fbpx
  • No products in the basket.

13.2. அண்ணாதுரை

· காஞ்சிபுரத்தில் நடராஜ முதலியார், பங்காரு அம்மாள் என்பவர்களுக்கு மகனாகப் பிறந்தார்.

· பிறப்பு 15-09-1909

· இறப்பு 03-02-1969 (மதியம் 12:20 மணிக்கு)

· தனது சிற்றன்னை அவர்களின் கண்காணிப்பில் கனிவும், கண்டிப்போடும் வளர்க்கப்பட்டார்.

· 1930-ல் ராணி அம்மையாரை மணம் முடித்தார்.

· காஞ்சிபுரம் பச்சையப்பன் பள்ளியில் பள்ளிப்படிப்பையும், பின்பு சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் 1934-ல் பொருளாதாரம் (முதுகலைப் பட்டம்) பயின்றார்.

· இவரது சங்க இலக்கிய ஈடுபாட்டிற்கு தமிழ்ப் பேராசிரியர் மோசூர் கந்தசாமியும், மணி திருநாவுக்கரசும் மற்றும் பொது வாழ்க்கை அறிமுகமாவதற்கு ஆங்கிலப் பேராசிரியர் வரதராஜன் என்பவர்களே காரணமாகும்.

· 1934-ல் சென்னை மேயராக இருந்த நீதிக்கட்சியை சேர்ந்த சி.பாசுதேவ் என்பவரது ஆங்கிலப் பேச்சை தமிழில் மொழி பெயர்க்கும் பெறுப்பைப் பெற்றார்.

· பாலபாரதி இதழை நடத்தும் பொறுப்பையும், நவயுகம் என்ற இதழுக்கு துணை ஆசிரியராகவும் இருந்தார்.

· அண்ணாதுரையும், பெரியாரும் முதன்முதலாக சந்தித்துப் பேசிக்கொள்ள திருப்பூரில் 1935-மே-20, 21-ல் நடைபெற்ற செங்குந்தர் இளைஞர் மாநாடு காரணமாக அமைந்தது.

· 1936-ல் சென்னை மாநகராட்சி தேர்தலில் பெத்துநாயக்கன் பேட்டைத் தொகுதியில் நீதிக்கட்சியின் சார்பில் போட்டியிட்டார்.

· 1937-ல் சுயமரியாதை மாநாட்டிற்கு தலைமை வகித்தார்.

· பெரியாரின் குடியரசு, விடுதலை என்ற இதழ்களுக்கு முழுநேர ஆசிரியராகப் பொறுப்பேற்றார்.

· 1941-ல் ஹரித்துவாரில் பெரியார் இராமாயணம் பற்றி சிரத்தானந்தா கல்லூரி மாணவர்களிடையே பேசியதை அண்ணா ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்.

· 1942-ல் பெரியாரை விட்டுப் பிரிந்து காஞ்சிபுரத்தில் “திராவிட நாடு” என்ற இதழைத் தொடங்கினார்.

· தனது புரட்சிக் கருத்துக்களை ஓர் இரவு, வேலைக்காரி, பாவையின் பயணம், குமாஸ்தாவின் பெண், சந்திரோதயம், சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம், கொலைகாரியின் குறிப்புகள், நீதிதேவன் மயக்கம் என்பன போன்றவற்றின் மூலம் பரப்பினார்.

· இதிலிருந்த கருத்துக்களைப் படித்த கல்கி கிருஷ்ணமூர்த்தி இவரை “ஜெர்மனியின் நாடகமேதை இப்சனோடு” ஒப்பிட்டார்.

· அறிஞர் என்ற பட்டத்தை பாரதிதாசன் இவருக்கு சூட்டினார்.

· நீதிக்கட்சியின் தலைவராக பெரியாரும், பொதுச்செயலாளராக அண்ணாவும் இருந்தனர்.

· 1943-ல் திருச்சி மாநாட்டிற்கு இவரைத் தலைமை தாங்கும் படி பெரியார் செய்தார். இதனால் டாக்டர்.வரதராஜுலு இவரை நீதிக்கட்சியின் மூளை என்று வர்ணித்தார்.

· பெரியார் துக்க நாளாக அறிவித்த இந்திய சுதந்திர நாளை 15-08-1947 இன்ப நாளாக அறிவித்தார்.

· பெரியாருடன் கருத்து வேறுபாடு கொண்ட இவர் 17-09-1949-ல் திராவிடர் கழகத்தில் இருந்து வெளியேறி திராவிடர் முன்னேற்றக் கழகம் (தி.மு.க) என்பதை ஆரம்பித்தார்.

