fbpx
  • No products in the basket.

10.2. திருஞானசம்பந்தர்

வாழ்க்கை குறிப்பு:

இயற்பெயர்  :  ஆளுடையபிள்ளை

பெற்றோர்  :  சிவபாத இருதயார், பகவதி அம்மையார்

ஊர்  :  சீர்காழி(தோணிபுரம், பிரம்மபுரம், வேணுபுரம்)

மனைவி  :  சொக்கியார்

வாழ்ந்த காலம்  :  16 ஆண்டுகள்

மார்க்கம்  :  கிரியை என்னும் சத்புத்திர மார்க்கம்

நெறி  :  மகன்மை நெறி

ஆட்கொள்ளப்பட்ட

இடம்  :  சீர்காழி

இறைவனடி

சேர்ந்த இடம்  :  பெருமண நல்லூர்

இவரின் தமிழ்  :  கொஞ்சு தமிழ்


படைப்புகள்:

· 1,2,3 ஆம் திருமுறைகள்

· முதல் மூன்று திருமுறைகள் =”திருகடைகாப்பு” எனப் போற்றுவர்


வேறு பெயர்கள்:

· ஆளுடையபிள்ளை(இயற்பெயர்)

· திருஞானம் பெற்ற பிள்ளை

· காழிநாடுடைய பிள்ளை

· ஆணைநமதென்ற பெருமான்

· பரசமயகோளரி

· நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தம்(சுந்தரர்)

· திராவிட சிசு(ஆதிசங்கரர் தம்முடைய சௌந்தர்ய லகரி என்னும் நூலில்)

· இன்தமிழ் ஏசுநாதர்

· சத்புத்திரன்

· காழி வள்ளல்

· முருகனின் அவதாரம்

· கவுணியர்

· சந்தத்தின் தந்தை

· காழியர்கோன்

· ஞானத்தின் திருவுரு

· நான் மறையின் தனித்துணை

· கல்லாமல் கற்றவன்(சுந்தரர்)


நிகழ்த்திய அற்புதங்கள்:

திருமறைக்காடு  :  மூடிய கோயில் கதவுகளை பாடித் திறக்க செய்தார்.

திருப்பாச்சிலாச்சிரமம்  : மழவன் மகளின் முயலகன் நோய் நீக்கினார்

திருமருகல்  : பாம்பு தீண்டிய வணிகனின் விடம் நீக்கினார்

திருவோத்தூர்  : ஆண்பனையை பெண்பனை ஆக்கினார்

மதுரை  : தான் தங்கியிருந்த மடத்திற்குக் கூன்பாண்டியன் வைத்த நெருப்பை அவனுக்கே வெப்பு நோயாகப் பற்றச் செய்தார். அவன் மனைவி மங்கையர்க்கரசியும், அமைச்சர் குலச்சிறையாரும் வேண்ட, நீறு பூசி அவனின் வெப்பு நோய் நீக்கி, அவனின் கூன் நீக்கச் செய்து அவனை “நின்றசீர் நெடுமாறன்” ஆகினார்.

மதுரை  : வாதத்துக்கு அழைத்த புத்தநந்தியின் தலை துண்டாகுமாறு செய்தார்.

மயிலாப்பூர்  : குடத்தில் சாம்பலாக இருந்த பூம்பாவை என்னும் பெண்ணை உயிருடன் வரச் செய்தார்.

திருஏடகம்  : வைகையாற்றில் இட்ட ஏடு கரை ஏறியது.

திருப்பூந்துருத்தி  : நாவுக்கரசர் இவரை சுமந்த இடம்.


இறைவனிடமிருந்து பெற்றவை:

திருகோலக்காவில்  : பொற்றாளம்

திருவாடுதுறை  : பொற்கிழி

திருவீழிமிழலை  : படிகாசு

திருவாயிலறத்துறை  : முத்துச்சிவிகை

பட்டீஸ்வரம்  : முத்துப்பந்தல்

· மூன்று வயதில் இவருக்கு உமையம்மையே நேரில் வந்து இவருக்கு “ஞானப்பால்” ஊட்டினார். அன்று முதல் இவர் “ஞானசம்பந்தன்” எனப் பெயர் பெற்றார்.

· இவர் தந்தையாரின் தோளில் அமர்ந்தவாறே சிவத்தலங்கள் சென்று பாடினார்.

· இவரின் தோழர் = சிறுத்தொண்டர் எனப்படும் பரஞ்சோதியார்

· ஞானசம்பந்தர் 16000 பதிகம் பாடியதாக நம்பியாண்டார் நம்பி குறிப்பிடுகிறார். ஆனால் நமக்கு கிடைத்தது 384 பதிகங்கள் மட்டுமே.

· கிடைக்கும் மொத்தப்பாடல்கள் 4181

· 220 திருத்தலங்களுக்கு சென்று பாடியுள்ளார்.

சம்பந்தரும் நாவுக்கரசரும் சந்தித்த இடம் திருப்புகலூர்

 
© TNPSC.Academy | All Rights Reserved.
Online Live Class

Group 2 & 2A - New Batch

Online Class + Books + Test Series
Click for More Details
WhatsApp: +91-7904003050
close-link