[vc_row][vc_column][vc_column_text]
www.tnpsc.academy – TNPSC Current affairs in tamil feb 09, 2017 (09/02/2017)
தலைப்பு : அரசியல் விஞ்ஞானம் – பொது நிர்வாகம் மற்றும் மாநிலங்களின் அமைப்பு, விவரங்கள்
குஜராத் – உணவு தானியங்களில் மாநிலத்தின் முதல் ரொக்கமில்லா அமைப்பு
குஜராத்தில் உணவு தானியங்களில் ரொக்கமில்லா விநியோகம் நிறுவப்பட்டது. இதன்மூலம் குஜராத் உணவு தானியங்களில் இந்த முறையை அறிமுகப்படுத்திய நாட்டின் முதல் மாநிலம் ஆகிறது.
குஜராத்தில் NFSA கீழுள்ள வாடிக்கையாளர்கள் (தேசிய உணவு பாதுகாப்பு சட்டம்) தங்கள் உணவு தானிய பெறுவதற்காக இனி ஆதார் அட்டைகள் மட்டும் கொடுத்தால் போதும்.
குஜராத் அரசு இந்த ஆதார் பேமெண்ட் சிஸ்டம் நிறுவுவதை மார்ச் 31க்குள் அணைத்து பல நியாய விலைக் கடைகளில் (FPS) பெற ஏற்பாடு செய்துள்ளது.
_
தலைப்பு : அரசியல் விஞ்ஞானம் – பொது நிர்வாகம் மற்றும் மாநிலங்களின் அமைப்பு விவரங்கள்
முதல் மின் அமைச்சரவை அமலாக்கம் பெறும் வடகிழக்கு மாநிலம் அருணாச்சல பிரதேசம்
மாநில மந்திரி சபை உறுப்பினர்களுக்காக இ-அமைச்சரவை திட்டத்தினை அமல்படுத்தும் முதல் வடகிழக்கு மாநிலமாக அருணாசலப் பிரதேசம் மாறிவிட்டது. (First North Eastern State)
முக்கிய குறிப்புகள்:
இந்த நடைமுறையை பயன்படுத்தி, அமைச்சரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் முன்னரே அமைச்சரவை குறிப்புகளை பெற முடியும். இ-அமைச்சரவை திட்டத்தினை பயன்படுத்தி அமைச்சரவையின் முழு அலுவல்களையும் கவனிக்க முடியும்.
இ-அமைச்சரவை தீர்வு களத்தின் மூலம் அமைச்சரவை குறிப்புகளையும் பார்க்கவும் மற்றும் அதை நன்கு முறையான ஆய்வு மற்றும் கருத்துக்களை மேற்கொள்ள முன்கூட்டியே வழங்கப்படுகிறது.
அருணாசலப் பிரதேசம் முழுமையாக மின் அமைச்சரவை அமைப்பினை ஏற்றுக்கொள்வதன் மூலம் மந்திரிசபை கூட்டங்களின் சராசரி நேரம் 4-5 மணி நேரத்திலிருந்து வெறும் 30-90 நிமிடங்கள் வரை குறைக்க முடியும். மற்றும் அரசாங்க ஆவணங்களின் பக்கங்களை ஆயிரக்கணக்கான கணக்கில் அச்சிடுவதை தவிர்க்க முடியும்.
_
தலைப்பு : அரசியல் விஞ்ஞானம் – அரசு சார்ந்த நலத்திட்டங்கள் மற்றும் அதன் பயன்பாடுகள்
பிரதான் மந்திரி கிராமின் டிஜிட்டல் சக்ஸர்தா அபியான்
6 கோடி கிராமப்புற குடும்பங்களில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை படித்தவர்களாக செய்ய, மத்திய அமைச்சரவை “பிரதான் மந்திரி கிராமின் டிஜிட்டல் சக்ஸர்தா அபியான்” (PMGDISHA) திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
திட்டம் நடைமுறைப்படுத்தல்:
இப்புவியில் சமத்துவமான நிலையை அடைய உறுதி செய்யும் பொருட்டு 250,000 கிராமப் பஞ்சாயத்துகளில் ஒவ்வொரு பஞ்சாயத்திலும் 200-300 தன்னார்வலர்கள் சராசரியாக பதிவு செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திட்டத்தின் முக்கியத்துவம் :
71வது NSSO கலவியறிவு சர்வேயின்படி, கிராமப்புற குடும்பங்களில் 6% குடும்பங்கள் மட்டுமே கணினி வைத்துள்ளது.
இந்த அறிக்கை, 15 கோடிக்கும் மேற்பட்ட கிராமப்புற குடும்பங்களில் கணினிகள் இல்லை என்று மேற்குறியிட்டு காட்டுகிறது.
மேலும் இந்த குடும்பங்களில் கணிசமான மக்கள் டிஜிட்டலில் எழுதப்படிக்க அறியாதவர்களாக உள்ளனர்.
இந்த திட்டத்தின் மூலம் மக்களுக்கு கணினிகளை இயக்குவதற்கு அதனை பற்றி கற்றல் முறைகளை அவர்களுக்கு கற்றுக்கொடுத்தல், டிஜிட்டல் சாதனங்கள் கற்றல் முறைகளை அவர்களுக்கு கற்றுக்கொடுத்தல் போன்ற தகவல்களை வழங்குவதன் மூலம் தங்கள் அறிவுத்திறனை பெருக்கிக்கொள்ள முடியும்.
[/vc_column_text][vc_column_text]
For more TNPSC Current affairs in tamil feb and in English visit : www.tnpsc.academy/current-affairs
Subscribe our Newsletter to get Daily TNPSC Current affairs in tamil feb and in English on your Inbox.
Read TNPSC Current affairs in tamil feb and in English. Download daily TNPSC Current affairs in tamil feb and in English for TNPSC and Monthly compilation of TNPSC Current affairs in tamil feb and in English as PDF.
[/vc_column_text][/vc_column][/vc_row]