fbpx
 • No products in the basket.

2.1 இத்தொடரால் குறிக்கப்பெறும் சான்றோர்

பகுதி அ - இலக்கணம் - தொடரும் சான்றோர்களும் இப்பகுதில் இருந்து புகழ்பெற்ற சான்றோர்களின் (கவிஞர்கள்,புலவர்கள்,ஆன்மீகவாதிகள்) வார்த்தைகள் அல்லது கவிதை வரிகள் அல்லது தத்துவங்களை கொடுத்து அது யாருடையது என்பது போற்ற கேள்விகள் TNPSC தேர்வுகளில் கேட்டகப்படுகிறது. அதற்கேற்றவாறு இந்த அலகில் மிக முக்கியாமான தொடர்களும் அதை கூறியவர்களையும் கொடுத்துள்ளோம். மேலும் சில தலைவர்களை பற்றி பின் வரும் பகுதி ஆ மற்றும் இ யில் பயில்வீர்கள். அதில் இருந்தும் இந்த மாதிரியான கேள்விகள் கேட்கப்படலாம்.

பாரதியார்

 • அச்சமில்லை   அச்சமில்லை அச்சமென்பதில்லையே
 • ஓடி   விளையாடு பாப்பா
 • வள்ளுவன்   தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் தந்த தமிழ்நாடு
 • யாமறிந்த   மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்
 • நல்லதோர்   வீணை செய்தே – அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
 • மாதர்   தம்மை இழிவு செய்யும் மடமையை கொளுத்துவோம்
 • தனியொருவனுக்கு   உணவில்லையேல் ஜகத்தினை அழித்திடுவோம்
 • எல்லோரும்   இந்நாட்டு மன்னர்கள்
 • பெண்   விடுதலை வேண்டும்
 • மனதில்   உறுதி வேண்டும்
 • காதல்   காதல் காதல் காதல் போயின் சாதல் சாதல் சாதல்


பாரதிதாசன்

 • எங்கள்   வாழ்வும் எங்கள் வளமும்
 • மங்காத   தமிழ் என்று சங்கே முழங்கு
 • புதியதோர்   உலகம் செய்யோம்
 • நல்லதோர்   குடும்பம் பல்கலைக்கழகம்
 • பாரடா   உன் மானிட சமுத்திரத்தை
 • இருட்டறையில்   உள்ளதடா உலகம்
 • தமிழுக்கு   அமுதென்று பேர்
 • பெண்ணடிமை   தீருமட்டும் பேசுந்திருநாட்டு
 • மண்ணடிமை   தீர்ந்து வருதல் முயற் கொம்பே


நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளை

 • கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்ரு வருகுது
 • கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள் கவலை
 • உனக்கில்லை ஒத்துக்கொள்
 • காந்தீயக் கவிஞர்
 • தமிழன் என்றோரு இனமுண்டு தனியே அவர்க்கொரு குணமுண்டு


கண்ணதாசன்

 • சாவே உனக்கொரு நாள் சாவு வந்து சேராதோ
 • வீடுவரை உறவு வீதிவரை மனைவி
 • கண்ணிலே நீரெதற்கு காலமெல்லாம் அழுவதற்கு
 • மழை கூட ஒரு நாளில் தேனாகலாம்


கணியன்   பூங்குன்றனார்

 • யாதும் ஊரே யாவரும் கேளிர்

          தீதும் நன்றும் பிறர்தர வாரா


இராமலிங்க அடிகளார் (வள்ளலார்)

 • வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்
 • அருட்பெருஞ் ஜோதி தனிப்பெருங்கருணை


ஒளவையார்

 • அறம்   செய விரும்பு, ஆறுவது சினம், ஏற்பது இகழ்ச்சி, ஐயமிட்டு உண்
 • கற்றது   கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு
 • அரிது   அரிது மானிடராதல் அரிதுஅன்னையும்   பிதாவும் முன்னறி தெய்வம்
 • குற்றம்   பார்க்கின் சுற்றமில்லை
 • சித்திரமும்   கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
 • பசிவந்திடப்   பத்தும் பறக்கும்


கவிமணி   தேசிய விநாயகம் பிள்ளை

 • மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல மாதவஞ்செய்திட வேண்டுமம்மா


குமரகுருபரர்

 • கல்வி   அழகே அழகு


திருமூலர்

 • ஒன்றே குலம் ஒருவனே தேவன்
 • உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேன்
 
© TNPSC.Academy | All Rights Reserved.
 😎 Our Students! - 236 (Gr 2 & 2A) & 56 (Group 4)
Join New Batch
close-image