[vc_row][vc_column][vc_column_text]
www.tnpsc.academy – TNPSC Current affairs in tamil feb 14, 2017 (14/02/2017)
தலைப்பு : வரலாறு – சமீபத்திய நிகழ்வுகள்
இந்திய விதை காங்கிரஸ் – 2017 – Indian Seed Congress
இந்திய விதை காங்கிரஸ் – 2017 “விதைகளின் மகிழ்ச்சி” என்ற கருப்பொருளுடன் கொல்கத்தாவில் தொடங்கியது.
இந்த நிகழ்ச்சி, சிறந்த வணிக வளர்ச்சிக்காக புதிய தயாரிப்புகளை வெளிக்கொணரவும் சேவைகள் மற்றும் இணையத்தை பற்றி தெரிந்துகொள்ளவும் உதவுகிறது.
தொழில்நுட்ப திறமையுடையவர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களிடம் விதை நிறுவனங்களின் பங்குதாரர்கள் கலந்தாலோசிக்க இது ஒரு சிறந்த மேடையாக இருக்கும்.
_
தலைப்பு : அரசியல் விஞ்ஞானம் – மாநிலங்களின் விவரங்கள் மற்றும் பொது நிர்வாகம்
இந்தியாவின் முதல் மிதக்கும் தொடக்க பள்ளி
நாட்டில் பெரிய நன்னீர் ஏரியான Loktak ஏரியினில் தொடக்க பள்ளி ஆரம்பிக்கப்பட்டதன் மூலம் நாட்டின் முதல் மிதக்கும் பள்ளி பெறும் முதல் ஏரியாகிறது.
இந்த ஏரி இம்பாலில் இருந்து சுமார் 50 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
மணிப்பூரில் உள்ள Champu Khangpok கிராமத்தில் Langolsabi Leikai என்ற இடத்தில் இப்பள்ளி தொடங்கப்பட்டுள்ளது.
இப்பள்ளி, படிப்பினை பாதியிலேயே கைவிட்ட மாணவர்களுக்கும் வீடிழந்த மாணவர்களுக்கும் சமீபத்திய phumdis தீவிலிருந்து மக்கள் வெளியேற்றம் காரணமாக வெளியேறிவர்களுக்கும் கல்வி வழங்கும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
_
தலைப்பு : வரலாறு – சமீபத்திய நிகழ்வுகள்
உலக வானொலி நாள் 2017 – பிப்ரவரி 13
மக்களை ஊக்குவிக்கவும் மற்றும் தகவல்களை சிறந்த முறையில் தெரிவிக்கவும் வானொலி ஒரு ஊடகமாக இருப்பதினை கொண்டாடும் வகையில் உலக வானொலி நாள் பிப்ரவரி 13 அன்று அனுசரிக்கப்படுகிறது.
யுனெஸ்கோவின் 36 வது பொது மாநாட்டில் முதன் முதலில் ஸ்பெயின் ராஜ்ஜியத்தின் மூலம் முன்மொழியப்பட்ட பிறகு நவம்பர் 3, 2011 அன்று உலக வானொலி நாள் பிரகடனபடுத்தப்பட்டது.
2017ன் உலக வானொலி தினத்தின் கருப்பொருள் “நீங்கள் வானொலி”.
_
தலைப்பு : வரலாறு – சர்வதேச தற்போதைய நிகழ்வுகள்
சர்வதேச ஸ்பைஸ் மாநாடு
கேரள தலைநகரில் சர்வதேச ஸ்பைஸ் மாநாட்டின் இரண்டாவது பதிப்பு தொடங்கப்பட்டுள்ளது.
மாநாட்டின் மையக்கரு – “21 ஆம் நூற்றாண்டின் மசாலா தொழில் : Disrupt or be disrupted”.
விவசாயிகளின் வாழ்வாதாரம், தொழில் சவால்களை கண்டுகொள்ளுதல், உணவு பாதுகாப்பு கவலைகள் மற்றும் தேவைக்கேற்ப வழங்கலில் ஏற்றத்தாழ்வு மற்றும் நிலையான வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக பயனுள்ள உத்திகள் பற்றி விவாதிக்கவும் மற்றும் புதுமையான தொழில்நுட்பங்களை மேம்படுத்திக்கொள்ளவும் முயல்கின்றன.
_
தலைப்பு : அரசியல் விஞ்ஞானம் – மாநிலங்களின் அமைப்பு மற்றும் பொது நிர்வாகம்
கர்நாடக சட்டசபை கம்பாலாவை அனுமதிக்க சட்டவரைவு இயற்றியது
கர்நாடக சட்டப் பேரவை, பாரம்பரிய எருது விளையாட்டான கம்பாலாவை நடத்த வழிவகை செய்யுமாறு விலங்குகள் வதைத் தடுப்பு (கர்நாடக திருத்தச்) சட்டம் 2017னை இயற்றியது.
இந்த மசோதாவானது விலங்குகள் வதைத் தடுப்பு சட்டம் 1960 லிருந்து கம்பாலாவை நீக்கக்கோரி இயற்றப்பட்டது.
_
தலைப்பு : வரலாறு – மாநிலங்களின் விவரம் மற்றும் அமைப்பு, புதிய இனங்கள்
புதிய பறவை இனங்கள் நேபாலில் காணப்படுகின்றன
நேபாலின் மலைப்பகுதியில் பறவையின் ஒரு புதிய இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டதன் மூலம் இமாலய நாட்டில் பறவை இனங்களின் எண்ணிக்கை 866 என உயர்ந்துள்ளது.
ஒரு ரூஃபஸ்-வால் ராக் பாடும் பறவை Rufous-tailed Rock Thrush (Monticola saxitilis), பாக்கிஸ்தான் மற்றும் இந்தியாவில் காணப்படும் இலையுதிர் புலம்பெயர் பறவை இனங்கள் என கருதப்படுகிறது.
[/vc_column_text][vc_column_text]
For more TNPSC Current affairs in tamil feb and in English visit : www.tnpsc.academy/current-affairs
Subscribe our Newsletter to get Daily TNPSC Current affairs in tamil feb and in English on your Inbox.
Read TNPSC Current affairs in tamil feb and in English. Download daily TNPSC Current affairs in tamil feb and in English for TNPSC and Monthly compilation of TNPSC Current affairs in tamil feb and in English as PDF.
[/vc_column_text][/vc_column][/vc_row]