fbpx
  • No products in the basket.

10.5. திருமூலர்

பெயர்: திருமூலர்

குலம்: இடையர்

பூசை நாள்: ஐப்பசி அசுவினி

அவதாரத் தலம்: சாத்தனூர்

முக்தித் தலம்: திருவாவடுதுறை


முக்கிய சொற்றொடர்கள்:

· ஒன்றே குலம் ஒருவனே தேவன்

· ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள்

நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந்தான் ஐந்து

வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச்

சென்றனன் தானிருந் தானுணர்ந் தேட்டே

· அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்

அன்பே சிவமாவது யாரும் அறிகிலார்

அன்பே சிவமாவது யாரும் அறிந்தபின்

அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே

· படமாடக் கோயில் பகவற்குஒன்று ஈயில்

நடமாடக் கோயில் நம்பர்க்கு ஆங்கு ஆகா

· ஊணுடம்பு ஆலயம் உள்ளம் பெருங்கோயில்

என்பன இவரது வரிகளாகும்.


நூல்கள்

· திருமூலர் காவியம் 8000

· சிற்பநூல் 1000

· சோதிடம் 300

· மாந்திரீகம் 600

· வைத்தியச் சுருக்கம் 200

· சூக்கும ஞானம் 100

· சல்லியம் 1000

· பெருங்காவியம் 1500

· யோக ஞானம் 16

· காவியம் 1000

· தீட்சை விதி 100

· ஆறாதாரம் 64

· கருங்கிடை 600

· கோர்வை விதி 16

· பச்சை நூல் 24

· விதி நூல் 24

· தீட்சை விதி 18

· திருமந்திரம் 3000

· பத்தாம் திருமுறையான திருமந்திரத்தை இயற்றியவர்.

· பசுவின் துயர் நீக்க வேண்டி மூலன் என்னும் இடையனின் உடலில் கூடுவிட்டுக் கூடு பாய்ந்தார். மூலன் உடலில் இருந்தமையால் திருமூலர் எனப்பட்டார்.

· ஆண்டுக்கு ஒருமுறை விழித்தெழுந்து ஒரு பாடல் வீதம் மூவாயிரம் பாடல்களைப் பாடினார்.

· கி.பி.6ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் திருமந்திரம் தோன்றியதாக நம்பப்படுகிறது. இதன் தொகுப்பே திருமந்திரம் ஆகும். இது 9 தந்திரங்கள் 232 அதிகாரங்களை உடையது.

· இதன் பாக்கள் பெரும்பாலும் உருவகங்களாகவே உள்ளன.

· “திருமந்திரமாலை” என்பது இவர் இட்ட பெயராகும்.

· 1 – 4 ஆம் தந்திரங்கள் சிவஞானத்தைப் பெறுவதற்கான சாதனங்கள்.

· 5 ஆம் தந்திரம் சைவ சித்தாந்த உண்மைகள்

· 6 – 9 ஆம் தந்திரங்கள் சிவஞானத்தால் பிறக்கும் நன்மைகள்

· திருமந்திரமே முதல் சித்த மருத்துவ நூலாகக் கருதப்படுகிறது.

· இந்நூல் கவிவிருத்தம் என்ற ஒருவகைச் செய்யுளால் எழுதப்பட்டவை.

· இந்நூல் ‘தமிழ் மூவாயிரம்’, ‘மூலன் மூவாயிரம்’ என்று அழைக்கப்படுகிறது.

 

TNPSC Materials

Group 1 Courses

© TNPSC.Academy | All Rights Reserved.
Click to Download
close-image