www.tnpsc.academy – TNPSC Tamil Current Affairs October 05, 2017 (05/10/2017)
தலைப்பு: பொது நிர்வாகம், சர்வதேச நிகழ்வுகள், இந்திய வெளியுறவு கொள்கைகள்
இந்தியாவிற்கும் லிதுவேனியாவிற்கும் இடையே குற்றவாளியை ஒப்படைப்பதற்கான ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை இந்தியாவிற்கும் லிதுவேனியாவிற்கும் இடையே குற்றவாளிகளை ஒப்படைப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடவும், அதை உறுதிப்படுத்துவதற்கும் தனது ஒப்புதலை வழங்கியது.
இந்த ஒப்பந்தத்தின் நன்மைகள்:
பயங்கரவாதிகள், பொருளாதார குற்றவாளிகள், மற்றும் இதர குற்றவாளிகளை லிதுவேனியாவிலிருந்து கோரிப் பெறுவதற்கும் லிதுவேனியாவிற்கு அனுப்புவதற்குமான சட்டரீதியான கட்டமைப்பினை இந்த ஒப்பந்தம் வழங்கும்.
இந்தியாவிற்கு எதிரான குற்றங்களைப் புரிந்து தலைமறைவாக உள்ள குற்றவாளிகளின் மீது குற்றரீதியான வழக்கு தொடுப்பதற்காக லிதுவேனியாவிலிருந்து கோரிப் பெறுவதற்கு இந்த ஒப்பந்தம் உதவி செய்யும்.
ஒப்படைக்கப்படுவது என்ன?
அமைதியை உறுதிப்படுத்தவும், பொதுமக்களிடையே அமைதி நிலவுவதை உறுதிப்படுத்தும் நோக்கத்துடன் சட்டரீதியான நடவடிக்கைகளுக்குள் குற்றவாளிகளை இது கொண்டு வரும்.
இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தங்களால் இந்த செயல்முறை நடத்தப்படுகிறது.
_
தலைப்பு : செய்திகளில் இடங்கள், பொது நிர்வாகம், சுற்றுச்சூழல் மற்றும் சூழலியல்
அலகாபாத்தில் ஆமை சரணாலயம் அமைக்கப்பட உள்ளது
கங்கை நதியின் நிறைந்த நீரின் பல்லுயிர் பாதுகாப்பதற்காகவும் அதிகரித்துவரும் மானுடவியல் அழுத்தங்களை குறைப்பதற்காகவும் சங்கம் என்ற இடத்தில் உள்ள நதி பல்லுயிர் பூங்காவுடன் இணைந்து அலபாத்தில் ஒரு ஆமை சரணாலயத்தினை மேம்படுத்த நமாமி கங்கை திட்டத்தின் கீழ் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
முக்கிய குறிப்புகள்:
இந்த திட்டம் ஆனது, சுற்றுச்சூழலில் தங்கள் பங்களிப்பினை பற்றி பார்வையாளர்களை அறிந்து கொள்ள உதவுகிறது.
மேலும் அவர்களின் பாத்திரங்களும் பொறுப்புகளும் அவர்களுக்கு தெளிவாக விளக்கிடவும் சுற்றுசூழலில் கூட்டு இருப்பு ஆபத்துகள் பற்றி அவர்களின் புரிதலை மேம்படுத்தவும் மிகவும் தேவையான தளத்தை இது வழங்குகிறது.
மனித இயற்கை நடவடிக்கைகளின் தாக்கத்தை குறைப்பதற்காக விழிப்புணர்வை உருவாக்குதலுக்கும் இது உதவுகிறது.
தலைப்பு: விருதுகள் மற்றும் மரியாதைகள், செய்திகளில் நபர்கள்
வேதியியலுக்குக்கான நோபல் பரிசு இந்த ஆண்டு மூன்று விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
சுவீடனை சேர்ந்த விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் நினைவாக மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் 2017-ம் ஆண்டு வேதியலுக்கான நோபல் பரிசை ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த ழாக் துபோசே, அமெரிக்காவைச் சேர்ந்த ஜோகிம் பிராங்க், லண்டனை சேர்ந்த ரிச்சர்ட் ஹெண்டர்சன் ஆகிய மூவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
உயிரி வேதியியலை புதிய யுகத்தை நோக்கி நகர்த்திய ஆய்வுக்காக இந்த மூவருக்கும் நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
முக்கிய குறிப்புகள்:
இம்முவரும் உயிர் மூலக்கூறு வடிவங்களை எளிமையாக படம்பிடித்து ஆய்வில் நுணுக்கங்களை அதிகரிக்க மேம்பட்ட முறையிலான கிரையோ எலக்ட்ரான் மைக்ரோஸ்கோபியை கண்டுபிடித்துள்ளனர்.
