TNPSC Books
-
TNPSC பொதுத் தமிழ் Book - for Group 2, 2A, 3, 4 & VAO
₹1,000.00Original price was: ₹1,000.00.₹850.00Current price is: ₹850.00. -
TNPSC General English Book - for Group 2 & 2A
Rated 5.00 out of 5₹1,000.00Original price was: ₹1,000.00.₹850.00Current price is: ₹850.00.
Group 1 Courses
Group 1 | Postal and Online Test Series | 2022
₹3,200.00Original price was: ₹3,200.00.₹2,800.00Current price is: ₹2,800.00. 88TNPSC Group 1 - Test Series - 2019
4.7₹3,500.00Original price was: ₹3,500.00.₹2,800.00Current price is: ₹2,800.00. 542
Group 2 & 2A Courses
TNPSC Group 2 and 2A - Test Series - 2019
₹2,400.00Original price was: ₹2,400.00.₹1,800.00Current price is: ₹1,800.00. 527TNPSC Group 2 and 2A - Test Series - 2019 - தமிழ்
₹2,400.00Original price was: ₹2,400.00.₹1,800.00Current price is: ₹1,800.00. 175












பெயரைக் குறிக்கும் சொல் பெயர்ச்சொல் ஆகும்.
எடுத்துக்காட்டு -மரம், செடி, பூ, சூரியன்.
பெயர்ச்சொல் ஆறு வகைப்படும்.
1. பொருட்பெயர்
2. இடப்பெயர்
3. காலப்பெயர்
4. சினைப்பெயர்
5. குணப்பெயர் (அல்லது) பண்புப்பெயர்
6. தொழிற்பெயர்
1. பொருட்பெயர்
பொருளை குறிக்கும் பெயர் பொருட்பெயர்.
எடுத்துக்காட்டு -மரம், செடி, மின்விசிறி, நாற்காலி.
2. இடப்பெயர்
இடத்தைக் குறிக்கும் பெயர் இடப்பெயர்.
எ.கா. -உலகம், ஆசியா, இந்தியா, தமிழ்நாடு, சென்னை.
3. சினைப்பெயர்
சினை என்றால் உறுப்பு என பொருள்படும். உறுப்பை குறிக்கும் பெயர் சினைப்பெயர்.
மரம் -பொருட்பெயர்.
இரை, தண்டு, வேர் போன்றவை அதன் உறுப்புகள். எனவே இவை சினைப்பெயர்கள் ஆகும்.
உடல் -பொருட்பெயர்
கண், காது, மூக்கு, கை என்பவை சினைப்பெயர்கள்.
4. காலப்பெயர்
காலத்தை குறிக்கும் பெயர் காலப்பெயர் எனப்படும்.
திங்கள், செவ்வாய், நாள், வாரம், ஆண்டு, காலை, மாலை ஆகியவை காலப்பெயர்கள்.
5. பண்புப் பெயர்
ஒரு பொருளின் பண்பு அல்லது தன்மை அல்லது அதன் குணத்தை குறிப்பது பண்புப்பெயர்.
எடுத்துக்காட்டு –
பச்சை இலை, சிவப்பு மை பண்புப்பெயர். உ, கு, றி, று, அம், சி, பு, ஜ, மை, பம், நர் என்ற விகுதியுடன் முடியும் (மை அதிகமாக இடம்பெறும்.)
6. தொழிற்பெயர்
தொழிலைக் குறிக்கும் பெயர் தொழிற்பெயர்.
எ.கா. -படித்தல், ஓடுதல், நடத்தல், தல், அல், அம், ஐ, கை, வை, பு, வு, தி, சி, வி, உள், காடு, பாடு, அரவு, ஆணை, மை, து என்ற விகுதியுடன் முடியும்.
ஓங்குதல், சாக்காடு, வெறுக்கை, தருக்கல், காண்பு, ஒருவுதல், மனம் கவல்வு, செய்கை, இகழ்தல், உணர்வு, கொலல், நந்தம், நீட்டம், ஆண்மை, பெருக்கல், ஒழுக்கு, உண்டி, செய்தல், கொடுமை, உரைத்தல், காண்பு, நல்குரவு, கடத்தல்.
தொழிற்பெயரின் வகைகள் :
சொற்கள் புணரும் போது தொழிற்பெயரை இரு வகையாக பிரிக்கலாம்.
1. முதனிலை தொழிற் பெயர்
2. முதனிலை திரிந்த தொழிற் பெயர்
1. முதனிலை தொழிற் பெயர் :
முதனிலை தொழிற் பெயர் என்பது தொழிற்பெயரின் பகுதி ஒன்று மட்டும் விகுதி இல்லாமல் வருவதாகும்.
எ.கா :
தொழிற்பெயர் முதனிலை தொழிற் பெயர்
1. வாழ்தல் வாழ்
2. கெடுதல் கெடு
2. முதனிலை திரிந்த தொழிற் பெயர் :
முதனிலை திரிந்த தொழிற் பெயர் என்பது விகுதி கெட்டு பகுதி மட்டும் திரிந்து வருவது ஆகும்.
எ.கா :
தொழிற்பெயர் முதனிலை திரிந்த தொழிற்பெயர்
1. பெறுதல் – பேறு
2. கெடுதல் – கேடு
உலகப் பெயர்கள் இடுகுறிப் பெயர்கள் மற்றும் காரணப்பெயர்கள் என இருவகைப்படும்
இடுகுறிப்பெயர்கள்
காரணமின்றி வழங்குவது இடுகுறிப்பெயர் ஆகும்.
மனிதன், மரம், செடி, கொடி – இடுகுறி பொதுப்பெயர்
தென்னை, வாழை – இடுகுறி சிறப்புப்பெயர்
காரணப்பெயர்
காரணம் கருதி வழங்குவது காரணப்பெயர் ஆகும்.
பறவை, அணி – காரணப் பொதுப்பெயர்
கிளி, பருந்து, தோடு, வளையல் – காரணச் சிறப்புப்பெயர்
ஆகுபெயர்
ஒரு பொருள் அதனைக் குறிக்காமல் அதனோடு தொடர்புடைய வேறொரு பொருளுக்கு ஆகி வருவது ஆகுபெயர் எனப்படும்.
இடவாகுபெயர்
ஊர் சிரித்தது
உலகு மகிழ்ந்தது
பொருளாகுபெயர்
பூசணிச் சாம்பார்
மல்லிகை சூடினாள்
பண்பாகுபெயர்
வீட்டிற்கு வெள்ளை அடித்தான்
வயலில் பயிலை உழுகின்றது
காலவாகுபெயர்
கார் அறுத்தான்
டிசம்பர் சூடினாள்
சினையாகுபெயர்
வெற்றிலை நட்டான்
தொழிலாகுபெயர்
பொங்கல் உண்டான்
சுண்டல் தின்றான்
அளவையாகுபெயர்
உடுப்பவை இரண்டு முழம்
நான்கு மீட்டர் கொடு
கருத்தாஆகுபெயர்
திருவள்ளுவரைப்படித்தான்
சுஜாதா கதைகள்