fbpx
  • No products in the basket.

10.4. மாணிக்கவாசகர்

வாழ்க்கை குறிப்பு:

இயற்பெயர் :  தெரியவில்லை

பெற்றோர்  :  சம்பு பாதசாரியார், சிவஞானவதியார்

ஊர்  :  பாண்டி நாட்டு திருவாதவூர்

வாழ்ந்த காலம்  :  32 ஆண்டுகள்

மார்க்கம்  :  ஞானம் என்னும் சன் மார்க்கம்

நெறி  :  ஞானம் நெறி

ஆட்கொள்ளப்பட்ட

இடம்  : திருப்பெருந்துறை

இறைவனடி

சேர்ந்த இடம்  :  சிதம்பரம்


படைப்புகள்:

· 8ஆம் திருமுறை  :  திருவாசகம், திருக்கோவையார்

· திருவெம்பாவை

· போற்றித் திருவகவல்


திருவாசகம்:

· தமிழ் வேதம்

· சைவ வேதம்


திருக்கோவையார்:

· திருசிற்றம்பலக்கோவை

· ஆரணம்

· ஏரணம்

· காமநூல்

· எழுத்து


வேறு பெயர்கள்:

· திருவாதவூரார்

· தென்னவன் பிரம்மராயன்

· அழுது அடியடைந்த அன்பர்

· வாதவூர் அடிகள்

· பெருந்துறைப் பிள்ளை

· அருள் வாசகர்

· மணிவாசகர்


சிறப்பு:

· மன்னனக்காக குதிரை வாங்க சென்ற பொது திருப்பெருந்துறை இறைவனால் ஆட்கொள்ளப்பட்டார்.

· இவருக்காக இறைவன் நரியை பரியக்கினார்.(பரி=குதிரை)

· பாண்டியன் மாணிக்கவாசகரை “கல்லைக்கட்டி வைகையில்” இட்ட பொது, கோபமுற்று வைகையில் வெள்ளப் பெருக்கை ஏற்படுத்தினான்.

· திருவாசகத்தை ஜி.யு.போப் ஆங்கிலத்தில் மொழிப் பெயர்த்துள்ளார்.

· இராமலிங்க அடிகள், திருவாசகத்தின் இனிமையை போற்றுகிறார்.

· தேன்கலந்து பால்கலந்து செழுங்கணித் தீஞ்சுவைகலந்து

ஊன்கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே

· இவர் பொருட்டே வந்தி என்ற கிழவியின் கூலி ஆளாய் இறைவன் பிட்டுக்கு மண் சுமந்தார். பாடல்களை இவர் சொல்ல இறைவனே எழுதினார்.

· புத்தர்களை ஊமையாக்கியது, புத்த அரசனின் ஊமை மகளைப் பேசவைத்தது போன்ற அற்புதங்களை செய்துள்ளார்.

· “திருவாசகம் ஒருகால் ஓதின் கருங்கல் மனமும் கரைந்துருகும்” – நால்வர் நான்மணிமாலை திருவாசகம்;

· திருவாசகத்தில், “தும்பி ஊதுதல், பொற்சுண்ணம் இடித்தல், தெள்ளேணம் கொட்டுதல், திருத்தோள் நோக்கம், பூவல்லி காதல், அம்மானை ஆடல்” முதலான நாட்டுப்புற விளையாட்டுகள் பாடல்களில் கூறப்பட்டுள்ளன.

· “திருவாசகத்திற்கு உருகார் ஒருவாசகத்திற்கும் உருகார்” என்ற பழமொழி உண்டாயிற்று.

· 51 தலைப்புகளில் 659 பாடல்கள் உள்ளன.

· திருவாசகத்திற்கு பேராசிரியர் உரை அளித்துள்ளார்.


திருக்கோவையார்:

· “பாவை பாடிய வாயால் கோவை பாடுக” என இறைவன் கேட்க மாணிக்கவாசகர் திருக்கோவையாரை பாடினார்.

· திருக்கோவையாரை, “திருசிற்றம்பலக்கோவை” எனவும் அழைப்பர்

· இந்நூலின் வேறு பெயர்கள் = ஆரணம், ஏரணம், காமநூல், எழுத்து இந்நூல் கட்டளை கலித்துறையால் பாடப்பட்டது.

· 400 பாடல்களைக் கொண்டது.

· கோவை நூல்களுள் காலத்தால் முற்பட்டது

· திருக்கோவையாருக்கு பண்டிதமணி கதிரேசஞ்செட்டியார் உரை வகுத்துள்ளார்.

· அரிமர்த்த பாண்டியனிடம் அமைச்சராக இருந்தவர்.

· மன்னனிடம் “தென்னவன் பிரம்மராயன்” என்னும் பட்டம் பெற்றார்.

· மாணிக்கவாசகர் சிவபெருமானைத் தலைவனாகக் கொண்டு 20 பாடல்களில் திருவெம்பாவை பாடினார்.

 

TNPSC Materials

Group 1 Courses

© TNPSC.Academy | All Rights Reserved.
Click to Download
close-image