fbpx
  • No products in the basket.

2.4. முதுமொழிக்காஞ்சி

பதினெண்கீழ்கணக்கு நூல்களுள் ஒன்றான இந்நூல் உலகியல் உண்மைகளைத் தெளிவாக எடுத்து இயம்புகிறது.

நிலையாமையை உணர்த்தும் உலகியல் அனுபவம் உணர்த்துதலால் முதுமொழிக்காஞ்சி எனப் பெயர் பெற்றது.

முதுமொழி என்பது பழமொழி என்னும் சொற்பொருளோடு தொடர்புடையது. காஞ்சி என்பது மகளிர் இடையில் அணியும் ஒருவகை அணிகலக் கோவையையும் குறிக்கும். பல மணிகள் கோத்த காஞ்சி அணி போல முதுமொழிகள் பல கோத்த நூல் முதுமொழிக் காஞ்சி எனப் பெயர் பெற்றது எனச் சிலர் கூறுவர்.

இந்நூல் அறவுரைக்கோவை எனவும் வழங்கப்படுகிறது. முதுமொழிக்காஞ்சி என்பது காஞ்சித்திணையின் துறைகளுள் ஒன்று.

இந்நூலை இயற்றியவர் மதுரைக் கூடலூர் கிழார். இந்நூல் இயற்றப்பட்ட காலம் சங்கம் மருவிய மருவியகாலமான ஐந்தாம் நூற்றாண்டு என்பர்.

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் மிக சிறிய நூல் இது.

இந்நூலில் உள்ள பாடல்கள்:

இந்நூலுள் பத்துப் பத்துக்களும், ஒவ்வொரு பத்திலும் பத்து முதுமொழிகளும் உள்ளன. ஒவ்வொரு செய்யுளின் முதல் அடியும், 'ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம்' என்றே தொடங்குகின்றமையால் இந் நூல் நூறு குறள் வெண் செந்துறையாலானது எனலாம். எல்லா அடிகளிலும் பயின்று வரும் சொற் குறிப்பைக் கொண்டு, ஒவ்வொன்றும் சிறந்த பத்து, அறிவுப் பத்து என்று பெயர் பெற்றுள்ளது.

நூறதாம் சிறுபஞ்ச மூலம்; நூறு

சேர் முதுமொழிக் காஞ்சி.

எனவரும் பிரபந்த தீபிகைக் குறிப்பினால் முதுமொழிக்காஞ்சி நூறு எண்ணிக்கை உடையதாகக் கருதப் பெறுதலும் விளங்கும்.

பத்து அடிகளைக் கொண்ட ஒவ்வொரு பாடலுக்கும் தனித்தனிப் பெயர் வழங்கப்பட்டுள்ளது.

1. சிறந்த பத்து

2. அறிவுப் பத்து

3. பழியாப் பத்து

4. துவ்வாப் பத்து

5. அல்ல பத்து

6. இல்லைப் பத்து

7. பொய்ப் பத்து

8. எளிய பத்து

9. நல்கூர்ந்த பத்து

10. தண்டாப் பத்து

சில சிறந்த வரிகள் :

· சிறந்த பத்து

மேதையின் சிறந்தன்று, கற்றது மறவாமை.

கற்றது - கற்ற பொருளை

மறவாமை - மறவாதிருத்தல்

பொருள் : புதிதாக ஒன்றை அறிந்துகொள்வதை விட கற்றதை நினைவில் வைத்திருப்பது மேலானது.

· துவ்வாப் பத்து

கழி தறுகண்மை பேடியின் துவ்வாது.

கழி - அளவின் மிக்க

தறுகண்மை - வீரம்

பொருள் : அஞ்ச வேண்டியதற்கு அஞ்சாமல் இருத்தல் பேடித்தன்மையாகும்.

· துவ்வாப் பத்து

நாண் இல் வாழ்க்கை பசித்தலின் துவ்வாது.

நாண் இல் வாழ்க்கை - நாணமில்லாது உண்டு உயிர்வாழும் வாழ்க்கை

பசித்தலின் - பசித்தலினின்றும்

பொருள்:வெட்கத்தை விட்டுப் பசி நீங்கினாலும் அது பசி நீங்காததைப் போன்றதாகும்.

· அல்ல பத்து

ஈரம் அல்லாதது கிளை நட்பு அன்று.

ஈரம் அல்லாதது - அன்பில்லாத தொடர்பு

கிளை - சுற்றமும்

பொருள் :அன்பில்லாத தொடர்பு உறவுமாகாது நட்புமாகாது.

· அல்ல பத்து

அறத்து ஆற்றின் ஈயாதது ஈகை அன்று.

அறத்து ஆற்றின் - அறவழியில்

ஈயாதது - கொடாதது

பொருள் : நல்ல வழியில் வராத செல்வத்தைக் கொடுப்பது தர்மமாகாது.

 

TNPSC Materials

© TNPSC.Academy | All Rights Reserved.
 😎 Our Students! - 236 (Gr 2 & 2A) & 56 (Group 4)
Join New Batch
close-image