fbpx
  • No products in the basket.

10.2. தெ.பா.மீனாட்சி சுந்தரனார்

· சென்னை சிந்தாதிரிப் பேட்டையில் பொன்னுச்சாமி கிராமணி என்பவருக்கு மகனாகப் பிறந்தார்.

· பிறப்பு 08-01-1901 இறப்பு 28-08-1980

· 1916 அரிஜனங்களுக்கு இரவுப் பள்ளி செயல்படுத்தினார்.

· 1920 பி.ஏ. பட்டம்

· 1922 பி.எல். பட்டம்

· 1924 எம்.ஏ. (வரலாறு) பட்டம் மேலும் எம்.ஓ.எல்.பட்டம் பெற்றார்.

· 1923 சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்.

· 1925 அலுமினியத்தொழிலாளர் சங்கத் தலைவர்.

· 1936 வேதாந்த சங்கத் தலைவர்.

· 1944 நாட்டு விடுதலைக்காக போராடி சிறை சென்றார்.

· 1944-1946 அண்ணாமலைப் பல்கலைக் கழக தமிழ்ப் பேராசிரியர். 1958-ல் துறைத் தலைவரானார்.

· 1947 மாண்டிசோரி பள்ளியை நிறுவினார்.

· 1961 சிகாகோ பல்கலைக் கழகம் தமிழ்க் கல்வி தொடங்கியபோது தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார்.

· 1973-1974 திருவேங்கடம் பல்கலைக்கழகத்தில் திராவிட மொழியின் சிறப்பாய்வாளராகப் பணி.


டி.லிட். பட்டங்கள்

· 1967-ல் மதுரைப் பல்கலைக் கழகம்.

· 1976-ல் இலங்கைப் பல்கலைக் கழகம்.

· 1979-ல் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் வழங்கியது.

· 1977 பத்மபூசன் விருது, 1978 கலைமாமணி பட்டம்.

· அனைத்திந்திய பல்கலைக் கழகத் தமிழாசிரியர் மன்றத்தைத் தொடங்கியவர். தனது இறுதி வரை அதன் துறைத் தலைவராக இருந்தார்.

· நடமாடும் பல்கலைக் கழகம் என திரு.வி.க. பாராட்டியுள்ளார்.


பட்டங்கள்

· பல்கலைச் செல்வர் – திருவாவடுதுறை ஆதீனம்

· பன்மொழிப்புலவர் (தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம், கன்னடம், சமஸ்கிருதம், இந்தி, பிரெஞ்சு, ஜெர்மன்) - குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் (அழகப்பச் செட்டியார் தலைமை)

· பெருந்தமிழ் மணி – சிவபுரி சன்மார்க்க சபை (தலைமை முதலமைச்சர் காமராசர்)


இவரது நூல்கள்

· கால்டுவெல் ஒப்பிலக்கணம் – அடிச்சொற்கள் (மொழி பெயர்ப்பு)

· மனோ தத்துவ சாத்திரம்

· சமணத்தமிழ்

· கல்விச் சிந்தனைகள்

· வள்ளுவரும் மகளிரும்

· அன்பு முடி

· தமிழா நினைத்துப்பார்

· பிறந்தது எப்படியோ?

· நீங்களும் சுவையுங்கள்

· கானல் வரி

· இலக்கிய வரலாறு

· தமிழ் மணம்

· வள்ளுவர் கண்ட நாடும் காமமும்

· வாழும் கலை

· மொழியியல் விளையாட்டுகள்

· பத்துப்பாட்டு ஆய்வு

· தமிழும் பிற பண்பாடும் என்பன.


ஆங்கிலநூல்கள்

· A History of Tamil Language

· A History of Tamil Literature

· Advaita in Tamil

· Tamil – A Bird’s eye view

· Philosophy of Tiruvalluvar

 

TNPSC Materials

© TNPSC.Academy | All Rights Reserved.
 😎 Our Students! - 236 (Gr 2 & 2A) & 56 (Group 4)
Join New Batch
close-image