fbpx
  • No products in the basket.

1.1 பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல்

பகுதி அ - இலக்கணம் - பொருத்துக. இப்பகுதியில் இருந்து பொருத்துதல் மாதிரியான வினாக்கள் TNPSC தேர்வுகளில் இரு வகையில் கேட்கப்படுகிறது. ஓன்று சொல் பொருள் பொருத்துதல். மற்றோன்று நூல் நூலாசிரியர்கள். இந்த அலகில் சொல்லும் அதன் பொருளும் கொடுக்கப்பட்டுள்ளது. TNPSC தேர்வின் பாணிக்கேற்றவாறு சொற்களும் அதற்கான இணையான பல பொருள்களையும் இங்கு கொடுத்துள்ளோம். பொருத்துக பொதுவாக இயல்பான சொல் பொருள்களை கொண்டேக் கேட்கப்படுகிறது எனும் போதும், முழுவதும் மனனம் செய்யத்தேவை இல்லை என்றாலும் அனைத்து சொல் பொருளை அன்றாடம் படித்து வைப்பது தேர்வில் பயனளிக்கும்.

அணங்கு = தெய்வம்

அகடு = பள்ளம்

அறம் = நீதி

அண்ணல் = பெருமை, தலைவன், பெருமை

அந்தம் = ஈறு, அழகு

அரிவை = பெண்

அலங்கல் = மாலை

அயில் = வேல், கூர்மை

அமர் = போர்

அரை = இடுப்பு

அரில் = பிணக்கு, சிறு=துறும்பு, குற்றம்

அருணம் = சிவப்பு, ஆடு

அணை = படுக்கை

அஞ்சுகம் = கிளி

அல்லல் = துன்பம்

அக்கறை = ஈடுபாடு

அழுங்கல் = இரக்கம், கேடு

அன் = கூர்மை, செறிவு

அகிலம் = உலகம், பார்

அமர்தல் = மிகுதி, பொலிவு

அரையன் = அரசன்

அரி = கண்வரி, கடல், பொன்

அற்றம் = மறைபொருள், சோர்வு

இறத்தல் = மிகுதல், கடத்தல், சாதல்

அளக்கர் = கடல், நிலம், சேறு

ஆர = பகுதி

ஆயம் = கூட்டம், சூது=கருவி

ஆக்கம் = செல்வம்

ஆன் = பசு

ஆசு = சிறுமை, குற்றம், விரைவு

ஆற்றல் = வலி, செயல்

ஆகம் = மார்பு, உடல்

ஆணை = ஏவல்

ஆர் = கூர்மை

ஆரம் = மாலை

அறல் = அறுதல், நீர், நீர்த்திரை

ஆடகம் = போன், தங்கம்

ஆரம் = சந்தனம், மாலை

ஆரவாரம் = பேரொலி

இல் = இல்லை, வீடு

இரவி = சூரியன்

இடையூறு = துன்பம்

இருநிலம் = பெரிய பூமி

இரங்கல் = அரவம், அழுஙல்

இன்னா = துன்பம்

இறத்தல் = மிகுதல், கடத்தல், சாதல்

இருத்தல் = செகுத்தல், வீழ்த்தல்

ஈ = கொடு

ஈரம் = இரக்கம், அன்பு, மழை

ஈதல் = கொடுத்தல்

ஈட்டம் = தொகுதி

உணர்தல் = கருதல், தெளிவு

உழை = மான், அருகிடம், அறைதல்

உறு = மிகுதி

உளவு = ஒற்று

