fbpx
  • No products in the basket.

18.2. தொல்லியல் ஆய்வுகள்

· மனிதன் நாடோடியாக வாழ்ந்த காலத்தில் இருந்து வரலாற்றுக்கு முந்திய காலம் வரை இருந்த காலமே தொன்மைக் காலம் ஆகும்.

· தொன்மைக்காலத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை முறை, தொழில்கள், வணிகம் மற்றும் இன்னும்பிற போன்றவைகளை ஆராய்வதே தொல்லியலாகும்.

· அரிக்கமேடு, திருப்பரங்குன்றம், ஆதிச்சநல்லூர் போன்ற இடங்களில் நடந்த தொல்லியல் ஆய்வுகள் மிகவும் பயனுள்ளதாக இருந்தன.

· பூம்புகார் என்ற இடத்தில் நடைபெற்ற ஆய்வின் மூலம் காவிரிப்பூம்பட்டினம் இருந்ததை அறியமுடிந்தது.

· அகழ்வாய்வின் போது எந்திரங்கள் பயன்படுத்தாமல் மிக மிகப் பொறுமையாக அதனைச் செய்வர்.

· பல்வேறு காலகட்டங்களில் மக்கள் பயன்படுத்திய பொருட்கள் கிடைப்பதைக் கொண்டு அதனை ஆராய்ச்சி செய்து அந்த நாகரிகங்களை அறிவர்.

· தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் 1876 மற்றும் 2003-ல் நடைபெற்ற ஆராய்ச்சியின் போது பல்வேறு முதுமக்கள் தாழிகள் கிடைத்தன.

· அதனுள் இறந்தவர்களின் எழும்புகள், செம்பினால் செய்யப்பட்ட ஆண், பெண் தெய்வ உருவங்கள், தங்க நெற்றிப்பட்டைகள் முதலானவை கண்டுபிடிக்கப்பட்டன. இவை கி.மு.300 முதல் கி.பி.300 வரையிலானவை.

 

TNPSC Materials

Group 1 Courses

© TNPSC.Academy | All Rights Reserved.
Click to Download
close-image