fbpx
  • No products in the basket.

12.2. வீரமாமுனிவர்

· இயற்பெயர் கான்ஸ்டாண்டியஸ் ஜோசப் பெஸ்கி

· இத்தாலி நாட்டிலுள்ள காஸ்திக்கிரியோனில் கொண்டல் போபெஸ்கி, எலிசபெத் என்பவர்களுக்கு மகனாகப் பிறந்தார்.

· பிறப்பு 1680 இறப்பு 1746.

· இவர் தமது 30-வது வயதில் தமிழகத்திற்கு வந்தார்.

· இவரது ஆசிரியர் சுப்பிரதீபக் கவிராயர் ஆவார்.

· இவர் தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம், இலத்தீன், கிரேக்கம், இத்தாலியம் மற்றும் எபிரேயம் ஆகிய மொழிகளைக் கற்றவராகத் திகழ்ந்தார்.

· திருச்சி சந்தா சாகிப் என்பவரிடம் திவானாகப் பணிபுரிந்தார்.

· இவர் தமிழ் அகராதியின் தந்தை எனப்படுகிறார்.


இவரது படைப்புகள்

· தமிழின் முதல் அகராதி நூல் சதுரகராதி என்பதே ஆகும். இது சதுர் பிரிவுகளான நான்கினையும் (பெயர், பொருள், தொகை, தொடை) கொண்டுள்ளது.

· தமிழர்கள் பாராட்டக்கூடிய அளவில் தேம்பாவணி நூலை இயற்றியவர்.

· திருக்குறளின் முதல் இரு பிரிவுகளான அறம், பொருள் இரண்டையும் இலத்தீன் மொழியில் மொழிபெயர்த்துள்ளார்.

· தமிழ் – இலத்தீன் அகராதி

· போர்ச்சுக்கல் – தமிழ் அகராதி இரண்டையும் இயற்றியவர்.

· தொன்னூல் விளக்கம் - ஐந்திலக்கண விளக்க நூலாகும்.

· இது குட்டித்தொல்காப்பியம் என்று பாராட்டப்படுகிறது.

· பரமார்த்த குருகதை என்பது தமிழின் முதல் ஏளன நூலாகும்.

· வேதியர் ஒழுக்கம், வேத விளக்கம் என்ற உரைநடை நூல்களையும் எழுதியுள்ளார்.

· கொடுந்தமிழ் இலக்கணம் என்ற பேச்சுத்தமிழ் இலக்கண நூலையும் எழுதியுள்ளார்.

· கித்தேரியம்மன் அம்மானை, திருக்காவலூர் கலம்பகம், அடைக்கல நாயகி அம்மானை, கருணாம்பாப் பதிகம், அன்னை அழுங்கல் அந்தாதி என்ற சிற்றிலக்கிய நூல்களையும் எழுதியுள்ளார்.

 

TNPSC Materials

Group 1 Courses

© TNPSC.Academy | All Rights Reserved.
Click to Download
close-image