fbpx
  • No products in the basket.

17.5. இராணி மங்கம்மாள்

· மதுரை சொக்கநாத நாயக்கரின் மனைவியான இவர் மதுரை நாயக்கர் பரம்பரையைச் சேர்ந்தவர் ஆவார்.

· இவரது காலம் 1689 – 1706 ஆகும்.

· தனது மகன் ரங்க கிருஷ்ண முத்து வீரப்ப நாயக்கர் இறந்த போது அவரது மனைவி முத்தம்மாள் கருவுற்றிருந்தார்.

· ஆண் மகவை ஈன்ற அவரும் தற்கொலை செய்து கொள்ளவே அக்குழந்தைக்கு “விஜய்ரங்க சொக்க நாத நாயக்கர்” என்று பெயரிட்டார்.

· தனது பேரக்குழந்தையை சிம்மாசனத்தில் அமர்த்தி பாதுகாவலராக பாட்டி மங்கம்மாள் இருந்தார். இவரே இராணிமங்கம்மாள் ஆவார்.

· இவர் தனது ஆட்சிக்காலத்தில் பெரும் செயல்கள் பலவற்றைச் செய்தார்.

· 1700-ல் தஞ்சை மீது போர் தொடுத்தார்.

· அப்போது ஆட்சி செய்த மராட்டிய மன்னன் பெரும் பொருள் கொடுத்து ஆட்சியைத் தக்கவைத்தான்.

· ஓளரங்கசீப்பின் தென்னாட்டுப் படையெடுப்பின் போது திரை செலுத்தி ஆட்சியை மீட்டார்.

· இராமநாதபுரத்தை ஆண்ட இரகுநாதசேதுபதி சுதந்திரமாக ஆள முற்பட்ட போது அவன்மீது படையெடுத்தார்.

· இவரது படைத்தளபதி நரசப்பையர் கொல்லப்பட்டதால் இவருக்கு தோல்வி ஏற்பட்டது.

· இந்து கோயில்களுக்கு மானியங்கள் வழங்கியதைப் போன்று முஸ்லீம் மசூதிகளுக்கும், கிறித்துவ ஆலயங்களுக்கும் மானியங்கள் வழங்கி சமயப்பொறை உணர்த்தினார்.

· தண்ணீர்பந்தல் அமைத்தல், அன்ன சத்திரம் அமைத்தல், மத்திய சந்தை, மதுரையில் உள்ள மங்கம்மாள் சத்திரம் என பல்வேறு அறப்பணிகளைச் செய்தார்.

· அக்காலத்தில் பெரும்பாலும் நடைப்பயணமாகவே இருந்த நிலையில் மக்கள் ஆங்காங்கே தங்கி இளைப்பாற சாலையின் இரு புறங்களிலும் மரங்களை வைத்தார்.

· “மங்கம்மாள் சாலை இரண்டு பக்கமும் சோலை”

o என்ற பழமொழி அதனை உணர்த்துவதாக உள்ளது.

· வீழ்ச்சியில் சென்ற மதுரை நாயக்கர் ஆட்சியை தனது தந்திரத்தால் 18 ஆண்டுகாலம் காப்பாற்றியவர்.

· இவரது இறப்பிற்குப் பின் 30 ஆண்டுகளில் மதுரை நாயக்கர் ஆட்சி அடியோடு மறைந்தது.

 

TNPSC Materials

Group 1 Courses

© TNPSC.Academy | All Rights Reserved.
Click to Download
close-image