TNPSC Books
-
TNPSC பொதுத் தமிழ் Book - for Group 2, 2A, 3, 4 & VAO
₹1,000.00Original price was: ₹1,000.00.₹850.00Current price is: ₹850.00. -
TNPSC General English Book - for Group 2 & 2A
Rated 5.00 out of 5₹1,000.00Original price was: ₹1,000.00.₹850.00Current price is: ₹850.00.
Group 1 Courses
TNPSC Group 1 - Test Series - 2019
4.7₹3,500.00Original price was: ₹3,500.00.₹2,800.00Current price is: ₹2,800.00. 542Group 1 | Postal and Online Test Series | 2022
₹3,200.00Original price was: ₹3,200.00.₹2,800.00Current price is: ₹2,800.00. 88
Group 2 & 2A Courses
TNPSC Group 2 and 2A - Test Series - 2019 - தமிழ்
₹2,400.00Original price was: ₹2,400.00.₹1,800.00Current price is: ₹1,800.00. 175TNPSC Group 2 and 2A - Test Series - 2019
₹2,400.00Original price was: ₹2,400.00.₹1,800.00Current price is: ₹1,800.00. 527
TNPSC - Aptitude and Reasoning
TNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள் - Group 1, 2 & 2A 











திருக்குறள் பற்றி:
மக்கள் பயனுள்ள முறையில் வாழ வழிகாட்டிகளாக அமைபவை அறநூல்கள். அறநூல்களில் ‘உலகப் பொது மறை’ என்று போற்றப்படும் சிறப்புப் பெற்றது நம் திருக்குறள். திருக்குறளில் இல்லாத செய்திகளே இல்லை. ஏழு சொற்களில் மனிதர்களுக்கு அறத்தைக் கற்றுத்தரும் திருக்குறள். திருக்குறள் வாழ்கையின் அனைத்து பகுதிகளையும் எடுத்துரைக்கும் ஒரு சிறந்த வாழ்வியல் நூலாகும்.
திருக்குறள் சங்ககால இலக்கியத்தில் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் வகைப்படுத்தப்பட்டுள்ளது.
திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர்.
இந்நூலில் பெரும் பிரிவு பால் எனவும்,சிறு பிரிவு இயல் எனவும், அதனினும் சிறியது அதிகாரம் என்று வகுக்க பெற்றுள்ளது.
திருக்குறளில் 133 அதிகாரமும், அதிகாரத்துக்கு 10 குறளும் மொத்தம் 1330 குறளும் அடங்கியுள்ளது. ஒவ்வொரு குறளும் இரண்டு அடிகளையும் ஏழு சீரும் கொண்ட வெண்பாவாகும்.
இந்நூல் அறம், பொருள், இன்பம்( காமம்) என்னும் முப்பால்களை கொண்டுள்ளது
அறத்துப்பால் – ஒருவர் தன் அன்றாட வாழ்வில் கடைபிடிக்கப்பட வேண்டிய அறங்களைப் பற்றியும் யோக தத்துவத்தைப் பற்றியும் கூறுவது (அதிகாரங்கள் 1–38, 380 பாக்கள் )
பொருட்பால் – ஒருவர் தன் சமூக வாழ்வில் கடைபிடிக்கப்பட வேண்டிய அறங்களை, அதாவது சமூகம், பொருளாதாரம், அரசியல், மற்றும் நிருவாகம் ஆகிய விழுமியங்களைப் பற்றிக் கூறுவது (அதிகாரங்கள் 39–108, 700 பாக்கள்)
காமத்துப்பால் (இன்பத்துப்பால்) – ஒருவர் தன் அகவாழ்வில் கடைபிடிக்கப்பட வேண்டிய அறங்களைப் பற்றிக் கூறுவது (அதிகாரங்கள் 109–133, 250 பாக்கள்)
மூன்று பால்களின் கீழ் வரும் இயல்கள் :
அறத்துப்பால்
· பாயிரவியல்
· இல்லறவியல்
· துறவறவியல்
· ஊழியல்
பொருட்பால்
· அரசியல்
· அமைச்சியல்
· அரணியல்
· கூழியல்
· படையில்
· நட்பியல்
· குடியியல்
காமத்துப்பால் (இன்பத்துப்பால்)
· களவியல்
· கற்பியல்
பெயர்க்காரணம்
திருக்குறள் என்ற சொல் “திரு” மற்றும் “குறள்” என்ற இரண்டு தனிப்பட்ட சொற்களாலான ஒரு கூட்டுச் சொல் ஆகும். “திரு” என்பது தமிழில் மரியாதையைக் குறிக்கும் ஒரு சொல். குறள் என்றால் “குறுகிய, சுருக்கமான, சுருக்கப்பட்ட” என்று பொருள்.”குறுகிய செய்யுள்” என்பதே “குறள்”. இப்பாடல்கள் அனைத்துமே, குறள் வெண்பா என்னும் வெண்பா வகையைச் சேர்ந்தவை. இவ்வகை வெண்பாக்களால் ஆகிய தமிழின் முதல் நூலும், ஒரே பழைய நூலும் இதுதான்.