உயிரி வேதியல், மருத்துவ துறை ஆகியவற்றில் இந்த கண்டுபிடிப்புகள் முக்கிய பங்காற்ற உள்ளன.
மானுடக் கண்களுக்குத் தெரியாத விஷயங்கள் ஏராளமாக உள்ளன, இவற்றை வெற்றிகரமாக படம்பிடிக்கும் போதுதான் விஞ்ஞானத்தில் மிகப்பெரிய கண்டுபிடிப்புகள் நிகழ்கின்றன.
இதுவரை உயிர்வேதியியல் வரைபடங்கள் உயிரிகளின் மூலக்கூறு அமைப்புகளை சரிவர படமாகக் காண்பிக்கவில்லை, படங்களுக்குப் பதிலாக வெற்றிடம்தான் அங்கு இருக்கும்.
தற்போது இந்த நோபல் விஞ்ஞானிகள் கண்டுபிடித்த கிரையோ-எலெக்ட்ரான் மைக்ரோஸ்கோப் இதனை புரட்சிகரமாக மாற்றியமைக்கும். இதனால் மருத்துவம் மற்றும் மூலக்கூறு துறையில் புதிய கண்டுபிடிப்புகள் பிறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
_
தலைப்பு : விளையாட்டு மற்றும் பதக்கங்கள், செய்திகளில் புதிய நிகழ்வுகள்
இந்தியா தனது முதல் வுஷு உலக சாம்பியன்ஷிப் தங்கம் வென்றது
ரஷ்யாவின் கசான் நகரில் நடைபெற்ற வுஷு உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்க பதக்கம் வென்ற முதல் இந்திய விளையாட்டு வீரர் பூஜா கொடியன் ஆனார்.
பெண்கள் 75 கிலோ சாண்டா பிரிவில் இறுதிப் போட்டியில் ரஷ்யாவின் எவன்ஜியா ஸ்டீபனோவாவை போட்டியிட்டு தோற்கடித்ததன் மூலம் இந்த வெற்றியை பெற்றார்.
சி.ஆர்.பீ.எஃப் தலைமை கான்ஸ்டபுளாக உள்ள பூஜா, முன்னதாக தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்றவர் மற்றும் 2013 உலக சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கம் வென்றவர்.
_
தலைப்பு : புதிய நியமனங்கள், செய்திகள் உள்ள நபர்கள், சமீபத்திய நிகழ்வுகள்
பூஜா கபூர் – மாசிடோனியா குடியரசுக்கு இந்தியாவின் அடுத்த தூதுவர்
2017 அக்டோபர் 4 ம் தேதி, பல்கேரியாவின் இந்திய தூதர் திருமதி பூஜா கபூர், மாசிடோனியா குடியரசுக்கான அடுத்த தூதுவராக நியமிக்கப்பட்டார்.
ஒரே சமயத்தில் இவர் இரண்டு நாடுகளுக்கும் தூதுவராக பணியாற்றுவார்.
முக்கிய குறிப்புகள்:
திருமதி. பூஜா கபூர் 1996 ம் ஆண்டு பிரிவின் இந்திய வெளிநாட்டு சேவை (IFS) அதிகாரி ஆவார்.
அவர் தற்போது பல்கேரியா குடியரசின் இந்திய தூதராக பணியாற்றி வருகிறார்.
அவர் சோபியா, பல்கேரியாவின் குடியரசில் வசித்து வருகிறார்.
_
தலைப்பு : சமீபத்திய நிகழ்வுகள்
உலக ஆசிரியர்கள் தினம் – அக்டோபர் 5
2017 அக்டோபர் 5 ஆம் தேதி, உலக ஆசிரியர்கள் தினம் உலகம் முழுவதும் காணப்படுகிறது.
முக்கிய குறிப்புகள்:
உலக ஆசிரியர்கள் தினம் 1994 முதல் சர்வதேச ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.
அதன் நோக்கம் ஆசிரியர்களுக்கு ஆதரவு திரட்டுவதும் எதிர்கால தலைமுறையினரின் தேவைகளை ஆசிரியர்களால் தொடரப்படுவதையும் உறுதிப்படுத்துவதாகும்.
2017 உலக ஆசிரியர்களின் தினத்தின் கருப்பொருள் : ‘சுதந்திரமாக கற்பித்தல், ஆசிரியர்களை மேம்படுத்துதல்’.