fbpx
  • No products in the basket.

2.5. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

இயற்பெயர்: கல்யாணசுந்தரம்

பெற்றோர் : அருணாச்சலம்-விசாலட்சி

பிறந்த ஊர் : தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், செங்கப்படுத்தான்காடு

பிறப்பு:13.4.1930

மறைவு : 8.10.1959


சிறப்புப் பெயர் :

· மக்கள் கவிஞர்

· 1981-ம் ஆண்டு தமிழக அரசு பாவேந்தர் விருது வழங்கியது.

· 1993-ல் கவிஞருடைய பாடல்கள் அனைத்தும் நாட்டுடைமை ஆக்கப்பட்டது .

· கல்யாணசுந்தரம் அவர்களின் பன்பரிமாணங்கள் : விவசாயி, மாடுமேய்ப்பவர், வியாபாரி, உப்பளத் தொழிலாளி, தண்ணீர் வண்டிக்காரர், டிரைவர், அரசியல்வாதி, பாடகர், நடிகர், நடனக்காரர், கவிஞர்.

· பொதுவுடைமைக் கருத்துகளைத் திரைப்படப் பாடலில் புகுத்தியவர் .

· முதல் பாடல் "நல்லதைச் சொன்னா நாத்திகனா" .

· பட்டுக்கோட்டையார் பாடல் எழுதிய முதல் படம் படித்தபெண் .

· கவிஞர் 1952-ல் பாண்டிச்சேரி சென்று பாவேந்தர் பாரதிதாசனிடம் தமிழ் பயின்றார்.

· பாரதிதாசன் நடத்திய குயில் இதழில் உதவியாளராகப் பணியாற்றினார்.

· 'எனது வலதுகை' என்று பாரதிதாசனால் புகழப்பட்டவர் .

· 'அவர் கோட்டை நான் பேட்டை' என வேடிக்கையாகச் சொன்னவர் உடுமலை நாராயணகவி


மேற்கோள்கள்

· “ஆரம்பமாவது பெண்ணுக்குள்ளே – மனிதன்

ஆடி அடங்குவது மண்ணுக்குள்ளே”

· “தூங்காதே தம்பி தூங்காதே! – நீயும்

சோம்பேறி என்ற பெயர் வாங்காதே”

· “கொடுத்தவனே எடுத்துக் கொண்டாண்டி”

என்ற புகழ் பெற்ற வரிகள் இவருடையது ஆகும்.

 

TNPSC Materials

Group 1 Courses

© TNPSC.Academy | All Rights Reserved.
Click to Download
close-image