Site icon TNPSC Academy

TNPSC Current Affairs in Tamil Jan 03, 2017

TNPSC Current Affairs in Tamil Jan 03, 2017

[vc_row][vc_column][vc_column_text]

www.tnpsc.academy – TNPSC Current Affairs in Tamil – Jan 03, 2017 (03/01/2017)

Download as PDF

தலைப்பு : வரலாறு – புதிய நியமனங்கள்

யுபிஎஸ்சி-யின் புதிய தலைவர்

யுபிஎஸ்சியின் உறுப்பினர்களில் ஒருவரான பேராசிரியர் David R. Syiemlieh அவர்களை யூனியன் பப்ளிக் சர்விஸ் கமிஷனின் புதிய தலைவராக ஜனாதிபதி நியமனம் செய்துள்ளார்.

கமிஷன் பற்றி :

இந்த கமிஷன், தலைவர் மற்றும் பத்து உறுப்பினர்களைக் கொண்டது.

அரசியலமைப்பு சட்ட பிரிவு 315 மற்றும் 323 ஆகியவை யுபிஎஸ்சி அதிகாரங்களும் செயற்பாடுகளும் யுபிஎஸ்சி உறுப்பினர்கள் நியமனம் ஆகியவற்றை உள்ளடக்கியது.

அரசியலமைப்பு சட்ட பிரிவு 319ன் படி, யுபிஎஸ்சி தலைவருக்கு இனி இந்திய அரசு அல்லது மாநில அரசு கீழ் எந்த வேலைவாய்ப்பு தகுதியும் இல்லை.

யுபிஎஸ்சியின் தலைவர் மற்றும் மற்ற உறுப்பினர்கள் இந்திய ஜனாதிபதி மூலம் நியமிக்கப்படுகின்றனர். அவர்களை ஜனாதிபதி மூலம் நீக்க முடியும்.

_

தலைப்பு : வரலாறு – சமீபத்திய நடப்பு நிகழ்வுகள்

இந்திய அறிவியல் காங்கிரஸ் – திருப்பதி

ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் திருப்பதியிலுள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தின் தரகரமா ஸ்டேடியத்தினில் 104 வது இந்திய அறிவியல் காங்கிரஸினை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்வின் : கரு “அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் மூலம் தேசிய அபிவிருத்தி “.

நாட்டில் அறிவியல் ஆராய்ச்சியை வலுப்படுத்தும் பொருட்டும் மற்றும் இந்தியாவினை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையில் உலகின் சிறந்த இடத்தில் கொண்டு வரவும் இது கொண்டுவரப்பட்டுள்ளது.

அறிவியல் காங்கிரஸ்-ன் ஒரு பகுதியாக பிரதமர் “இந்தியாவின் பெருமை” என்ற கண்காட்சியையும் துவங்கிவைத்துள்ளார்.

_

தலைப்பு : அரசியலறிவியல் – பொது நிர்வாகம் மற்றும் மாநிலங்களின் அமைப்பு மற்றும் விவரங்கள்

ஆரோக்கிய ரக்ஷா திட்டம் (Arokya Raksha Scheme)

வறுமை கோட்டிற்கு மேலே உள்ள மக்கள் மருத்துவ சிகிச்சை பெற உதவும் பொருட்டு ஆரோக்கிய ரக்ஷா திட்டம், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மூலம் தொடங்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் வறுமை கோட்டிற்கு மேலே உள்ள குடும்பங்களுக்கு சுமார் 35 லட்சம் வரை சுகாதார காப்பீடு வழங்க ஆரோக்கிய ரக்ஷா திட்டம் துவங்கப்பட்டுள்ளது.

[/vc_column_text][vc_column_text]

For more TNPSC Current Affairs in Tamil Jan 03, 2017 and English visit : www.tnpsc.academy/current-affairs

Subscribe our Newsletter to get Daily TNPSC Current Affairs in Tamil Jan 03, 2017 and English on your Inbox.

 

Read TNPSC Current Affairs in Tamil Jan 03, 2017 and English. Download daily TNPSC Current Affairs in Tamil Jan 03, 2017 and English for TNPSC and Monthly compilation of TNPSC Current Affairs in Tamil Jan 03, 2017 and English as PDF.

[/vc_column_text][/vc_column][/vc_row]

Exit mobile version