உப்பல் = கதிரவன்

உடற்றும் = வருத்தம்

உதிரம் = இரத்தம்

உவகை = மகிழ்ச்சி

உறழ்வு = இடையீடு, உணர்வு

உழை = பக்கம்

உபாயம் = வழிவகை

உளைந்தி = வருத்தி

உறைதல் = தூங்குதல்

உம்பர் = மேலிடம், அமரர்

உறை = நீர் முதலாகிய நுனி, மருந்து

உறுகண் = துன்பம்

ஊக்கம் = வண்மை, முயற்சி

ஊழியம் = தொண்டு

ஊழி = யுகம், உலகம்

ஊர்பு = கிளர்ந்து

ஊறு = துன்பம் , இடையூறு

ஊர = அடர்ந்து படிய

ஊன்றும் = தாங்கும்

எல்லை = பகலவன், அளவை

எல் = பகல்

எழிலி = மேகம்

எழினி = உறை

எத்தளம் = முயற்சி

எள்ளல் = இகழ்தல்

எய்தோன் = அழித்தவன்

ஏங்கல் = வருந்தல்

ஏவல் = பணி, ஆணை

ஏறு = காளை, சிங்கம்

ஏதிலார் = அயலவர்

ஏற்றல் = கோடல், எதிர்த்துப் பொருதல்

ஐயரி = அழகிய செவ்வரி

ஐராவதம் = இந்திரனின் யானை

ஐயை = தாய்

ஒன்னார் = பகைவர்

ஒரால் = நீங்கல்

ஒசி = ஒடி

ஒல்லை = வியந்து

ஒறுத்தார் = தண்டித்தார்

ஒற்கம் = வறுமை

ஒட்டார் = பகைவர்

ஓம்பல் = பாதுகாத்தல்

ஓங்கு = உயர்

ஓது = கற்றல்

ஓவம் = ஓவியம்

ஓதல் = கூறுதல்

ஓதம் = கடல் அலை

ஒளடதம் = அமிழ்தம்

கல் = மலை, கற்றல்

கள் = தேன்

கவின் = அழகு

கடம் = காடு

கமுகு = பாக்கு

கரி = யானை, கன்று, நஞ்சு

கடிந்த =நீக்கிய

கஞ்சம் = தாமரை

கருமம்= செயல், கடமை

கட்சி = காடு, கூடு

கடி – காப்பு, கூர்மை

கந்தம் = புலன், கிழங்கு, கருணை

கழுது = வண்டு, பேய்

கயல் = மீன்

கனலி = தீபம், கதிரவன்

காசு = மணி, குற்றம்

காயம் = யாக்கை, கார்ப்பு

கரில் = கொடுமை, குற்றம், கார்ப்பு

கலை = நூல், கல்வி, காஞ்சி, ஆடை, முகவு, ஆனேறு(காளை), காலநுட்பம்

கவனம் = கடுப்பு, நாடு

கரைதல் = மொழிதல், கூவல்(கூவுதல்)

காதை = மொழி, கதை

காசு = மணி, குற்றம்

கார் = மேகம், மாரிக்காலம், நீர், கருமை, நிகழ்த்தும் கருவி

காரிகை = அழகு, அழகுடை=மாதர்

காழ் = கொல்பரல்(கொல்லும் பரல்=கற்கள்), மாலை, ஒளி

காசினி = நிலம், பூமி

கான் = விரைவு, காடு

காணம் = பொன்

கானல் = கதிரொளி

காலன் = இமயன்

கிழமை = உரிமை, வாரநாள்

கிளர்ந்து = மிகுந்து

கிலி = அச்சம்

கிண்கிணி = கொலுசு

கிழி = எழுதுபடம்(எழுதும் துணி)

