• No products in the basket.

4.2. காந்தியடிகளின் கடிதங்கள்

1917-ம் ஆண்டு புரோச் நகரில் நடைபெற்ற இரண்டாவது கல்வி மாநாட்டில் காந்தியடிகள் நிகழ்த்திய தாய்மொழி வழிக்கல்வி பற்றிய தலைமை உரை மாணவர்களுக்கு ஏற்ற வண்ணம் கடித வடிவில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் இடம்பெற்ற முக்கியக் கருத்துக்கள்.

“பயிற்றுமொழி குறித்து சிந்திக்காமல் கல்வி கற்பிப்பது அடித்தளமில்லாமல் கட்டடம் எழுப்புவது போன்றது.

“ரவீந்தரநாத் தாகூரின் இலக்கிய நடையின் உயர்வு அவருடைய ஆங்கில அறிவால் மட்டுமின்றி தாய்மொழி மொழிப்புலமையினாலும் வந்ததே ஆகும். முன்சிராம் பேச்சாற்றலுக்குக் காரணம் அவர் தம் தாய் மொழி அறிவே; மதன் மோகன் மாளவியாவின் ஆங்கிலப் பேச்சு தங்கத்தைப் போல் ஒளி வீசுகிறது.

“வேலை தெரியாத தொழிலாளி தன் கருவியின் மீது சீற்றம் கொண்டானாம். குறைபாடு மொழியைப் பயன்படுத்துபவர்களிடம் தான் இருக்கிறது. மொழியில் இல்லை.

“படித்த இந்தியர் அனைவரும் அயல் மொழியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பதில்லை. இவ்வாறு அயல் மொழியிடம் ஒரு பற்றுதலைத் தோற்றுவிப்பதோ ஊக்கமளிப்பதோ தேவையில்லை.

“இந்தியாவில் தாய் மொழிக்கல்வி அளிக்கப்பட்டு இருந்தால் ஜெகதீ சந்திர போஸ் பி.சி.ராய் போன்ற நம்மிடையே பல போஸ்களும் ராய்களும் தோன்றி இருப்பார்கள்.

“பள்ளிக்கூடம் வீட்டைப் போன்று இருக்க வேண்டும். குழந்தைக்கு வீட்டில் தோன்றும் எண்ணங்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்க வேண்டும். தெரிந்தறியாத ஒரு மொழியின் மூலம் கல்வி கற்பது இந்த இணக்கத்தைக் குறைத்து விடும்.

காந்தியடிகள் தன் கடிதங்களைக் குஜராத்தி மொழியில் எழுதும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். தினந்தோறும் தனிநபர்களுக்கு பத்திரிக்கைகளுக்கும் கடிதம் எழுதினார்.

காந்தியடிகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட கடிதங்கள் பகுதி – 1 வால்ஜி கோவிந்தஜி தேசாய் அவர்களால் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. முதல் பதிப்பு 1962ம் ஆண்டு வெளிவந்தது. ஆசிரம சகோதரிகள் ஆசிரமக் குழந்தைகள் பணியாட்கள் போன்றோருக்குப் பல தலைப்புகளில் கடிதம் எழுதினார்.

 

TNPSC Books

Group 1 Courses

© TNPSC.Academy | All Rights Reserved.