fbpx
  • No products in the basket.

16. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல்

கொடுக்கப்பட்டிருக்கும் சொற்றொடர் விடை வடிவத்தில் இருக்கும், இதற்குரிய சரியான வினாவை கொடுக்கப்பட்டிருக்கும் நான்கு வினாவில் இருந்து கண்டுபிடிக்க வேண்டும்.

கேள்வியை நன்கு படித்துப் பார்த்தாலே எளிதில் விடை அளிக்கலாம்.

இருப்பினும், தேர்வில் நேர விரையம் செய்யாமல் இருக்க சில பகுதிகளை மட்டும் தெரிந்து வைத்துக்கொள்வது நன்று.

வினா:

வினா, ஒருவருக்கொருவர் உரையாடிக்கொள்ளும் பொழுது எழும் தங்கள் சந்தேகங்களையும், மற்ற ஐயங்களும் போக்கிக்கொள்ள உதவும்.

அவ்வகையில் எழும் வினாக்கள் ஆறுவைப்படும்

· அறிவினா

· அறியாவினா

· ஐய வினா

· கொளல் வினா

· கொடை வினா

· ஏவல் வினா.

அறிவினா

தனக்கு தெரிந்தவற்றை மற்றவரிடம் கேட்பது

நேர்காணல் தேர்வின் போது நேர்காணல் செய்பவர் போட்டியாளரை பார்த்து கேட்பது.

எ. கா.: திருக்குறளை எழுதியவர் யார்?

அறியா வினா?

தெரியாத ஒன்றை தெரிந்தவரிடம் கேட்டல்

மாணவர் ஆசிரியரிடம் கேட்பது

எ. கா.: ஐயா,இந்த படத்தை எவ்வாறு வரைவது?

ஐய வினா

தமக்கு ஏற்பட்டுள்ள ஐயத்தைப் போக்கிக் கொள்ள வினவுவது.

எ. கா: அக்கா, நான் போடும் கணக்கு சரிதானே?

கொளல் வினா

ஒன்றினை மற்றவரிடம் தன தேவையின் பொருட்டுக் கேட்டுப் பெறுதல்

எ. கா.: அருண், உன்னிடம் 2 பேணா உள்ளதா?

கொடை வினா

ஒன்றை மற்றவருக்கு கொடுக்கும் பொருட்டு கேட்பது.

எ. கா.: காசு வேண்டுமா?

ஏவல் வினா

ஒரு செயலை செய்வதற்காக கேட்கப்படும் வினா.

எ. கா.: வீட்டுப்பாடம் செய்தாயா?

எ. கா:

1. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல்

மனிதன் சத்தியத்தைக் காப்பற்ற வேண்டும்

A) மனிதன் எதற்காகக் காப்பாற்ற வேண்டும்?

B) மனிதன் எப்படிக் காப்படிக் காப்பற்ற வேண்டும்?

C) மனிதன் எதனைக் காப்பற்ற வேண்டும்?

D) மனிதன் ஏன் காப்பாற்ற வேண்டும்?

விடை: C) மனிதன் எதனைக் காப்பற்ற வேண்டும்?

2. பார்த்திபன் சென்னைக்குச் சென்றான்.

இதற்கு ஏற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க.

A) முருகன் எதற்கு சென்றான்?

B) முருகன் எங்கு சென்றான்?

C) முருகன் எப்படிச் சென்றான்?

D) முருகன் யாருடன் சென்றான்?

விடை: B) முருகன் எங்கு சென்றான்?

 

TNPSC Materials

© TNPSC.Academy | All Rights Reserved.
 😎 Our Students! - 236 (Gr 2 & 2A) & 56 (Group 4)
Join New Batch
close-image