கிழவன் = உரிமையுடையவன்

கீரம் = பால்

கீர்த்தி = புகழ்

குருதி = இரத்தம்

குவடு = மலை, சிகரம்

கூரை = ஆடை

கூவல் = கிணறு

குரை = ஒலி

குலம் = இல்லம், குடிமை, கூட்டம்

குழல் = மயிர், துளை

கூளி = நட்பு, தொகுதி

கூடல் = மதுரை, சேர்த்தல்

கூற்றம் = எமன்

கேள்வி = கல்வி, செவி

கேடில் = அழியாத

கேலி = இகழ்ச்சி

கேழல் = பன்றி

கேளிர் = உறவினர்

கொங்கு = தென்

கொற்றம் = வெற்றி

கொடுவரி = புலி

கொண்டல் = மேகம்

கோன் = அரசன்

கை = சிறுமை

கைம்மாறு = பயன்

சகி = தோழி

சம்பு = நாவல் மரம்

சாபம் = சாபமிடுதல், வில்

சினை = கரு, உறுப்பு, மரக்கோடு

சாகை = வீடு

குறுமுனி = அகத்தியர்

சாறு = விழா

சிலை = வில், மலை

சிறார் = சிறுவர்

சோகாப்பர் = துன்புறுவர்

சாமம் = யாமம், உபாயம்

சிரகம் = திவலை, கரகம்

சுடிகை = சுட்டி, மயிர்=முடி

சூழி = முகப்படாம், வாவி

சுடிகை = சுட்டி, மயிர்=முடி

செச்சை = வெட்சி, வெள்ளாட்டுக்=கடா

சேண் = உயர்வு, நீளம்

சே = தோழி, காளை

சேமம் = நலம்

சேய் = தொலைவு, தூரம்

ஞானம் = அறிவு

ஞாயிறு = சூரியன்

தனு = வில்

தவம் = பெறும் பேறு

தலை = சிறப்பு

தழை = இலை

தார் = மாலை

மாருதம் = காற்று

குருசு = சிலுவை

மல்லல் = வளப்பம்

படி = நிலம்

மரை = மான்

வேய் = மூங்கில்

ஏதம் = துன்பம்

வட்டு = சூதாட்டக்கருவி

வாவி = குளம்

மத்தமான் = யானை

விசும்பு = வானம்

கமுகு = பாக்கு

மதலை = குழந்தை

மாரன் = மன்மதன்

மேதி = எருமை

யாத்தல் = கட்டுதல்

யாணர் = புதுவரவு

வரை = மாலை

வியா = பெரிய

வித்து = விதை

பூசை =வழிபாடு

அமலன் = இராமன்

இளவல் = தம்பி

நளிர்கடல் – குளிர்ந்தகடல்

துன்பு = துன்பம்

உன்னேல் = எண்ணாதே

அனகன் = இராமன்

உவா = அமாவாசை

முண்டகம் = தாமரை

புக்கான் = அடைந்தான்

நாறி = பெண்

நுவலல் = கூறல்

நாளம் = நரம்பு

சலதி = கடல்

சந்து = சந்தனம்

சகம் = உலகம்

ஞமலி = நாய்

தகி = சூடு

துகள் = குற்றம்

தவ = மிகுதி

வெள்கி = நாணி

பூதலம் = உலகம்

நாண் = வயிறு

நிசி = நள்ளிரவு

நித்தியம் = முத்து

நீரவர் = அறிவுடையார்

நிருபர் = அரசர்

தெங்கு = தேங்காய்

யாக்கை = உடம்பு

புணரியோர் = தந்தவர்

புன்புலம் = புல்லிய நிலம்

தாட்கு = முயற்சி, ஆளுமை

தள்ளாதோர் இவண் தள்ளாதோரே = குறைவில்லாது நீர் நிலை அமைப்பவர்கள் குறைவில்லாது புகழுடையவர்களாக விளங்குவார்கள்.

உடுபதி = சந்திரன்

செற்றார் = பகைவர்

கிளை – உறவினர்

செந்தமிழ்க்கா = செந்தமிழ்க்காக

தேம்பா = இனிய பாக்களால்

பேரேடா = பேரேடு ஆக

மைவனம் = மலைநெல்

முருகியம்= குறிஞ்சிப்பறை

பூஞ்சினை=பூக்களை உடைய கிளை

சிறை= இறகு; சாந்தம் – சந்தனம்

பூவை= நாகணவாய்ப் பறவை

பொலம்= அழகு

கடறு= காடு

முக்குழல்=கொன்றை ஆம்பல், மூங்கில் ஆகியவற்றால் ஆன குழல்கள்

பொலி= தானியக்குவியல்

உழை= ஒரு வகை மான்

வாய்வெரீஇ= சோர்வால் வாய் குழறுதல்

குருளை= குட்டி

இனைந்து= துன்புறுதல்

உயங்குதல்= வருந்துதல்

படிக்கு உற= நிலத்தில் விழ

கோடு= கொம்பு

கல்=மலை

முருகு= தேன், மணம், அழகு

மல்லல்= வளம்

செறு= வயல்

கரிக்குருத்துயானைத்தந்தம் போர் = வைக்கோற்போர்

புரைதப= குற்றமின்றி

தும்பி= ஒருவகை வண்டு

துவரை=பவளம்

மரை= தாமரை மலர்

விசும்பு= வானம்

மதியம்= நிலவு

தமியர் = தனித்தவர்

முனிதல் = வெறுத்தல்

துஞ்சல் = சோம்பல்

அயர்வு = சோர்வு

மாட்சி = பெருமை

நோன்மை = வலிமை

தாள் = முயற்சி

சிதவல் = தலைப்பாகை

தண்டு= ஊன்றுகோல்

காயா, கொன்றை, நெய்தல் = மழைக்கால முல்லை , தளவம், பிடவம் மலர்கள்

போது = மொட்டு

அலர்ந்து = மலர்ந்து

கவினி – அழகுற

சில்காற்று = தென்றல்

புழை = சாளரம்

மாகால் = பெருங்காற்று

முந்நீர் = கடல்

நளிசினை = செறிந்த கிளை (பெரிய கிளை)

போது = மலர்

கஞலிய = நெருங்கிய

நாகு = இளமை

வளமலை = வளமான மலை (மலைநாடு) இன்று பழநி மலை என்று அழைக்கப்படுகிறது

கவாஅன் = மலைப்பக்கம்

கலிங்கம் = ஆடை

சுரும்பு = வண்டு

நாகம் = சுரபுன்னை , நாகப்பாம்பு

பிறங்கு = விளங்கும்

பறம்பு = பறம்பு மலை

ஆலமர் செல்வன் = சிவபெருமான் (இறைவன்)

அமர்ந்தனன் = விரும்பினன்

 
© TNPSC.Academy | All Rights Reserved.
Online Live Class

Group 2 & 2A - New Batch

Online Class + Books + Test Series
Click for More Details
WhatsApp: +91-7904003050
close-link