fbpx
  • No products in the basket.

10.3. சுந்தரர்

வாழ்க்கை குறிப்பு:

இயற்பெயர்  : நம்பி ஆரூரர்

பெற்றோர்  : சடையனார், இசைஞானியார்

ஊர்  : திருமுனைப்பாடி நாடு திருநாவலூர்

மனைவி  : பரவையார், சங்கிலியார்

வாழ்ந்த காலம்  :  18 ஆண்டுகள்

மார்க்கம்  :  யோகம் என்னும் சக மார்க்கம்

நெறி  :  யோகம் அல்லது தோழமை நெறி

ஆட்கொள்ளப்பட்ட

இடம்  :  திருவெண்ணெய் நல்லூர்

இறைவனடி

சேர்ந்த இடம்  :  கைலாயம்

இவரின் தமிழ்  :  மிஞ்சு தமிழ்


படைப்புகள்:

· 7ஆம் திருமுறை. இதனை “திருப்பாட்டு’ என்பர்.

· திருதொண்டத்தொகை


வேறு பெயர்:

· வன்தொண்டர்

· தம்பிரான் தோழர்

· சேரமான் தோழர்

· திருநாவலூறார்

· ஆலாலசுந்தரர்

· ஆளுடைய நம்பி


நிகழ்த்திய அற்புதங்கள்:

· 12000 பொன்னை மணிமுத்தாற்றில் போட்டு கமலாலயத்தில் எடுத்தார்.

· இவர் பொருட்டு காவிரி ஆறு இரண்டு கூறாகப் பிளந்து நின்றது.

· செங்கல்லை தங்கக் கல்லாக மாற்றினார்.

· வாழ்நாள் முழுவதும் மணக்கோலத்துடன் வாழ்ந்தவர்.

· பரவையார் மீது இவர் கொண்ட காதலுக்கு சிவபெருமான் உதவி புரிந்தார்.

· இரு கண்ணையும் இழந்தவர், காஞ்சியில் ஒரு கண்ணையும் திருவாரூரில் ஒரு கண்ணையும் பெற வைத்தார்.

· முதலை உண்ட பாலகனை உயிரோடு மீட்டார்.


சிறப்பு:

· இவரின் திருமணத்தன்று இறைவனே நேரில் வந்து அடிமை ஓலை காட்டி, சுந்தரர் தனது அடிமை என நிறுவினார்.

· தன்னை அடிமை என்று கூறிய இறைவனைப் “பித்தா” எனக் கோபித்துப் பேசினார். இறைவன் சுந்தரரை ஆட்கொண்டப்பின் “பித்தாபிறை சூடி” என்ற பாடலை பாடினார்.

· சேரமான் பெருமாள் நாயனாரோடு “வெள்ளையானை மீது” அமர்ந்து கயிலை சென்றார்.

· மனைவியின் ஊடலை தவிர்க்க இறைவனையே தூதாக அனுப்பினார்

· இவரை திருமுனைப்பாடி நாட்டை ஆண்ட நரசிங்கமுனையர் என்ற மன்னனால் தத்து எடுத்து வளர்க்கப்பட்டவர்.

· இவர் 38000 பதிகங்கள் பாடியதாக கூறப்படிகிறது.

· ஆனால் கிடைத்தவை 100 மட்டுமே.

· “வித்தகம் பேச வேண்டா விரைந்து பணி செய்ய வேண்டும்” என்று இறைவன் இவரிடம் கூறினார்.

 

TNPSC Materials

Group 1 Courses

© TNPSC.Academy | All Rights Reserved.
Click to Download
close-image