பிற பெயர்கள்
· தமிழர் திருமறை
· முப்பால்
· பொய்யாமொழி
· வாயுறைவாழ்த்து
· உத்தரவேதம்
· தெய்வநூல்
· திருவள்ளுவம்
· தமிழ்மறை
· பொதுமறை
· திருவள்ளுவ பயன்
· உலகபொதுநூல்
· அறவிலக்கியம்
திருக்குறளுக்கு எழுதப்பட்ட உரைகள்
10-ம் நூற்றாண்டு தொடங்கி 13-ம் நூற்றாண்டு வரை இருந்த காலகட்டத்தில் குறைந்தபட்சம் பத்து அறிஞர்கள் குறளுக்கு முதன்முறையாக உரைநடை பாணியில் உரை வரைந்தனர். பதின்மர் என்றழைக்கப்படும் இவர்கள் மணக்குடவர், தருமர், தாமத்தர், நச்சர், பரிதியார், திருமலையர், மல்லர், பரிப்பெருமாள், காலிங்கர், மற்றும் பரிமேலழகர் முதலானோர் ஆவர்.
இவர்களில் மணக்குடவர், பரிதியார், காலிங்கர், பரிபெருமாள், பரிமேலழகர் ஆகியோரது உரைகள் மட்டுமே முழுமையாகக் கிடைத்துள்ளன.
தருமர், தாமத்தர், நச்சர் ஆகியோரது உரைகளின் ஒரு சில பகுதிகள் மட்டுமே கிடைத்துள்ளன. திருமலையரது உரையும் மல்லரது உரையும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.
பதின்மரது உரைகளின் வாயிலாகவே திருக்குறள் இன்று நமக்கு முழுமையாகக் கிடைத்திருக்கிறது. பதின்மர் உரைகளில் சிறப்பாகக் கருதப்படுவது பரிமேலழகர், மணக்குடவர், மற்றும் காலிங்கர் ஆகியோரது உரைகள்தான்.
திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர்-மணக்குடவர்
திருக்குறளுக்கு சிறந்த உரை எழுதியவர் பரிமேலழகர் (மேலும் பலர் எழுதியுள்ளனர்)
திருக்குறளை உரையாசிரியர்களுள் 10-வது உரையாசிரியர்-பரிமேலழகர்
திருக்குறளின் மொழிபெயர்ப்புகள்
வடமொழி, இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், பெங்காலி, மராத்தி, குஜராத்தி, உருது ஆகிய இந்திய மொழிகளிலும், பர்மீயம், மலாய், சீனம், ஃபிஜியன், இலத்தீன், பிரெஞ்சு, ஜெர்மானியம், ரஷ்யன், போலிஷ், ஸ்வீடிஷ், தாய், ஆங்கிலம் ஆகிய அயல் மொழிகளிலும் அதுவரை குறளானது மொழிமாற்றம் செய்யப்பட்டிருந்தது.
திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்- ஜி.யு,போப்
திருக்குறள் இதுவரை 26 மொழிகளில் வெளிவந்துள்ளது.
திருக்குறளை ஆங்கிலத்தில் 40 பேர் மொழிபெயர்த்துள்ளனர்.
திருக்குறள் நரிக்குறவர் பேசும் வக்போலி மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
திருக்குறளின் சில முக்கிய குறிப்புகள் :
· திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு- 1812
· திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர்- தஞ்சை ஞானப்பிரகாசர்.
· திருக்குறள் அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடிகிறது.
· திருக்குறளில் உள்ள சொற்கள்-14,000
· திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள்- 42,194
· திருக்குறளில் தமிழ் எழுத்துக்கள் 247-இல், 37 எழுத்துக்கள் மட்டும் இடம் பெறவில்லை
· திருக்குறளில் இடம்பெறும் இருமலர்கள்-அனிச்சம், குவளை
· திருக்குறளில் அனிச்ச மலர் 4முறையும், யானை 8 முறையும், பாம்பு 3 முறையும் சுட்டப்பட்டுள்ளன.
· அன்னம்,கூகை (ஆந்தை), கொக்கு, காக்கை, புள்(பறவை), மயில், ஆமை, கயல் (மீன்), மீன் (விண்மீன்), முதலை, நத்தம்(சங்கு), பாம்பு, நாகம், என்பிழாது(புழு) ஆகியன இடம் பெற்றுள்ளன.
· திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம்- நெருஞ்சிப்பழம்
· திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை- குன்றிமணி
· திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து-ஒள
· திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள்- பனை, மூங்கில்
· திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட (1705) ஒரெஎழுத்து-னி
· திருக்குறளில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துக்கள்-வீ,ங
· திருக்குறளில் இடம்பெறாத இரு சொற்கள்- தமிழ், கடவுள்
· திருக்குறளில் 50 பிறமொழிச் சொற்கள் இடம் பெற்றுள்ளன .
