fbpx
  • No products in the basket.

ஐம்பெருங் காப்பியங்கள்

முற்காலத்தில் தமிழில் எழுதப்பட்ட சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி, சீவக சிந்தாமணி என்னும் காப்பியங்கள் ஒருங்கே ஐம்பெருங் காப்பியங்கள் என அறியப்படுகின்றன. இவற்றுள் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் சங்கம் மருவிய காலத்திலேயே தோன்றியவை. ஏனையவை சோழர் காலத்தில் தோன்றியவையாகும்.

ஐம்பெரும் காப்பியங்கள் என்ற முதன் முதலில் கூறியவர் மயிலைநாதர்

ஐம்பெரும் காப்பியங்களின் நூல் பெயர்களை முதன் முதலாகக் குறிப்பிட்டவர் கந்தப்பதேசிகர் (திருத்தணிகைஉலா)

நூல் ஆசிரியர் பாவகை நூல் அமைப்பு சமயம்
சிலப்பதிகாரம் இளங்கோவடிகள் நிலைமண்டில ஆசிரியப்பா +  கொச்சக கலிப்பா

3 காண்ட ம், 30

காதை, 5001அடிகள்
சமணம்
மணிமேகலை சீத்தலைச் சாத்தனார் நிலைமண்டில ஆசிரியப்பா

30 காதை , 4755

வரிகள்
பௌத்தம்
சீவகசிந்தாமணி திருத்தக்கதேவர் விருத்தம்

13 இலம்பகம்,

3145 பாடல்கள்
சமணம்
வளையாபதி   விருத்தம் 72 பாக்கள் கிடைத்துள்ளன சமணம்
குண்டலகேசி நாதகுத்தனார் விருத்தம் 224 பாடல்கள் கிடைத்துள்ளன பௌத்தம்

ஐஞ்சிறுகாப்பியங்கள்

ஐஞ்சிறுகாப்பியங்கள் பற்றி:

ஐஞ்சிறுகாப்பியங்கள் அனைத்துமே சமணக் காப்பியங்கள்

ஐஞ்சிறுகாப்பியங்கள் என்ற சொல்லை ஏற்படுத்தியவர் - சி.வை.தாமோதரம் பிள்ளை

ஐஞ்சிறுகாப்பியங்கள்:

· நாககுமார காவியம்

· உதயகுமார காவியம்

· யசோதர காவியம்

· நீலகேசி

· சூளாமணி


நூல் ஆசிரியர் பாடல்கள் பாவகை சமயம் வேறுப்பெயர் முக்கிய காதாப்பாத்திரங்கள் & நிகழ்வுகள்
நாககுமார காவியம்  

சருக்கம் - 5

பாடல் -  170
விருத்தப்பா சமணம் நாகபஞ்சமி கதை

வர்த்தமான மகாவீரரின் அறிவுரை பற்றிக் கூறும் நூல்

மனதையும் போகத்தையும் மிகுதியாக கூறும் சமண நூல்.
உதயகுமார காவியம்  

சருக்கம் - 6

பாடல் - 369
விருத்தப்பா சமணம் மூலநூல்- பெருங்கதை

கதைத்தலைவன் - உதயணன்

உதயணனின் மற்றோரு பெயர் -விச்சை வீரன்.

உதயணனின் பெற்றோர் - சதானிகன், மிருகாபதி

உதயணனின் நாடு - வத்துவ நாடு

உதயணன் யாழின் பெயர் - கோடபதி
யசோதர காவியம் வெண்ணாவலூர் உடையார்வேள்

சருக்கம் - 5 

பாடல் - 320
விருத்தப்பா சமணம் உயிர்க்கொலை “மாளவ பஞ்சம்” என்னும் கருநாடக இசை பற்றி கூறப்பட்டுள்ளது.
நீலகேசி  

சருக்கம் - 10

பாடல் - 894
விருத்தப்பா சமணம் நீலகேசித் தெருட்டு இந்நூல் குண்டலகேசி என்னும் நூலிற்கு எதிராக எழுதப்பட்டது
சூளாமணி தோலாமொழித்தேவர்

சருக்கம் - 12

விருதப்பாக்கள் - 2330
விருத்தப்பா சமணம்   சூளாமணியின் கதை நாயகன் -  திவிட்டன்
 

TNPSC Materials

Group 1 Courses

© TNPSC.Academy | All Rights Reserved.
Click to Download
close-image