10.7. ஆண்டாள்

· பிறந்த ஊர் ஸ்ரீவில்லிபுத்தூர்

· பெரியாழ்வாரின் வளர்ப்பு மகள்

· இவர் பூமகள் அம்சமாகப் பிறந்தவர்

· இவர் துளசி வனத்தில் கண்டெடுக்கப்பட்டார்

· இவருக்கு பெரியாழ்வார் இட்ட பெயர் கோதை

· இறைவனுக்கும் ஆண்டாளுக்கும் திருமணம் நடைபெற்ற இடம் : திருவரங்கம்

· இவரின் பாடல்களைப் “பள்ளமடை” என்றும், பிற ஆழ்வார்களின் பாடல்களை “மேட்டுமடை” என்றும் குறிப்பிடுவர்

திருப்பாவை:

· திருப்பாவையை “வேதம் அனைத்திற்கும் வித்து” என்றவர் இராமானுஜர்

· நாலாயிர திவ்வியப் பிரபந்தத் தொகுப்பில் மூன்றாவது பிரபந்தமாக வைக்கப்பட்டிருப்பது திருப்பாவை.

· பாவை என்பது சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று.

· பாவை என்பது இருமடியாகு பெயர்.

· திருப்பாவை பாக்கள் முப்பதும் வெண்டளையால் வந்த எட்டடி நாற்சீர் கொச்சகக் கலிப்பா வகையை சார்ந்தவை.

· இவரின் திருப்பாவை, பாவை நூல்களில் காலத்தால் முற்பட்டது.

· திருப்பாவைக்கு ஆண்டாள் இட்ட பெயர் சங்கத் தமிழ் மாலை முப்பது

சிறப்பு பெயர்:

· கோதை(பெரியாழ்வார் இட்ட பெயர்)

· சூடிக்கொடுத்த சுடர்க்கொடி

· நாச்சியார்

· ஆண்டாள்

படைப்புகள்:

· திருப்பாவை

· நாச்சியார் திருமொழி

மேற்கோள்:

கற்பூரம் நாறுமோ! கமலப்பூ நாறுமோ?

திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்து இருக்குமோ?

மறுப்பு ஒசித்த மாதவன்தன் வாய்ச்சுவையும் நாற்றமும்

விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல் ஆழிவெண்சங்கே!

வாரணம் ஆயிரம் சூழ வளஞ்செய்து

நாரணன் நம்பி நடக்கின்றான் என்று

மானிடவர்க்கு என்று பேச்சுப் படின்

வாழகில்லேன் கண்டாய் மன்மதனே

நாராயணனே நமக்கே பறைதருவான்

 

TNPSC Books

Group 1 Courses

© TNPSC.Academy | All Rights Reserved.