TNPSC Books
-
TNPSC பொதுத் தமிழ் Book - for Group 2, 2A, 3, 4 & VAO
₹1,000.00Original price was: ₹1,000.00.₹850.00Current price is: ₹850.00. -
TNPSC General English Book - for Group 2 & 2A
Rated 5.00 out of 5₹1,000.00Original price was: ₹1,000.00.₹850.00Current price is: ₹850.00.
Group 1 Courses
TNPSC Group 1 - Test Series - 2019
4.7₹3,500.00Original price was: ₹3,500.00.₹2,800.00Current price is: ₹2,800.00. 542Group 1 | Postal and Online Test Series | 2022
₹3,200.00Original price was: ₹3,200.00.₹2,800.00Current price is: ₹2,800.00. 88
Group 2 & 2A Courses
TNPSC Group 2 and 2A - Test Series - 2019
₹2,400.00Original price was: ₹2,400.00.₹1,800.00Current price is: ₹1,800.00. 527TNPSC Group 2 and 2A - Test Series - 2019 - தமிழ்
₹2,400.00Original price was: ₹2,400.00.₹1,800.00Current price is: ₹1,800.00. 175
TNPSC அறிவியல் - உயிரியல் 











திரிகடுகம் என்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும்.
திரி-மூன்று, கடுகம்-காரமுள்ள பொருள்.
திரிகடுகம் என்பது சுக்கு, மிளகு திப்பிலி என்னும் மூன்று மருந்துப் பொருளைக் குறிக்கும். மூன்று மருந்துப் பண்டங்களால் ஆகிய திரிகடுகம் என்னும் மருந்து உடல் நலம் பேணுவதைப் போன்று, இந்நூற் செய்யுட்களில் மும்மூன்றாக உரைக்கப் பெற்ற அறங்களும் உயிர் நலம் பேணுவனவாம். இதனாலேயே இந்நூல் திரிகடுகம் எனப் பெயர் பெற்றது. இக்கருத்தை,
உலகில் கடுகம் உடலின் நோய் மாற்றும்;
அலகு இல் அக நோய் அகற்றும் – நிலை கொள்
திரிகடுகம் என்னும் திகழ் தமிழ்ச் சங்கம்
மருவு நல்லாதன் மருந்து.
என வரும் பாயிரச் செய்யுளும் உணர்த்துகின்றது.
101வெண்பாக்களைக் கொண்டது இந்நூல். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் ,கடைச்சங்க காலத்தில் இயற்றப்பட்டதாகக் கருதப்படுகிறது. இதன் ஒவ்வொரு பாடலிலும் இம்மூவர் அல்லது இம்மூன்றும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
திரிகடுகம் என்ற உயிர் மருந்து நூலை ஆக்கியவர் நல்லாதனார். இவர் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு.
அறத்தை வலியுறுத்தும் திரிகடுகம் – சில குறிப்புகள் :
அறம் செய்தால் இன்பத்தையும் அறம் அல்லாத செயல் செய்தால் துன்பத்தையும் தரும் என்பதை எடுத்துச் சொல்லி மனிதரை நல்வழிப்படுத்துகிறது திரிகடுகம்.
கடன்படாது வாழ்பவன், வந்த விருந்தினரைப் போற்றுபவன், ஒருவர் சொல்லியதை மறவாது மனத்தில் வைப்பவன் இம்மூவரையும் நண்பர்களாகப் பெறுவது நன்மை தருவதாகும். அது அறம் செய்ய வழிவகுப்பதாகும்.
இளமையில் கல்வி கற்பதும், பெற்றோர்களை வழிபட்டுப் போற்றுதலும், சான்றோர் நெறியில் செல்வதும் உயர்ந்த அறங்களாகும். நல்லவருள் நல்லவர் எனப்படுதல், நட்பு கொள்வதில் சிறந்தவர் எனப்படுதல் ஆகியன நல்லவர் மேற்கொள்ளும் அறங்களாகும்.
உலகிலேயே சிறந்த அறம் வறியவர்க்கு வேண்டுவன கொடுத்தல் ஆகும். வறுமை நிலையிலும் கீழான செயல்களைச் செய்யாதிருத்தல் சிறந்த அறம் ஆகும்.
சில பாடல்கள் :
ஒருவன், உயர்வும் ஊக்கமும் பெறவேண்டுமானால், உலகத்தோடு எப்படி ஒட்ட ஒழுகவேண்டும் என்பது பற்றிக் கூறும் 56-ஆவது பாடல்
“முந்தை எழுத்தின் வரவுணர்ந்துபிற்பாடு
தந்தையும் தாயும் வழிபட்டு –வந்த
ஒழுக்கம் பெருநெறி சேர்தல் இம்மூன்றும்
விழுப்ப நெறி தூராவாறு.”
பிறர் தன்னை உயர்த்தி பேசும் பொழுது இது தகாது என்று நாணுதலும், தன்னை விரும்பாதவர் தன்னை இகழுமிடத்து வெகுளாமல் பொறுத்தலும், மேகத்தைப் போல் கைம்மாறு கருதாமல் உதவி செய்தலும் சிறந்த செல்வமாகும் என்னும் வாழ்வியல் உண்மையைச் சொல்லும் 6-ஆவது பாடல்
“பிறர் தன்னைப் பேணுங்கால் நாணலும் பேணார்
திறன்வேறு கூறிற் பொறையும்—அறவினையைக்
காராண்மை போல வொழுகலும் இம்மூன்றும்
ஊராண்மை என்னும் செருக்கு.”