TNPSC Books
-
TNPSC பொதுத் தமிழ் Book - for Group 2, 2A, 3, 4 & VAO
₹1,000.00Original price was: ₹1,000.00.₹850.00Current price is: ₹850.00. -
TNPSC General English Book - for Group 2 & 2A
Rated 5.00 out of 5₹1,000.00Original price was: ₹1,000.00.₹850.00Current price is: ₹850.00.
Group 1 Courses
TNPSC Group 1 - Test Series - 2019
4.7₹3,500.00Original price was: ₹3,500.00.₹2,800.00Current price is: ₹2,800.00. 542Group 1 | Postal and Online Test Series | 2022
₹3,200.00Original price was: ₹3,200.00.₹2,800.00Current price is: ₹2,800.00. 88
Group 2 & 2A Courses
TNPSC Group 2 and 2A - Test Series - 2019
₹2,400.00Original price was: ₹2,400.00.₹1,800.00Current price is: ₹1,800.00. 527TNPSC Group 2 and 2A - Test Series - 2019 - தமிழ்
₹2,400.00Original price was: ₹2,400.00.₹1,800.00Current price is: ₹1,800.00. 175












· இயற்பெயர் – சுப்பிரமணி, சுப்பையா
· பெற்றோர் – சின்னசாமி ஐயர் – லட்சுமி அம்மாள்
· மனைவி – செல்லம்மாள்
· ஊர் – எட்டயபுரம் , தூத்துக்குடி மாவட்டம்
· காலம் – 11.12.1882 – 11.09.1921 (39 வயது)
சிறப்புப் பெயர்கள்
· மகாகவி
· தேசிய கவி
· விடுதலைக்கவி
· உலகக் கவி
· முன்னறிபுலவர்
· ஷெல்லிதாசன்
· புதுக்கவிதையின் தந்தை
· 20 ஆம் நூற்றாண்டின் விடிவெள்ளி
· புரட்சிக்கவி
· பைந்தமிழ்ப் பாவலன்
· கவிராஜன்
· செந்தமிழ்த் தேனீ
· சிந்துக்குத் தந்தை
· பைந்தமிழ்த்தேர்ப்பாகன்
· தற்கால இலக்கியத்தின் விடிவெள்ளி
· பாட்டுக்கொரு புலவன்
பணியாற்றிய இதழ்கள்
· சுதேசமித்திரன்
· சக்கரவர்த்தினி
· இந்தியா
· விஜயா
· கர்மயோகி
· பாலபாரத – யங் இண்டியா
· தருமம்
பிற செய்திகள்
· பாரதியின் முதல் கவிதை – தனிமை இரக்கம்
· வெளிவந்த இதழ் – விவேகபானு
· பாரதி என்ற பட்டத்தை அளித்தவர் – எட்டயபுர சமஸ்தான புலவர்
· பாரதி பொருள் – கலைமகள்
· முதலில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றிய பள்ளி – சேதுபதி உயர்நிலைப்பள்ளி, மதுரை
· பாரதியின் அரசியல் குரு – திலகர்
· பாரதிக்கு மகாகவி என்ற பட்டத்தைக் கொடுத்தவர் – வா. ராமசாமி ஐயர் (வா.ரா.)
· கீதையைத் தமிழில் மொழிபெயர்த்தவர்.
· பாரதியார் திருநெல்வேலி இந்துக்கல்லூரியில் 5 ஆம் வகுப்பு வரை படித்தார்
· பாரதி சங்கம் என்ற அமைப்பை தோற்றிவித்தவர் – கல்கி
· பாரதியின் நூற்றாண்டுவிழா – மேற்கு வங்கத்தில் 1983 இல் நடைப்பெற்றது
· வங்கமொழியில் பக்கிம் சந்திர சட்டர்ஜி எழுதிய வந்தேமாதரம் பாடலைத் தமிழில் மொழி பெயர்த்தார்.
· பாரதியாரின் ஞானகுரு நிவேதிதா தேவி
· பாரதியின் பாடல்களை முதன்முதலில் வெளியிட்டவர் – வி.கிருஷ்ணசாமி ஐயர்
· பாரதியின் படத்தை வரைந்தவர் – ஆர்ய என்ற பாஷ்யம்
· 14 மொழிகள் நன்கு அறிந்தவர்
· முப்பெரும் பாடல்கள் – கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம்
பாரதியின் புகழுரைகள் :
பாரதியாரைப் பற்றி பாரதிதாசன் கூறியவை:
· “பாரதியார் உலககவி! அகத்தில் அன்பும்
பரந்துயர்ந்த அறிவினிலே ஒளியும் வாய்ந்தோர்!”
· நீடு துயில் நீங்கப் பாடிவந்த நிலா
· காடு கமழும் கற்பூரச் சொற்கோ
நாமக்கல் கவிஞர் கூறியது :
· “பாரதியை நினைத்திட்டாலும் சுதந்திரத்தின் ஆவேசம் சுருக்கென்று ஏறும். இந்தியன் நான் என்றிடும் நல் இறுமாப்பு உண்டாம்”
மேற்கோள்கள்:
· “செந்தமிழ் நாடென்ற போதினிலே
இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே”
· “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்
இனிதாவ தெங்குங் காணோம்”
· சாதிகள் இல்லையடி பாப்பா – குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்
நீதி உயர்ந்த மதி கல்வி – அன்பு
நிறைய உடையவர்கள் மேலோர்
உயிர் களிடத்தில் அன்பு வேணும் – தெய்வம்
உண்மை என்று தானறிதல் வேணும்
உயரமுடைய நெஞ்சு வேணும் – இது
வாழும் முறைமையடி பாப்பா
· பாரத நாடு பழம் பெரு நாடே
பாடுவம் இஃதை எமக்கில்லை ஈடே
· “மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்”
· “வாழிய பாரத மணித்திருநாடு”
· “புண்ணியங்கோடி ஆங்கோர்
ஏழைக்கு எழுத்தறிவித்தல்”
· காதல் காதல் காதல்
காதல் போயின் காதல் போயின்
சாதல் சாதல் சாதல்
· தருமத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வும்
தருமம் மறுபடியும் வெல்லும்
· எல்லாரும் ஓர்குலம் எல்லாரும் ஓரினம்
எல்லாரும் இந்நாட்டு மன்னர்
· காக்கை குருவி எங்கள் சாதி – நீள்
கடலும் மலையும் எங்கள் கூட்டம்
· ஒளி படைத்த கண்ணினாய் வா ! வா !