• No products in the basket.

2.9. ஏலாதி

பதினெண்கீழ்க்கணக்கு நூல் தொகுப்பில் அடங்கிய பண்டைத் தமிழ் நீதி நூல்களில் ஒன்று ஏலாதி.

‘ஏலாதி’ என மருத்துவ நூல்களில் கூறப்படுவது ஏலம் ஆதியான ஆறு பொருள்கள் சேர்ந்த ஒரு வகைச் சூர்ணம். ஏலம் ஒரு பங்கு, இலவங்கப்பட்டை இரண்டு பங்கு, நாககேசரம் மூன்று பங்கு, மிளகு நாலு பங்கு, திப்பிலி ஐந்து பங்கு, சுக்கு ஆறு பங்கு என்ற அளவுப்படி சேர்த்து இம் மருந்தை ஆக்குவர். ஏலாதி நூலும் ஒவ்வொரு பாடலிலும் ஆறு பொருள்களைப் பெற்று, உயிருக்கு உறு துணையாக அற நெறியை விளக்கி உரைக்கும் ஒப்புமை பெற்றமையால் இப் பெயரைப் பெற்றுள்ளது.

ஏலாதியில் 81பாடல்கள் உள்ளன. இந் நூலில் கடவுள் வாழ்த்து நீங்கலாக எண்பது பாடல்கள் உள்ளன.

சில பாடல்கள் :

இடைவனப்பும், தோள்வனப்பும், ஈடில் வனப்பும்

நடைவனப்பும் நாணின் வனப்பும் – புடைசால்

கழுத்தின் வனப்பும் வனப்பல்ல எண்ணோ(டு)

எழுத்தின் வனப்பே வனப்பு.

பொருள் :இடையின் அழகோ, தோளின் அழகோ ஈடு இல்லாத வேறு அழகுகளோ, நடை அழகோ, நாணத்தினால் ஏற்படும் அழகோ, கழுத்தின் அழகோ உண்மையான அழகு ஆகா. எண்ணும், எழுத்தும் சேர்ந்த, அதாவது கல்வியினால் ஏற்படும் அழகே அழகு

 

TNPSC Books

Group 1 Courses

© TNPSC.Academy | All Rights Reserved.