Site icon TNPSC Academy

TNPSC current affairs dec in Tamil – Dec. 12, 2016

TNPSC current affairs dec in Tamil

[vc_row][vc_column][vc_column_text]

www.tnpsc.academy – TNPSC current affairs dec in Tamil – Dec. 12, 2016 (12/12/2016)

Download as PDF

தலைப்பு : வரலாறு – மாநிலங்களின் அமைப்பு மற்றும் சமீபத்திய நிகழ்வுகள்

Vardah – தமிழ்நாடு சரிந்தது

தமிழ்நாட்டினை தாக்கிய மிக கடுமையான புயல் “Vardah” சென்னையில் நிலச்சரிவை ஏற்படுத்தியதுடன் மக்கள் பலரை உயிரிழக்கச்செய்தது.

சூறாவளி காரணமாக மரங்கள் வேரோடு சாய்ந்தன, வீடுகளை சேதப்படுத்தியது, மின் சேவைகள் பாதிப்படைந்தது, பலத்த மழையால் நிலம் மற்றும் விமான போக்குவரத்து போன்றவை பாதிப்படைந்தது மேலும் பலத்த காற்று நகரத்தை சூறையாடியது.

_

தலைப்பு : அரசியலறிவியல் – பொது நிர்வாகம்

இந்தியாவின் மிகப்பெரிய சீஸ் ஆலை

குஜராத் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்திற்காக (Banas பால்) பனஸ்கந்தா மாவட்டத்தில் இந்தியாவின் மிகப்பெரிய சீஸ் ஆலையை பிரதமர் நரேந்திர மோடி துவங்கி வைத்துள்ளார்.

Banas பால்-ன் பொன்விழா ஆண்டு கொண்டாட்டத்தினை நினைவு கூறும் பொருட்டு இந்த ஆலை தொடங்கப்பட்டது.

_

தலைப்பு : வரலாறு – மற்ற நாடுகளுடன் இந்தியாவின் உறவு – உடன்படிக்கைகள்

இந்தியா மற்றும் இந்தோனேஷியா இடையே ஒப்பந்தம்

இரு நாடுகளுக்கும் இடையே உள்ள உறவினை ஊக்குவிக்கும் பொருட்டு இந்தியா மற்றும் இந்தோனேஷியா நாடுகளுக்கிடையேயான ஒப்பந்தம் தரப்படுத்தல், இளைஞர் விவகாரங்கள், விளையாட்டு மற்றும் மீன்பிடி துறை போன்ற துறைகளில் கையெழுத்திட்டன.

_

தலைப்பு : வரலாறு – சமீபத்திய நிகழ்வுகள்

“100 மில்லியன்-க்கு  100 மில்லியன்”

கைலாஷ் சத்தியார்த்தி குழந்தைகள் அறக்கட்டளை (Kailash Satyarthi Children’s Foundation) ஏற்பாடு செய்யப்பட்ட “100 மில்லியன் 100 மில்லியன்” பிரச்சாரத்தை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி துவக்கிவைத்தார்.

100 மில்லியன் பின்தங்கிய குழந்தைகளுக்காகவும் குழந்தை தொழிலாளர் முடிவுக்கு கொண்டுவரவும் குழந்தை அடிமைத்தன்மையை போக்கவும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளுக்கு குரல்கொடுக்கவும் மற்றும் ஒவ்வொரு குழந்தையின் உரிமை, பாதுகாப்பு, சுதந்திரம் மற்றும் கல்வியை கொடுக்க வேண்டும் போன்றவற்றை உலகம் முழுவதுமுள்ள 100 மில்லியன் இளைஞர்கள் மற்றும் குழந்தைகளை ஊக்குவிக்கும் பொருட்டு அடுத்த 5 ஆண்டுகளுக்கு இந்த பிரச்சாரம் தொடங்கப்பட்டது.

_

தலைப்பு : அறிவியல் – அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

இஸ்ரோவின் முதல் சொந்த தயாரிப்பு செயற்கைக்கோள்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ஆனது சொந்த தயாரிப்பில் இரண்டு வழிசெலுத்துதல் செயற்கைக்கோள்கள்களை 18 மாதங்களுக்குள் வழங்குவதாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

மேலும் இதில் அனைத்து பொருள்களையும் ஒன்றிணைத்தல், ஒருங்கிணைப்பு செய்தல் மற்றும் சோதனை செய்தல் (AIT) போன்ற அனைத்து அம்சங்களும் அடங்கும்.

இந்த ஒப்பந்தம், SRO செயற்கைக்கோள் மையம் (ISAC) மற்றும் தொழில்கள் கூட்டமைப்பு முன்னணி, ஆல்ஃபா வடிவமைப்பு டெக்னாலஜிஸ் பி லிமிடெட் ஆகியவற்றிற்கு இடையே கையெழுத்தானது.

முக்கிய அம்சங்கள்:

ஆல்பா ஒரு பாதுகாப்பு படையின் உற்பத்தி ஒப்பந்ததாரர் மற்றவர்கள் ஏற்கனவே இஸ்ரோவிடம் பாகங்களை விநியோகம் செய்யும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான விற்பனையாளர்கள் ஆவார்கள்.

Newtech Solutions, Aidin Technologies and பெங்களுருவின் DCX Cables, மைசூருவின் Vinyas Technologies and ஹைதெராபாத்தின் Avantel Systems ஆகியோர் கூட்டமைப்பில் உள்ள மற்றவர்கள் ஆவார்கள்.

_

தலைப்பு : வரலாறு – சமீபத்திய நடப்பு நிகழ்வுகள்

சுவிச்சர்லாந்து உள்ள உலகின் நீளமான ரயில் சுரங்கப்பாதை

uri – ன் மத்திய cantonல் உள்ள Erstfeldல் இருந்து தெற்கு டிசினோ கான்டனில் உள்ள போடியோ வரை செல்லக்கூடிய 57 கிலோமீட்டர் கோதர்டு பேஸ் சுரங்கப்பாதையானது (Gotthard Base Tunnel) (GBT) உலகின் நீளமான சுரங்கப்பாதையாக உள்ளது.

அதன் திறப்பினால், ஜப்பான் நாட்டின் 53.9 கிலோமீட்டர் Seikan சுரங்கப்பாதை உலகின் மிக நீளமான ரயில் சுரங்கப்பாதை என்ற தகுதி அதற்கு முறியடிக்கப்பட்டுள்ளது.

[/vc_column_text][vc_column_text]

For more TNPSC current affairs dec in Tamil and English visit : www.tnpsc.academy/current-affairs

Subscribe our Newsletter to get Daily TNPSC current affairs dec in Tamil and English on your Inbox.

 

Read TNPSC current affairs dec in Tamil and English. Download daily TNPSC current affairs dec in Tamil for TNPSC and Monthly compilation of TNPSC current affairs dec in Tamil as PDF.

[/vc_column_text][/vc_column][/vc_row]

Exit mobile version