· திருக்குறளில் ஒரே பெயரில் அமைந்த 2 அதிகாரங்கள் : குறிப்பறிதல்
· குறிப்பறிதல – (பொருட்பால் – அதிகாரம் 71)
· குறிப்பறிதல் – (காமத்துப்பால் – அதிகாரம் 110)
· திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண்- ஒன்பது.
· திருக்குறளுக்கும் ஏழு என்னும் எண்ணிற்கும் பெரிதும் தொடர்புள்ளது.
· உலக மொழியில் உள்ள அறநூல்களில் முதன்மையானது திருக்குறள்.
புகழுரைகள்
திரு.வி.க – ” திருக்குறள் ஒரு வகுப்பிற்கோ ஒரு மதத்திற்கோ ஒரு நிறத்திற்கோ ஒரு மொழியார்க்கோ ஒரு நாட்டிற்கோ உரியதன்று அது மன்பதைக்கு உலகுபொது”
பாரதியார் – ” வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்த வான் புகழ் கொண்ட தமிழ்நாடு “
“கம்பனைப் போல் வள்ளுவனைப் போல் இளங்கோவைப் போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை “
பாரதிதாசன் – ” வள்ளுவனை பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே”, “இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே”
கபிலர் –“தினையளவு போதாச் சிறுபுல்நீர் நீண்ட பனையளவு காட்டும் படித்தால்- மனையளகு வள்ளைக்கு உறங்கும் வளநாட வள்ளுவனார் வெள்ளைக் குறட்பா விரி”
மனோன்மணியம் சுந்தரனார் – “வள்ளுவர் செய் திருக்குறளை மறுவற நன்குணர்ந்தோர்கள் உள்ளுவரோ மனுவாதி ஒரு குலத்துக் கொருநீதி”.
சுத்தானந்தபாரதி – “எம்மதம் எவ்வினமும் எந்நாளும் சம்மதம் என்று ஏற்கும் தமிழ் வேதம்”
கி.ஆ.பெ.விஸ்வநாதன் – “திருவள்ளுவர் தோன்றியிராவிட்டால் தமிழன் எனும் ஓர் இனம் இருப்பதாக உலகத்தார்க்கு தெரியாது”
“திருக்குறள் என்று நூல் தோன்றியிராவிட்டால் தமிழ் மொழி உலகிற்கு தெரியாது “
ஔவையார் – “அணுவை துளைத்தேழ் கடலைப் புகட்டி குறுகத் தறித்த குறள்”
கால்டுவெல் – “உலகினில் நாகரிகம் முற்றிலும் அழிந்து விட்டாலும் திருக்குறளும் கம்பன் காவியமும் இருந்தால் போதும் மீண்டும் அதனை புதுப்பித்து விடலாம்”
காந்தியடிகள் – “சோவியத்து அறிஞர் தால்சுதாய் வழிகாட்டுதலின திருக்குறள் மூலத்தை நேரடியாக படிக்க விரும்பியே தமிழ் பயில தொடங்கினேன் “
இடைகாடர் – “கடுகை துளைத்து ஏழ்கடல் புகட்டி குறுகத் தரித்து குறள்”
நூலாசிரியர் பற்றி
திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர்.வள்ளுவரைப் பற்றிய நம்பகப்பூர்வமான தகவல்கள் மிகவும் அரிதாகவே கிடைக்கப்பெறுகின்றன.அவரது இயற்பெயரையோ அவர் இயற்றிய நூலான திருக்குறளின் உண்மைப் பெயரையோ இன்றுவரை யாராலும் அறுதியிட்டுக் கூற இயலவில்லை.திருக்குறள் கூட அதன் ஆசிரியரின் பெயரையோ அவரைப் பற்றிய விவரங்களையோ எங்கும் குறிப்பிடுவதில்லை.குறளுக்கு அடுத்து சில நூற்றாண்டுகளுக்குப் பின் தோன்றிய சைவமத நூலான திருவள்ளுவமாலையில் தான் முதன்முறையாகத் திருவள்ளுவரின் பெயர் குறிப்பிடப்படுகிறது.
திருவள்ளுவரின் வேறு பெயர்கள்
· தேவர்( நச்சினார்கினியர் )
· முதற்பாவலர்
· தெய்வப்புலவர் (இளம்பூரணார்)
· நான்முகனார்
· மாதானுபங்கி(தாய்க்கு நிகரானவர்)
· செந்நாப்போதார்
· பெருநாவலர்
· நாயனார்
· பொய்யில் புலவர் (மணிமேகலை)
· பொய்யாமொழிப் புலவர்
· வான்புகழ் வள்ளுவர்