fbpx
  • No products in the basket.

20.1. தாயுமானவர்

வாழ்க்கைக்குறிப்பு:

பெயர் : தாயுமானவர்

பெயர் காரணம் : திருச்சி மலைமீது உள்ள இறைவனான தாயுமானவர் அருளால் பிறந்தமையால் இவருக்கு தாயுமானவர் என்று பெயர் சூட்டப்பட்டது.

பெற்றோர் : கேடிலியப்பர் – கெசவல்லி அம்மையார்

மனைவி : மத்துவார்குழலி

மகன் : கனகசபாபதி

ஊர் : நாகபட்டினம் மாவட்டத்தில் உள்ள திருமறைக்காடு(வேதாரண்யம்)

பணி : திருச்சியை ஆண்ட விஷய ரகுநாத சொக்கலிங்கரிடம் கருவூல அலுவலர்

காலம் : கி.பி. 18ம் நூற்றாண்டு


சிறப்பு பெயர்:

தமிழ் சமய கவிதையின் தூண்


படைப்பு:

தாயுமானவர் திருப்பாடல் திரட்டு


குறிப்பு:

இவரின் பாடலை “தமிழ்மொழியின் உபநிடதம்” எனப் போற்றுவர்

இவர் திருமூலர் மரபில் வந்த மௌனகுருவிடம் கல்வி கற்றார்

இவரின் “பராபரக்கண்ணி” 389 கண்ணிகளை உடையது

இவர் முக்தி அடைந்த இடம் இராமநாதபுரம் மாவட்டம் இலட்சுமிபுரம்

சமரச சன்மார்கத்தை உலகிற்கு முதன் முதலில் அறிமுகம் செய்தவர்

உபநிடதக் கருத்துக்களை தமிழில் மிகுதியாக சொன்னவர்

தாயுமானவர் தனிப்பாடல் திரட்டில் 56 உட்பிரிவுகளும் 1452 பாடல்களும் உள்ளன

பராபரக் கண்ணி, எந்நாட் கண்ணி, கிளிக் கண்ணி, ஆனந்த களிப்பு, ஆகார புவனம் போன்றன இவர் தம் பாடல் தலைப்புகளில் சிலவாகும்

இவர் பாடலில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் குணங்குடி மஸ்தான் சாகிபு

“கந்தர் அநுபூதி சொன்ன எந்தை” என்று அருணகிரி நாதரைப் பாராட்டியுள்ளார்


மேற்கோள்:

எல்லாரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே

அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே

நெஞ்சமே கோயில் நினைவே சுகந்தம் அன்பே

மஞ்சன நீர் பூசை கொள்வாய் பராபரமே

ஆசைக்கோர் அளவில்லை அகிலமெல்லாம் கட்டி ஆளனும்

சும்மா இருப்பதே சுகம்

பார்க்கின்ற மலரூடு நீயே இருத்தி அப்

பனிமலர் எடுக்க மனம் நண்ணேன்

 

TNPSC Materials

© TNPSC.Academy | All Rights Reserved.
 😎 Our Students! - 236 (Gr 2 & 2A) & 56 (Group 4)
Join New Batch
close-image