• No products in the basket.

TNPSC Current Affairs | Tamil | 17 October 2026

தமிழ்நாடு

கல்வி மற்றும் அறிவுசார் உள்கட்டமைப்பு

  • கோயம்புத்தூரில் ‘பெரியார் அறிவுலகம்’ திறப்பு:
    • நிகழ்வு: கோயம்புத்தூர் காந்திபுரத்தில் ‘பெரியார் அறிவுலகம்’ எனும் பிரம்மாண்டமான நூலகம் மற்றும் அறிவியல் மையம் திறந்து வைக்கப்பட்டது.
    • முக்கிய உள்கட்டமைப்பு வசதிகள்:
  • இங்கு 80 லட்சம் புத்தகங்கள், 356 இருக்கைகள் கொண்ட அரங்கம், விண்வெளிப் பயணம் போன்ற அனுபவத்தை வழங்கும் 90 இருக்கைகள் கொண்ட கோளரங்கம் (பிளானட்டேரியம்), குழந்தைகளுக்கான நூலகம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேகப் பிரிவு ஆகியவை உள்ளன.
  • மேலும், கட்டிடத்தின் மேல் தளத்தில் 100 இருக்கைகள் கொண்ட வானியல் ஆய்வு மையம், தொழில்முனைவோர் மையம், டிஜிட்டல் நூலகம் மற்றும் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராவோருக்கான பிரத்யேக தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தேசிய அளவில்

பாதுகாப்பு மற்றும் உள்நாட்டு கப்பல் கட்டுமானம்

  • ‘ஐஎன்எஸ் சமர்த்தக்’ (INS Samarthak) நாட்டுக்கு அர்ப்பணிப்பு:
    • கர்நாடக மாநிலம் கார்வாரில், லார்சன் அண்ட் டூப்ரோ (L&T) நிறுவனத்தால் கட்டமைக்கப்பட்ட இரண்டு பன்நோக்குக் கப்பல்களில் முதலாவதான ‘ஐஎன்எஸ் சமர்த்தக்’ கப்பலை இந்தியக் கடற்படை நாட்டுக்கு அர்ப்பணித்தது.
    • முக்கியத்துவம் மற்றும் சிறப்பம்சங்கள்: 75 சதவீதத்திற்கும் அதிகமான உள்நாட்டு உதிரிபாகங்களைக் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ள இந்தக் கப்பல், உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட கடற்படை உணர் கருவிகள் (sensors) மற்றும் ஆயுத அமைப்புகளை, முழுமையான பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதற்கு முன்பாகச் சோதித்துப் பார்ப்பதற்கும், மதிப்பீடு செய்வதற்கும் ஒரு தளமாகச் செயல்படுகிறது. இது தவிர, கடல்சார் ரோந்துப் பணிகள், கண்காணிப்பு மற்றும் பேரிடர் கால மீட்புப் பணிகளுக்கும் இது பயன்படுத்தப்படும்.
 

TNPSC Books

Group 1 Courses

© TNPSC.Academy | All Rights Reserved.