• No products in the basket.

4.4. அண்ணாவின் கடிதம்

“திராவிட நாடு” என்ற இதழில் கடிதங்களை எழுதினார். ‘தம்பிக்கு’ என்று விரித்து எழுதியுள்ளார்.

கடித இலக்கியத்தை வளர்த்தவர்களில் பேரறிஞர் அண்ணாவிற்கு பெரும் பங்கு உண்டு

இவருடைய கடிதத்தில் தமிழ் தமிழர் தமிழ்ப்பண்பாடு தமிழர் தாழ்வும் உயர்வும் தமிழர் செய்ய வேண்டியது. பகுத்தறிவு ஆரிய எதிர்ப்பும் போன்ற கருத்துகள் பிளிர்கின்றன.

தாயும் சேயும் கொஞ்சி மகிழ்வது போல நிலமடந்தையும் தன் மக்களுக்கு வளம் அளிக்கும் முன்பு விளையாட்டு காட்டுவாள். “உழைத்துப்பெறு! உரிய நேரத்ல் பெறு! முயற்சி செய்து பெறு! என்று அன்புடன் ஆணையிடுகிறாள்.

தன் கடிதத்தில் கவிஞர் முடியரசன் தமிழர் திருநாளான தை முதல் நாளை “உழைப்பினை உணர்த்தும் பெருநாள்” என்றும் “புதுமை இன்பம் பூணும் நன்நாள்” என்றும் பாடியிருப்பதை எடுத்துக்காட்டியுள்ளார்.

“பொங்குக இன்பம்! பொங்குக புதுமை! பொங்குக பொலிவு! வளம் பெருகிடுக! வாழ்வு சிறந்திடுக! வாழ்வு சிறந்திடு! வாழ்க தமிழ்! வாழ்க தமிழகம்!” என்று வாழ்த்துகளுடன் தம்பிகளைக் கேட்டுக்கொள்கிறார்.

 

TNPSC Books

Group 1 Courses

© TNPSC.Academy | All Rights Reserved.