Site icon TNPSC Academy

TNPSC Current affairs in tamil feb 03, 2017

TNPSC Current affairs in tamil feb

[vc_row][vc_column][vc_column_text]

www.tnpsc.academy – TNPSC Current affairs in tamil feb 03, 2017 (03/02/2017)

 

Download as PDF

தலைப்பு : வரலாறு – சமீபத்திய நிகழ்வுகள்

இந்திய கண்டுபிடிப்புகளின் குறியீடு

சிறந்த பொருளாதாரத்திற்கு இந்தியாவினை முன்னுதாரணமாக்கும் பொருட்டு, இந்திய அரசாங்கம் “இந்திய கண்டுபிடிப்புகளின் குறியீட்டு எண்” என்பதனை முன்னெடுத்து வைத்துள்ளது.

இந்த குறியீட்டு எண் ஆனது மாநிலங்களின் பொருளாதார புதிய கண்டுபிடிப்புகள் அடிப்படையில் நாட்டின் முதல் “இந்திய கண்டுபிடிப்புகளின் குறியீட்டு எண்”ன் இணையதளத்தில் மாநிலங்களின் தரத்தினை பதிவு செய்கிறது.

இந்த இணையத்தளமானது மாநிலங்களின் பொருளாதார புதிய கண்டுபிடிப்புகளை தகுந்த நேரங்களில் பதிவு செய்து வருவதையும் அதனை புதுப்பிக்கவும் உதவுகிறது.

முக்கிய குறிப்புகள்:

இந்திய கண்டுபிடிப்புகள் குறியீட்டு எண் ஆனது க்ளோபல் இன்னோவேஷன் குறியீடு (GII)-னை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்திய கண்டுபிடிப்பு சுற்றுச்சூழலை (Indian Innovation Ecosystem) பிரதிபலிக்கும் இந்தியாவின் மையப்படுத்திய கருப்பொருள்களை சேர்த்து கட்டமைக்கப்பட்டுள்ளது.

_

 

தலைப்பு : வரலாறு – சமீபத்திய நிகழ்வுகள்

World Wetlands Day – உலக ஈரநிலங்கள் நாள் – போபால்

மத்திய அரசும் மத்தியப் பிரதேச அரசும் இணைந்து இந்த ஆண்டு “உலக வெட்லேண்ட் தினம்”– த்தினை போபாலில் உள்ள போஜ் ஈரநிலங்கள் பகுதியில் கொண்டாடப்படுகிறது.

மேலும், அனைத்து மாநில அரசுகளும் தங்கள் ஆதரவினை தெரிவிக்கும் பொருட்டு தங்கள் மாநிலங்களில் “உலக வெட்லேண்ட் தினம்” கொண்டாட மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த ஆண்டு கருப்பொருள் : “பேரிடர் அபாய குறைப்பு ஈரநிலங்கள்”.

தீவிர பேரிடர் நிகழ்வுகளின் தாக்கங்களை குறைப்பதில் ஆரோக்கியமான ஈரநிலங்களுக்கு உள்ள முக்கித்துவத்தினை உணர்த்த சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டும் தகுந்த பாதுகாப்பு விதிமுறைகளை கட்டமைக்கும் பொருட்டும் இந்த கருப்பொருள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

உலக ஈரநிலங்கள் நாள் பற்றி:

1971 ஆம் ஆண்டு ஈரானிய நகரில் ராம்சரின் (Ramsar) ஈரநிலங்கள் மாநாட்டில் அமல்படுத்தப்பட்ட குறிக்கோள் அடிப்படையில் “உலக ஈரநிலங்கள் நாள்” பிப்ரவரி 2 ஒவ்வொரு ஆண்டும் அன்று கொண்டாடப்படுகிறது.

இந்தியா 1982 ஆம் ஆண்டு முதல் அம்மாநாட்டின் ஒரு கட்சியாக இருக்கிறது, மேலும் ஈரநிலங்களை பயன்படுத்த ராம்சர் அணுகுமுறைகளை பின்பற்றிவருகிறது.

_

தலைப்பு : அறிவியல் – அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

இந்தியப் பெருங்கடலின் அடியில் தொலைந்த கண்டம் – மொரிஷியஸ்

இந்தியப் பெருங்கடலின் மொரிஷியஸ் தீவிற்கு அடிப்பகுதியில் பழமை வாய்ந்த “தொலைந்த கண்டம்” ஒன்று விஞ்ஞானிகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அது எப்படி கண்டுபிடிக்கப்பட்டது?

எரிமலை வெடிப்புகள் போது வெளிப்பட்ட zircon தடயங்கள் மூலம் இது கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியப் பெருங்கடலில் தீவுப்பகுதிகளில் அடிப்பகுதியில் எங்கோ மறைந்துள்ளது என நம்பப்பட்ட இந்த Mauritia கண்டம் பாறைகலில் காணப்படும் தடயங்கள் மூலம் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதன் பின்னணி:

கிட்டத்தட்ட 200 மில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்த கோண்டுவானா சூப்பர் கண்டம் உடைந்ததால் இந்த தொலைந்த கண்டம் மறைந்துள்ளதாக நம்பப்படுகிறது.

[/vc_column_text][vc_column_text]

For more TNPSC Current affairs in tamil feb and in English visit : www.tnpsc.academy/current-affairs

Subscribe our Newsletter to get Daily TNPSC Current affairs in tamil feb and in English on your Inbox.

 

Read TNPSC Current affairs in tamil feb and in English. Download daily TNPSC Current affairs in tamil feb and in English for TNPSC and Monthly compilation of TNPSC Current affairs in tamil feb and in English as PDF.

[/vc_column_text][/vc_column][/vc_row]

Exit mobile version