fbpx
  • No products in the basket.

2.2 வாணிதாசன்

இயற்பெயர் : எத்திராசலு (எ) அரங்கசாமி

பெயர் : வாணிதாசன்

பிறந்த இடம் :புதுவையை அடுத்த வில்லியனூர்

பெற்றோர் : அரங்க திருக்காமு – துளசியம்மாள்

துணைவி : ஆதிலட்சுமி

தாய்மொழி : தெலுங்கு


சிறப்பு பெயர்கள்

· புதுமைக் கவிஞர்

· பாவலரேறு

· பாவலர் மணி

· பாவலர் மன்னன்

· தமிழ்நாட்டுத் தாகூர் (மயிலை சிவமுத்து)

· தமிழ்நாட்டு வோர்ட்ஸ்வொர்த்

· புனைப்பெயர்

· ரமி


நூல்கள்

· எழிலோவியம்

· தீர்த்த யாத்திரை

· இன்ப இலக்கியம்

· பொங்கல் பரிசு

· இரவு வரவில்லை

· சிரித்த நுணா


கவிதைகள்

· பாட்டரங்கப் பாடல்கள்

· இனிக்கும் பாட்டு

· எழில் விருத்தம் (விருதப்பாவிற்கு இலக்கணமாய்த் திகழ்வது)

· பாட்டு பிறக்குமடா (தமிழக அரசு பரிசு)

· குழந்தை இலக்கியம்

· பெரிய இடத்து செய்தி (மாப்பசானின் சிறுகதையை தமிழில் மொழிபெயர்த்தது)

· காதல் எங்கே (விட்டர் விகோவின் ஆன்ழெல்லோ)

· விதவைக்கொரு செய்தி


தொடர்கதைகள்

· வாழ்க்கை

· பட்டிக்காட்டுப் பெண்

· கட்டுரைகள்

· கருங்காலம்

· கவிதையில் வினாவும் விடையும்

· காப்பியங்கள்

· கொடிமுல்லை

· தமிழச்சி


· இவர் பாவேந்தர் பாரதிதாசனிடம் தொடக்கக்கல்வி பயின்றவர்.

· இவரின் பாடல்கள் சாகித்திய அகாதெமி வெளியிட்ட “தமிழ்க் கவிதைக் களஞ்சியம்” என்ற நூலிலும், தென்மொழிகள் புத்தக வெளியீட்டுக் கழகம் வெளியிட்ட “புதுதமிழ்க் கவிமலர்கள்” என்ற நூலிலும் மற்றும் பற்பல தொகுப்பு நூல்களிலும் இடம் பெற்றுள்ளன.

· உருசியம், ஆங்கிலம் முதலிய மொழிகளில் இவர் பாடல்கள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன

· தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய மொழிகளில் வல்லுநர்

· இவர், “தமிழ்-பிரெஞ்ச் கையகர முதலி” என்ற நூலை வெளியிட்டார்.

· பிரெஞ்ச் குடியரசு தலைவர் இவருக்கு “செவாலியர்” என்ற விருதினை வழங்கி உள்ளார்

· இவரின் முதல் பாடல் பாரதி நாள் இன்றடா! பாட்டிசைத்து ஆடடா!

· தான் வாழ்ந்த வீட்டிற்கு “புரட்சி அகம்” எனப் பெயரிட்டார்

· இவரது ‘விதவைக்கொரு செய்தி’ என்ற கவிதை ‘திராவிட நாடு’ இதழில் வெளிவந்து இவருக்குப் பெரும் புகழைப் பெற்றுத் தந்தது.

· இவர் எல்லப்ப் வாத்தியார், முத்துக்குமார சுவாமி பிள்ளை, பாரதிதாசன் மற்றும் முடியரசன் ஆகியோரிடம் தமிழ் கற்றவர்.

· 1950 ஆம் ஆண்டு பாரதிதாசன் நடத்திய “அழகின் சிரிப்பு” என்ற கவியரங்கு நிகழ்ச்சியில் முடியரசன் முதல் பரிசையும், வாணிதாசன் 2-வது பரிசையும் வென்றனர்.

 

TNPSC Materials

Group 1 Courses

© TNPSC.Academy | All Rights Reserved.
Click to Download
close-image