Site icon TNPSC Academy

Tamil TNPSC Current Affairs jan 23, 2017

Tamil TNPSC Current Affairs jan

[vc_row][vc_column][vc_column_text]

www.tnpsc.academy – Tamil TNPSC Current Affairs jan 23, 2017 (23/01/2017)

 

Download as PDF

தலைப்பு : வரலாறு – சமீபத்திய நிகழ்வுகள்

ஜல்லிக்கட்டு & கம்பலா (Kambala)

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க, அறிவிக்கப்பட்ட ஒரு அவசர சட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் கொடுத்துள்ளது.

இந்த நிலையில், கம்பலா (kambala) (எருமைமாடுகள் பந்தயம்) மீதான தடையை நீக்குவதற்கு கடலோர கர்நாடகாவில் போராட்டம் நடைபெறுகிறது.

Kambala:

Kambala கர்நாடகாவின் கடற்கரையோரங்களில் பாரம்பரியமாக நடைபெறும் வருடாந்திர எருமை பந்தயம் ஆகும்.

Kambala பருவமானது பொதுவாக நவம்பரில் தொடங்கி மார்ச் மாதம் வரை நீடிக்கும்.

_

தலைப்பு : வரலாறு – சமீபத்திய நிகழ்வுகள்

INS விக்ரமாதித்யா கப்பலில் ஏடிஎம்

இந்தியாவின் மிகப்பெரிய போர்க்கப்பலான INS விக்ரமாதித்யா கப்பலில் ஏடிஎம் இயந்திரத்தை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா நிறுவியுள்ளது.

இது உயர் கடல்களில் ஒரு போர்க்கப்பலில் ஒரு செயல்பாட்டு ஏடிஎம் பெறுவது இதுவே முதல் முறையாகும்.

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா கப்பல்களில் ATM வசதியுடன் பணம் எடுத்தல், வங்கிக்கணக்கின் சிறிய அறிக்கை பெறுதல், வங்கி இருப்பு விவரங்களை பெறுதல் மற்றும் ATM ரகசிய எண்ணினை மாற்றுதல் போன்ற வசதிகள் அடங்கும்.

_

தலைப்பு : அரசியல் விஞ்ஞானம் – மாநிலங்களின் அமைப்பு மற்றும் விவரங்கள்

குஜராத்தின் கின்னஸ் சாதனை

குஜராத்தின் ராஜ்கோட்டில் நடைபெற்ற “Kagvad” நிகழ்வின் போது தேசிய கீதம் பாடுவது மூலம் 3.5 லட்சம் மக்கள் ஒரு புதிய உலக சாதனையை படைத்துள்ளனர்.

இந்த விழாவில் நகரில் புதிதாக கட்டப்பட்ட Khodal தாம் கோவிலில் Khodiyar தெய்வ சிலை நிறுவப்பட்டது.

தலைப்பு : வரலாறு – இந்தியாவின் கலாசார நிகழ்வுகள்

தேஷ் பிரேம் திவாஸ் (Desh Prem Divas) – போஸ்ஸின் பிறந்த நாள்

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் பிறந்த நாளான ஜனவரி 23ஆம் தேதி அன்று “தேஷ் பிரேம் திவாஸ்” (Desh Prem Divas) அல்லது நேதாஜி ஜெயந்தி என பல இடங்களில் கொண்டாடப்படுகிறது.

போஸ் அவர்கள் இந்திய சுதந்திர போராட்டத்தின் மிக முக்கியமான தலைவர்களில் ஒருவராவார்.

அவர் மக்கள் மத்தியில் தேசிய ஒருமைப்பாடு, தியாகம் மற்றும் மத நல்லிணக்கம் உணர்வு பரவ அரும்பாடுபட்டார்.

போஸ் பற்றி:

சுதந்திர போராட்டத்திற்காக நேதாஜி அவர்கள் Azad Hind Fauz-னை உருவாக்கி இந்திய தேசிய இராணுவத்தினை வழிநடத்தினார்.

மகாத்மா காந்தி அவர்களின் வன்முறையற்ற அணுகுமுறையை எதிர்த்து, கண்டித்து புரட்சிகரமான முறையில் வன்முறையான வகையில் வாதிட்டார்.

அவர் “அனைத்து இந்திய பார்வர்டு பிளாக்” என்ற பெயரில் மே 3, 1939ல் தனது சொந்த கட்சியினை நிறுவினார்.

நேதாஜி ஜெயந்தி மேற்கு வங்க மாநிலத்தில் ஒரு பொது விடுமுறை என கொண்டாடப்படுகிறது.

[/vc_column_text][vc_column_text]

For more Tamil TNPSC Current Affairs jan and English visit : www.tnpsc.academy/current-affairs

Subscribe our Newsletter to get Daily Tamil TNPSC Current Affairs jan and English on your Inbox.

 

Read Tamil TNPSC Current Affairs jan and English. Download daily Tamil TNPSC Current Affairs jan and English for TNPSC and Monthly compilation of Tamil TNPSC Current Affairs jan and English as PDF.

[/vc_column_text][/vc_column][/vc_row]

Exit mobile version