fbpx
  • No products in the basket.

1.2. பாரதிதாசன்

வாழ்க்கைக்குறிப்பு

· இயற்பெயர் - கனகசுப்புரத்தினம்

· பெற்றோர் - கனகசபை - இலக்குமி அம்மையார்

· ஊர் - புதுவை

· ஆசிரியர் - திருப்புளிச்சாமி

· காலம் - 29.04.1891 - 21.04.1964


சிறப்புப் பெயர்கள்

· பாவேந்தர்

· புரட்சிக்கவி

· பகுத்தறிவுக் கவிஞர்

· புதுவைக்கவி

· தமிழ்க்கவி

· இயற்கைக் கவி

· தமிழ்நாட்டின் ரசூல் காம்தேவ்

· தமிழரின் கவி


புனைபெயர்

· நாடோடி

· கிறுக்கன்

· வழிப்போக்கன்

· சுயமரியாதைக்காரன்


பாரதிதாசன் நடத்திய இதழ்கள்

· புதுவை அரசு

· குயில்

· முல்லை

· கவிதா மண்டலம்


நூல்கள்

· குடும்ப விளக்கு

· பாண்டியன் பரிசு

· சேரதாண்டவம்

· இருண்ட வீடு

· தமிழ் இயக்கம்

· காதலா?கடமையை?

· எதிர்பாராத முத்தம்

· இசை அமுது

· மணிமேகலை வெண்பா

· இளைஞர் இலக்கியம்

· காதல் நினைவுகள்

· திருக்குறள் உரை

· அழகின் சிரிப்பு

· கண்ணகி புரட்சிக்காப்பியம்

· நல்ல தீர்ப்பு

· கழைக்கூத்தியின் காதல்

· சுதந்திரம்

· தமிழச்சியின் கத்தி

· குறிஞ்சித்திட்டு

· பிசிராந்தையார்


புகழுரைகள்

· வால்டவிட்மன் என்று பாரதிதாசனைப் பாராட்டியவர் - கவிமணி தேசிகவிநாயகம்.

· ஷெல்லி, வால்ட்விட்மன், மராட்டிய எழுத்தாளர் காண்டேகரோடு ஒப்பிட்டு பாரதிதாசனைப் பாராட்டியவர் - அறிஞர் அண்ணா

· தன்மான இயக்கத்தின் சிறந்த பாவலர் என்று புகழ்ந்தவர் - பெரியார்

· பாரதிதாசன் பாடலை இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் வீரமுழக்கமிட்டவர் - தருமாம்பாள் அம்மையார்

· அறிவுக் கோயிலைக் கட்டி அதில் நம்மைக் குடியேற்ற விரும்புகின்ற பேரறிஞன் - புதுமைபித்தன்

· பாரதிக்குப் பிறகு தமிழ்நாட்டில் ஓர் உண்மையான கவி -கு.ப.இராசகோபாலன்

· அவர் தம் பாடல்களைப் படிக்கின்ற அந்நியனும் தமிழனாகி விடுவான் - சிதம்பரநாத செட்டியார்

· புரட்சிக்கவி பாரதிதாசன், புதிய கவிதையை சிருஷ்டி செய்கிறார்; இயற்கையாகவே செய்கிறார்; தமிழ் மொழியில் புதியவளைவும், நெளிவும் மெருகும் ஏற்றுகிறார்; அவர் இசை வெறியில் கவிதைக் கனலுடன் பாடும்போது நாம் எத்தனை மணி நேரம் வேண்டுமானாலும் சலிப்பின்றிக் கேட்டு இன்புறலாம். இது உண்மை! மறுக்க முடியாத உண்மை - வி.ஆர்.எம்.செட்டியார்

· குயிலின் பாடலும் மயிலின் ஆடலும் வண்டின் யாழும் அருவியின் முழவும் இனிக்கும், பாரதிதாசன் பாட்டும் இனிக்கும் - திரு.வி.க

· சுப்புரத்தினம் ஓர் கவி என்று புகழ்ந்தவர் - பாரதியார்

· தடையேதும் இல்லை இவர் நடையில், வாழைத் தண்டுக்கோ தடுக்கின்ற கனுக்களுண்டு - சுரதா


பிற செய்திகள்

· பாரதியாரின் மீது கொண்ட பற்றினால் பாரதிதாசன் என்று தன பெயரை மாற்றிக்கொண்டார்.

· பாரதிதாசன் பாரதியாரைச் சந்தித்த இடம் - புதுச்சேரியில் நடந்த வேலு நாயக்கர் இல்லவிழாவில்

· இவரின் முதல் கவிதை - எங்கெங்கும் காணினும் சக்தியடா

· இவர் ஒரே இரவில் எழுதிய நூலின் பெயர் - தமிழ் இயக்கம்

· உரிமை நாடகம் - அமைதி

· நகைச்சுவை நாடகம் - இருண்ட வீடு

· பிரெஞ்சு இலக்கிய நடையில் தமிழில் எழுதிய இலக்கியம் - குடும்பவிளக்கு

· பாரதிதாசன் தொடங்கிய நாடகக் குழுவின் பெயர் - இன்ப இரவு

· தமிழில் மொழிபெயர்த்த சேக்ஸ்பியர் நாடகம் - வெனிசு நகரவணிகன் (Merchant of Venice)

· முதல் திரைக்கதை எழுதிய திரைப்படம் – கவிகாளமேகம்

· இவரின் பெயரில் திருச்சிராப்பள்ளியில் பல்கலைக்கழகம் அமைத்து சிறப்பு செய்யப்பட்டுள்ளது.

· தமிழக அரசினால் சிறந்த கவிஞர்களுக்கு பாவேந்தர் விருது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.

· முதன் முதலில் பாரதிதாசன் விருது பெற்ற கவிஞர் சுரதா


மேற்கோள்கள்

· "தமிழுக்கும் அமுதென்று பேர்"

· "எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்

மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு"

· "கன்னல் பொருள் தரும் தமிழே நீ ஓர் பூக்காடு நானோர் தும்பி"

· "புதியதோர் உலகு செய்வோம் கேட்ட

போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்"

· "உறுதி! உறுதி! ஒன்றே சமூகம்

என்று எண்ணார்க்கு இறுதி! இறுதி!"

 
© TNPSC.Academy | All Rights Reserved.
Online Live Class

Group 2 & 2A - New Batch

Online Class + Books + Test Series
Click for More Details
WhatsApp: +91-7904003050
close-link