[vc_row][vc_column][vc_column_text]
www.tnpsc.academy – TNPSC Current Affairs in Tamil Jan 10, 2017 (10/01/2017)
தலைப்பு : வரலாறு – சமீபத்திய நிகழ்வுகள்
ஏர் இந்தியா – 3வது மோசமான விமான நிறுவனம்
FlightStats – ன் சமீபத்திய அறிக்கையின்படி, மோசமான சர்வதேச விமான நிறுவனங்கள் பட்டியல் 2016-ல் ஏர் இந்தியா உலகின் மூன்றாவது மோசமான விமான நிறுவங்களின் இடத்தில் உள்ளது.
El Al – 56%, Iceland air – 41.05% முறையே முதல் மற்றும் இரண்டாம் இடங்களில் உள்ளது.
_
தலைப்பு : வரலாறு – புத்தகங்கள் மற்றும் ஆசிரியர்கள்
Akhada – மஹாவீர் சிங் போகட் வாழ்க்கை வரலாறு
முன்னாள் மல்யுத்த வீரர் மற்றும் ஒரு பயிற்சியாளரான மஹாவீர் சிங் போகட் அவர்களின் வாழ்க்கை வரலாறு ஆனது விளையாட்டு பத்திரிகையாளர் Sourabh துக்கலைக் கொண்டு எழுதப்பட்டிருக்கிறது.
இந்த புத்தகம் பற்றி:
இந்த புத்தகம் ஆனது ஹரியானாவில்லுள்ள ஒரு சிறிய கிராமத்தில் இருந்து அனைத்து பிரச்சனைகளுக்கு எதிராக நாட்டிற்காக பதக்கங்களை வென்ற, மஹாவீர் போகட், அவரது மகள்கள் மற்றும் உறவினர்களின் வாழ்க்கை பயணத்தை சொல்கிறது.
Phogat அவர்களுக்கு இந்திய அரசின் துரோணாச்சார்யா விருது வழங்கப்பட்டது மற்றும் அவர் கீதா போகட், பபிதா குமாரி, ரித்து மற்றும் சங்கீதா ஆகியோர்களின் தந்தை மற்றும் பயிற்சியாளர் ஆவார் .
Phogat அவர்களின் உறவினர்களான வினேஷ் மற்றும் பிரியங்கா காமன்வெல்த் விளையாட்டினில் தங்க பதக்கம் வென்றுள்ளனர்.
2010 காமன்வெல்த் போட்டியில் பெண்கள் மல்யுத்த போட்டியில் 55kg ஃப்ரீஸ்டைல் பிரிவில் இந்தியாவின் முதல் தங்கப் பதக்கம் வென்றவர் கீதா போகட்.
அவர் ஒலிம்பிக் தகுதி பெற்ற முதல் இந்திய பெண் மல்யுத்த வீரர் ஆவார்.
Babitha குமாரி, 2012 உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றவர் மற்றும் 2014 காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவர்.
இந்திய வாழ்க்கை வரலாற்றுப் படமான Dangal போகட் அவர்களின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டது.
_
தலைப்பு : வரலாறு – சமீபத்திய நிகழ்வுகள்
உலக இந்தி தினம்
நமது இந்தோ-ஆரிய மொழிகளை கௌரவிக்கும் பொருட்டு உலகம் முழுவதும் 12வது உலக இந்தி தினம் ஜனவரி 10, 2017 அன்று கொண்டாடப்பட்டது.
அறிக்கையின்படி, இந்தி உலகின் நான்காவது மிக அதிகமாக பேசப்படும் முதல் மொழியாகும்.
_
தலைப்பு : அரசியலறிவியல் – பொது நிர்வாகம்
உலகின் மிகப்பெரிய LED தெரு விளக்கு திட்டம்
தற்போது நாட்டிற்காக தெற்கு தில்லியின் முனிசிபல் கார்ப்பரேஷன் (SDMC) பகுதியில் இயங்கும், LED அடிப்படையில் தெரு விளக்கு தேசிய நிகழ்ச்சித் திட்டம் (SLNP) ஆனது உலகின் மிகப்பெரிய தெரு விளக்கு மாற்று திட்டமாக உள்ளது.
SLNP திட்டம் தற்போது பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், அசாம், திரிபுரா, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், தெலுங்கானா, ஆந்திர பிரதேசம், கேரளா, கோவா, மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இயங்குகிறது.
_
தலைப்பு : வரலாறு – இந்தியா மற்றும் அதன் அண்டை நாடுகள்
பாகிஸ்தான் பாபர்-3 ஏவுகணை சோதனை
பாகிஸ்தான் அதன் முதல் நீர்மூழ்கி-க்ரூஸ் ஏவுகணையான அணு ஆயுதங்களை ஏற்றிச் செல்லும் திறன் கொண்ட 450km வரை செல்லக்கூடிய ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை எய்தல் செய்துள்ளது.
பாபர்-3 ஏவுகணையானது நீருக்கடியில் இருந்தும் மொபைல் மேடையில் இருந்தும் ஏவப்படுகிறது. மற்றும் அதன் இலக்கை துல்லியமான முறையில் தாக்குகிறது.
[/vc_column_text][vc_column_text]
For more TNPSC Current Affairs in Tamil Jan 10, 2017 and English visit : www.tnpsc.academy/currentaffairs
Subscribe our Newsletter to get Daily TNPSC Current Affairs in Tamil Jan 10, 2017 and English on your Inbox.
Read TNPSC Current Affairs in Tamil Jan 10, 2017 and English. Download daily TNPSC Current Affairs in Tamil Jan 10, 2017 and English for TNPSC and Monthly compilation of TNPSC Current Affairs in Tamil Jan 10, 2017 and English as PDF.
[/vc_column_text][/vc_column][/vc_row]