• No products in the basket.

18. தன்வினை, பிறவினை, செய்வினை, செயப்பாட்டு வினை

தன்வினைவாக்கியம்

கருத்தா தானே செய்யும் செயலை உணர்த்துவது தன்வினை வாக்கியமாகும்.

நான் பாடம் படித்தேன்

அரசன் ஆணையிட்டான்

இராமன் பள்ளிக்கு சென்றான்

பிறவினைவாக்கியம்

கருத்தா பிறரைக் கொண்டு தொழிலைச் செய்வது பிறவினை எனப்படும்

கற்றான் –  கற்பித்தான்

உருண்டான்  –  உருட்டினான்

எழுந்தான்  –  எழுப்பினான்

தீ எரிந்தது  –  தீ எரித்தது

திருந்தினான்  –  திருத்தினான்

செய்வினைவாக்கியம்

எழுவாய், செயப்படுபொருள், பயனிலை என்ற வரிசையில் வாக்கியம் அமைதல் வேண்டும்.

செயப்படு பொருளோடு ‘ஐ’ என்னும் இரண்டாம் வேற்றுமை உருபு சேர்ந்து வரும்

மறைந்தும் வரலாம்

· ஆசிரியர் இலக்கணம் கற்பித்தார்

· நான் பாடல் இயற்றினேன்

· உழவர் நெற்பயிரை வளர்த்தனர்

· கரிகாலன் கல்லணையைக் கட்டினான்

· பாண்டியன் கதவைத் தட்டினான்

· இந்திய அறிவியல் அறிஞர்கள் செயற்கைக்கோளைச் செலுத்தினர்

· தலைவன் ஒரு நாட்டை உயர்த்தினான்

செயப்பாட்டுவினைவாக்கியம்

செயப்படுபொருள், எழுவாய், பயனிலை என்ற வரிசையில் வாக்கியம் அமைய வேண்டும்

எழுவாயோடு ‘ஆல்’ என்னும் மூன்றாம் வேற்றுமை உருபு சேர்க்க வேண்டும்

பயனிலையோடு படு, பட்டது என்ற துணை வினைகளைச் சேர்க்க வேண்டும்

· வகுப்பு மாணவர்களால் தூய்மை செய்யப்பட்டது

· இலக்கணம் ஆசிரியரால் கற்பிக்கப்பட்டது

· பாட்டு என்னால் பாடப்பட்டது

· நாடகம் மக்களால் பார்க்கப்பட்டது

· மழைநீர் மக்களால் சேமிக்கப்பட்டது

· பரிசில் அரசனால் வழங்கப்பட்டது

 

TNPSC Books

Group 1 Courses

© TNPSC.Academy | All Rights Reserved.