fbpx
  • No products in the basket.

1.3. நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார்

· இயற்பெயர் : இராமலிங்கம்

· பெற்றோர் : வெங்கட்ராமன் - அம்மணி அம்மாள்

· பிறந்த ஊர் : மோகனூர் (நாமக்கல் மாவட்டம்)

· பயின்ற பள்ளி : நம்மாழ்வார் பள்ளி, நாமக்கல்

· பயின்ற கல்லூரி : எஸ். பி. ஜி கல்லூரி

· பணி :  தமிழக அரசின் முதல் அரசவைக் கவிஞர்

தமிழக சட்ட மேலவை உறுப்பினர்


சிறப்புப் பெயர்

· காந்தியக் கவிஞர்


இதழ்கள்

· கோவிந்தராச ஐயங்காருடன் சேர்ந்து நடத்திய இதழ் : லோகமித்திரன்


பிற செய்திகள்

· முத்தமிழிலும், ஓவியக்கலையிலும் திறன் மிகுந்தவர்.

· மிக சிறந்த விடுதலை போராட்ட வீரரும் ஆவார்.

· உப்பு சத்தியாகிரகத்தில் பங்கு பெற்று சிறைத் தண்டனையையும் அனுபவித்துள்ளார்.

· மேரி மகாராணி 1912 இல் டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற 5 ஆம் ஜார்ஜ் முடிசூட்டு விழாவில் இராமலிங்கனாருக்கு ஓவியத்திற்காக பரிசு அளித்தார்.

· அரவணை சுந்தரம் என்ற நாடகத்தை 1914 இல் மதுவிலக்கு பிரச்சாரத்திற்காக எழுதினார்.

· அந்நாடகம் திருசெங்கோட்டு மக்களால் ராஜாஜி தலைமையில் நடத்தப்பட்டது.

· இவர் சட்ட மேலவை உறுப்பினராக இருந்த ஆண்டு - 1956, 1962 (இருமுறை)

· 1950 களில் மிக சிறப்பாக விளங்கிய முப்பெரும் கவிஞர்களுள் இவரும் ஒருவர் (பாரதிதாசன், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, இராமலிங்கனார்)


புகழுரைகள் :

· ஓவியக் கலைஞரே வருக - நீர் நம்மை ஓவியத்தில் தீட்டும் நாம் உம்மைக் காவியத்தில் தீட்டுவோம் - பாரதியார்

· பலே பாண்டியா பிள்ளை நீவிர் ஒரு புலவர் என்பதில் ஐயமில்லை - பாரதியார்

· இவரை காந்தியக் கவிஞர் என்று அழைத்தவர் - இராஜாஜி


படைப்புகள்:

· மலைக்கள்ளன்

· தாமரைக்கண்ணன்

· மலைக்கள்ளன்

· இலக்கிய இன்பம்

· தேச பக்தர்மூலர்

· திருவள்ளுவரும் பரிமேலழகரும்

· வள்ளுவரின் உள்ளம் இலக்கியத் திறனாய்வு நூல்கள்

· கம்பன் கவிதை

· இன்பக்குயில்

· காந்தியடிகளும் கம்பநாட்டாழ்வாரும்


மேற்கோள்கள்:

· தமிழன் என்றோர் இனமுண்டு

தனியே அவற்கொரு குணமுண்டு

· தமிழன் என்று சொல்லடா

தலைநிமிர்ந்து நில்லடா

· காந்தீயம் நம் உடமை - அதைக்

காப்பது நம் கடமை

· பாட்டாளி மக்கள் பசிதீர வேண்டும்

பணமென்ற மோகத்தின் விசைதீர வேண்டும்

 

TNPSC Materials

© TNPSC.Academy | All Rights Reserved.
 😎 Our Students! - 236 (Gr 2 & 2A) & 56 (Group 4)
Join New Batch
close-image