fbpx
  • No products in the basket.

1.1. பாரதியார்

· இயற்பெயர் - சுப்பிரமணி, சுப்பையா

· பெற்றோர் - சின்னசாமி ஐயர் - லட்சுமி அம்மாள்

· மனைவி - செல்லம்மாள்

· ஊர் - எட்டயபுரம் , தூத்துக்குடி மாவட்டம்

· காலம் - 11.12.1882 - 11.09.1921 (39 வயது)


சிறப்புப் பெயர்கள்

· மகாகவி

· தேசிய கவி

· விடுதலைக்கவி

· உலகக் கவி

· முன்னறிபுலவர்

· ஷெல்லிதாசன்

· புதுக்கவிதையின் தந்தை

· 20 ஆம் நூற்றாண்டின் விடிவெள்ளி

· புரட்சிக்கவி

· பைந்தமிழ்ப் பாவலன்

· கவிராஜன்

· செந்தமிழ்த் தேனீ

· சிந்துக்குத் தந்தை

· பைந்தமிழ்த்தேர்ப்பாகன்

· தற்கால இலக்கியத்தின் விடிவெள்ளி

· பாட்டுக்கொரு புலவன்


பணியாற்றிய இதழ்கள்

· சுதேசமித்திரன்

· சக்கரவர்த்தினி

· இந்தியா

· விஜயா

· கர்மயோகி

· பாலபாரத - யங் இண்டியா

· தருமம்


பிற செய்திகள்

· பாரதியின் முதல் கவிதை - தனிமை இரக்கம்

· வெளிவந்த இதழ் - விவேகபானு

· பாரதி என்ற பட்டத்தை அளித்தவர் - எட்டயபுர சமஸ்தான புலவர்

· பாரதி பொருள் - கலைமகள்

· முதலில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றிய பள்ளி - சேதுபதி உயர்நிலைப்பள்ளி, மதுரை

· பாரதியின் அரசியல் குரு - திலகர்

· பாரதிக்கு மகாகவி என்ற பட்டத்தைக் கொடுத்தவர் - வா. ராமசாமி ஐயர் (வா.ரா.)

· கீதையைத் தமிழில் மொழிபெயர்த்தவர்.

· பாரதியார் திருநெல்வேலி இந்துக்கல்லூரியில் 5 ஆம் வகுப்பு வரை படித்தார்

· பாரதி சங்கம் என்ற அமைப்பை தோற்றிவித்தவர் - கல்கி

· பாரதியின் நூற்றாண்டுவிழா - மேற்கு வங்கத்தில் 1983 இல் நடைப்பெற்றது

· வங்கமொழியில் பக்கிம் சந்திர சட்டர்ஜி எழுதிய வந்தேமாதரம் பாடலைத் தமிழில் மொழி பெயர்த்தார்.

· பாரதியாரின் ஞானகுரு நிவேதிதா தேவி

· பாரதியின் பாடல்களை முதன்முதலில் வெளியிட்டவர் - வி.கிருஷ்ணசாமி ஐயர்

· பாரதியின் படத்தை வரைந்தவர் - ஆர்ய என்ற பாஷ்யம்

· 14 மொழிகள் நன்கு அறிந்தவர்

· முப்பெரும் பாடல்கள் - கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம்


பாரதியின் புகழுரைகள் :

பாரதியாரைப் பற்றி பாரதிதாசன் கூறியவை:

· "பாரதியார் உலககவி! அகத்தில் அன்பும்

பரந்துயர்ந்த அறிவினிலே ஒளியும் வாய்ந்தோர்!"

· நீடு துயில் நீங்கப் பாடிவந்த நிலா

· காடு கமழும் கற்பூரச் சொற்கோ


நாமக்கல் கவிஞர் கூறியது :

· "பாரதியை நினைத்திட்டாலும் சுதந்திரத்தின் ஆவேசம் சுருக்கென்று ஏறும். இந்தியன் நான் என்றிடும் நல் இறுமாப்பு உண்டாம்"


மேற்கோள்கள்:

· "செந்தமிழ் நாடென்ற போதினிலே

இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே"

· "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்

இனிதாவ தெங்குங் காணோம்"

· சாதிகள் இல்லையடி பாப்பா - குலத்

தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்

நீதி உயர்ந்த மதி கல்வி - அன்பு

நிறைய உடையவர்கள் மேலோர்

உயிர் களிடத்தில் அன்பு வேணும் - தெய்வம்

உண்மை என்று தானறிதல் வேணும்

உயரமுடைய நெஞ்சு வேணும் - இது

வாழும் முறைமையடி பாப்பா

· பாரத நாடு பழம் பெரு நாடே

பாடுவம் இஃதை எமக்கில்லை ஈடே

· "மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்"

· "வாழிய பாரத மணித்திருநாடு"

· "புண்ணியங்கோடி ஆங்கோர்

ஏழைக்கு எழுத்தறிவித்தல்"

· காதல் காதல் காதல்

காதல் போயின் காதல் போயின்

சாதல் சாதல் சாதல்

· தருமத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வும்

தருமம் மறுபடியும் வெல்லும்

· எல்லாரும் ஓர்குலம் எல்லாரும் ஓரினம்

எல்லாரும் இந்நாட்டு மன்னர்

· காக்கை குருவி எங்கள் சாதி - நீள்

கடலும் மலையும் எங்கள் கூட்டம்

· ஒளி படைத்த கண்ணினாய் வா ! வா !

 
© TNPSC.Academy | All Rights Reserved.
Online Live Class

Group 2 & 2A - New Batch

Online Class + Books + Test Series
Click for More Details
WhatsApp: +91-7904003050
close-link