TNPSC Books
-
TNPSC பொதுத் தமிழ் Book - for Group 2, 2A, 3, 4 & VAO
₹1,000.00Original price was: ₹1,000.00.₹850.00Current price is: ₹850.00. -
TNPSC General English Book - for Group 2 & 2A
Rated 5.00 out of 5₹1,000.00Original price was: ₹1,000.00.₹850.00Current price is: ₹850.00.
Group 1 Courses
TNPSC Group 1 - Test Series - 2019
4.7₹3,500.00Original price was: ₹3,500.00.₹2,800.00Current price is: ₹2,800.00. 542Group 1 | Postal and Online Test Series | 2022
₹3,200.00Original price was: ₹3,200.00.₹2,800.00Current price is: ₹2,800.00. 88
Group 2 & 2A Courses
TNPSC Group 2 and 2A - Test Series - 2019 - தமிழ்
₹2,400.00Original price was: ₹2,400.00.₹1,800.00Current price is: ₹1,800.00. 175TNPSC Group 2 and 2A - Test Series - 2019
₹2,400.00Original price was: ₹2,400.00.₹1,800.00Current price is: ₹1,800.00. 527












பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் உள்ள முப்பெரும் அறநூல்கள் = திருக்குறள், நாலடியார், பழமொழி நானூறு
ஒரு கதையோ, வரலாற்று நிகழ்வோ கட்டி உரைக்கப்பட்டு பாடலின் இறுதியில் பழமொழி நீதி சுட்டப்படுவதாலும், நானூறு பாடல்களை உடையதாலும் பழமொழி நானூறு எனப் பெயர்பெற்றது.
இயற்றியவர் முன்றுறை அரையனார்.
400 பாடல்களைக் கொண்டது. பழமொழிக்கென அமைந்த முதல் தமிழ் நூல். வெண்பா பாவகையை சார்ந்தது.
தொல்காப்பியர் பழமொழியை “முதுமொழி” என்கிறார்.
பழமொழி என்ற சொல் முதன் முதலில் அகநானூறில் வருகிறது.
இந்நூலை பதிப்பித்தவர் செல்வகேசவராயசேகர முதலியார்
வேறு பெயர்கள்:
· பழமொழி
· சொல்வழக்கு
· முதுமொழி
· உலக வசனம்
நூல் பகுப்பு முறை:
இந்நூலின் பெரும் பிரிவுகள் – 5, இயல்கள் – 34
பிரிவு 1 – கல்வி, ஒழுக்கம், புகழ் பற்றியது (9 இயல்கள்)
பிரிவு 2 – சான்றோர், நட்பின் இயல்பு பற்றியது (7 இயல்கள்)
பிரிவு 3 – முயற்சி, பொருள் பற்றியது (8 இயல்கள்)
பிரிவு 4 – அரசர், அமைச்சர், பாடல் பற்றியது (6 இயல்கள்)
பிரிவு 5 – இல்வாழ்க்கை , உறவினர், வீடுநெறி பற்றியது (4 இயல்கள்)