள்

வேறுபெயர் – “முதுசொல்”

பா வகை

பழமொழி நானூறு வெண்பாக்களால் ஆன அறநூலாகும். அதிகாரங்களில் அறக்கருத்துகள் கூறப்பட்டுள்ளன.

சிறந்த தொடர்கள்

· பாம்பறியும் பாம்பின் கால்

· முள்ளினால் முள் களையுறுமாறு

· இறைத்தோறும் ஊறுங்கிணறு

· ஆயிரங் காக்கைக் கோர்கல்

· திங்களை நாய் குரைத்தன்று

· கற்றலின் கேட்டலே நன்று

· குலவிச்சை கல்லாமல் பாகம் படும்

· குன்றின் மேலிட்ட விளக்கு

· நுணலும் தன்வாயால் கெடும்

· முறைக்கு மூப்பு இளமை இல் (கரிகால்)

 

TNPSC Materials

© TNPSC.Academy | All Rights Reserved.
 😎 Our Students! - 236 (Gr 2 & 2A) & 56 (Group 4)
Join New Batch
close-image