www.tnpsc.academy – TNPSC Current Affairs in Tamil – Sep.9, 2016 (09/09/2016)
சர்வதேச அழகி ராணி போட்டி
சர்வதேச அழகி ராணி போட்டி வரும் நவம்பர் மாதம் தாய்லாந்திலுள்ள சொன்புரியில் நடைபெறவுள்ளது. இதில் இந்தியாவில் இருந்து மணிபுரியை சேர்ந்த பிஷேஷ் துயிரேம் என்ற திருநங்கை பங்கேற்கிறார்.
155 நாடுகள் இப்போட்டியில் பங்கேற்கின்றன.அதில் பிஷேஷ் துயிரேம்-ஐ சேர்த்து 30 திருநங்கைகள் பங்கேற்கிறார்கள்.
ASEAN – இந்தியா உச்சிமாநாடு
Vientiane, Lao PDR-இல் நடைபெற்ற ASEAN – இந்தியா உச்சிமாநாட்டில் இந்திய பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் பெங்கேற்றார்.
ASEAN பற்றி
Association of South East Asian Nations(ASEAN) உச்சிமாநாடு 10 நாடுகளை உறுப்பினர்களாக கொண்டது. அம்மாட்டில் 10 நாடுகளுடைய பொருளாதார மற்றும் கலாச்சார வளர்ச்சி பற்றி கலந்தாய்வு நடைபெறும்.
அக்கூட்டதில் இருக்கும் 10 நாடுகளை தவிர இந்தியா, சீனா,ஜப்பான், கொரிய குடியரசு, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகள் பெங்கேற்கும் .
NSSO சுகாதார கணக்கீடு
National Sample Survey Office நடத்திய சுகாதார கணக்கீட்டில் சிக்கிம் முதல் இடத்தைப்பிடித்துள்ளது.
முதல் 10 இடங்களை பிடித்த மாநிலங்கள் : சிக்கிம், கேரள,மிசோரம், ஹிமாச்சல பிரதேசம் , நாகலாந்து, ஹரியானா, பஞ்சாப், உத்தரகண்ட் , மணிப்பூர், மேகஹாளய.தமிழகம் சுகாதாரத்தில் பின்தங்கிய மாநிலமாக உள்ளது.