fbpx
  • No products in the basket.

21. நூலகம் பற்றிய செய்திகள்

· ஒரு மனிதன் ஆண்டுக்கு 2000பக்கங்களாவது படித்தால் தான் அன்றாட உலக நடப்புகளைத் அறிந்த மனிதனாகக் கருதப்படுவான் என யுனெஸ்கோ கூறியுள்ளது.

· கிரீஸ் நகர அரசுகளே முதன் முதலாக மக்களுக்கான நூல் நிலையங்களை அமைத்தன.

· இந்தியாவில் உள்ள நூலகங்களில் கல்கத்தா தேசிய நூலகம் முதன்மையானது.

· புத்தகச்சாலை, ஏடகம், சுவடியகம், சுவடிச்சாலை, வாசகசாலை, படிப்பகம், நூல்நிலையம், பண்டாரம் என நூலகம் பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது.

· ஆங்கிலத்தில் “லைப்ரரி” என்னும் சொல் நூலகத்தை குறிக்கின்றது.

· இலத்தின் மொழியில் “லிப்ரா” என்னும் சொல்லிற்குப் புத்தகம் என்பது பெயர்.

· இந்தியாவிலேயே முதன் முறையாகத் தமிழக அரசுத் தான் 1948ஆம் ஆண்டு சென்னை பொது நூலகச் சட்டத்தை இயற்றியது.

· தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை “புத்தகப்பூங்கொத்து” என்னும் வகுப்பறை நூலகத் திட்ட்டத்தை தொடங்கியுள்ளது.

· இந்திய நூலகத் தந்தை : சீர்காழி சீ.இரா.அரங்கநாதன்.


தமிழகத்தின் மிகப் பழைமையான நூலகங்கள்:

· சரசுவதி மகால் நூலகம், தஞ்சை. (1820)

· அரசினர் கீழ்த்திசைச் சுவடி நூலகம், சென்னை.

· கன்னிமாரா நூலகம், சென்னன. (1869),

· சென்னைப் பல்கலைக்கழக நூலகம் (1907),

· அண்ணாமலை பல்கலைக்கழக நூலகம், சிதம்பரம் (1929),

· டாக்டர் உ.வே.சா. நூலகம், சென்னை (1947),

· மறைமலை அடிகளார் நூலகம், சென்னை (1958),

· மதுரை காமராசர் பல்கலைக்கழக நூலகம் (1966),

· உலகத் தமிழ் ஆராய்;ச்சி நிறுவன நூலகம், சென்னை (1970),

· தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக நூலகம் (1981)

 

TNPSC Materials

Group 1 Courses

© TNPSC.Academy | All Rights Reserved.
Click to Download
close-image