· மேலே கருப்பு, கீழே சிவப்பு வண்ணத்தில் அதன் கொடி இருந்தது.

· அண்ணா பொதுச்செயலாளர் ஆனார். தொடக்க விழா சென்னை ராபின்சன் பூங்காவில் நடைபெற்றது.

· கட்சி மிக வேகமாக வளர்ந்ததை கண்ணதாசன் ‘ஓர் அரசியல் கட்சி இவ்வளவு விரைவாக வளர்ந்ததற்கான சான்று வரலாற்றில் இல்லை’ என்று கூறினார்.

· 1950-ல் அண்ணாவின் ஆரிய மாயை என்ற நூலுக்கு திமுக தொடங்கப்பட்ட போது முதல்வராக இருந்த குமாரசாமி ராஜா தடைவிதித்து அண்ணாவின் வளர்ச்சியை ஏற்படுத்தினார்.

· பிறகு முதல்வரான ராஜாஜி ‘குலக்கல்வித் திட்டம்’ கொண்டு வர அதனை அண்ணா எதிர்த்தார். இதனால் ராஜாஜி பதவி விலக நேரிட்டது.

· அதன் பின் முதல்வரான காமராசர் தமிழ்நாடு என்ற பெயர் மாற்றத்திற்கு போதுமான அளவு சட்டவடிவம் தராததால் அண்ணா அதனை தனது கட்சி வளர்ச்சிக்குப் பயன்படுத்தினார்.

· பக்தவச்சலம் முதல்வராக இருந்த காலத்தில் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் மூலம் வரலாறு காணாத செல்வாக்கை திமுக பெற்றது எனலாம்.

· 1967-ல் நடந்த பொதுத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றது, அண்ணா ஆட்சி அமைத்தார்.

· அரசு அலுவலகங்களில் கடவுள் படங்கள் இருக்கக் கூடாது என்று ஆணை பிறப்பித்தார்.

· 14-01-1969-ல் சென்னை மாகாணம் என்பதனை சட்டப் பூர்வமாக “தமிழ்நாடு” என்று அறிவித்தார்.

· போக்குவரத்தை நாட்டுடைமை ஆக்கியது, ஏழைகளுக்கு நிலப்பட்டா வழங்கல், ஒரு ரூபாய்க்கு ஒருபடி அரிசி திட்டம், ஜமீன் ஒழிப்புத் திட்டம், தொழில் பெருக்கத்திற்கு ஊக்கம், வீராணம் குடிநீர்த் திட்டம் போன்றவற்றை உருவாக்கினார்.

· இவரது காலத்தில் இரண்டாவது உலகத்தமிழ் மாநாடு சென்னையில் நடைபெற்றது.

· மதுவிலக்கை இறுதிவரை கடைபிடித்தார்.

· இவருடையதம்பிக்கு என்ற தலைப்பில் எழுதிய கடிதம், ரங்கோன் ராதா நாவல் இரண்டும் புகழ்பெற்றவை ஆகும்.

· இவர் நடிகர், நாடக ஆசிரியர், சிறுகதை, நாவல் ஆசிரியர், திறனாய்வாளர், பேச்சாளர், சிறந்த நிர்வாகி எனப் பல்வேறு பரிணாமங்களில் திகழ்ந்தார்.

· 1968-ல் இவருக்குப் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார்.

· மருத்துவர்களின் ஆலோசனையும் மீறி 02-12-1968-ல் தமிழ்நாடு பெயர்சூட்டு விழாவில் பங்கேற்றார்.

· 14-01-1969-ல் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் சிலை திறப்பு விழாவில் பங்கேற்று உரை நிகழ்த்தினார். இதுவே இவரது இறுதிப் பொதுநிகழ்ச்சி ஆகும்.

· இவரது இறுதி ஊர்வலத்தில் கின்னஸ் புத்தகத்தில் பதிவு செய்யப்படும் அளவிற்கு ஒன்றரை கோடி மக்கள் கலந்து கொண்டனர்.

· 1985-ல் தமிழக அரசால் “அண்ணா விருது” தொடங்கப்பட்டது.

· இவரது பெயரைக் கொண்டு எம்.ஜி.ஆர் “அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்” என்பதைத் தொடங்கினார்.

 
© TNPSC.Academy | All Rights Reserved.
Online Live Class

Group 2 & 2A - New Batch

Online Class + Books + Test Series
Click for More Details
WhatsApp: +91-7904003050
close-link