www.tnpsc.academy – TNPSC Current Affairs in Tamil – Sep.23, 2016 (23/09/2016)
சென்னை நிலத்தடி நீர் அதிகமாக சுரண்டப்படும் பட்டியலில் முதலிடம்
சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வின் படி, சென்னை நிலத்தடி நீரை அதிகமாக பயன்படுத்துவதன் மூலம் பட்டியலில் முதலாவது இடத்தில் உள்ளது.
மேலும் நிலத்தடி நீர் அதிக சுரண்டலில் கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் சேலம் பகுதிகள் முன்னிலையில் உள்ளன.
கணக்கெடுப்பு பற்றி:
மாநில பொதுப்பணித் துறை தமிழ் நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும் நிலத்தடி நீர் சுரண்டலை அலசி ஆராய்ந்து கணக்கெடுத்துள்ளது.
இந்த ஆய்வின்படி, தமிழ்நாடு நிலத்தடி நீரை 77 சதவீதம் பயன்படுத்திவிட்டது.
தமிழ்நாடு முதலமைச்சர் பெண்களுக்காக ஒரு திட்டம் அறிமுகம்
இத்திட்டதின் மூலம் ஏழை பெண்களுக்கு திருமண உதவியும், “திருமாங்கல்யம்” செய்ய 8 கிராம் தங்க நாணயமும் உதவித்தொகையாக கொடுக்கப்படுகிறது.
சிட்டிசன் மற்றும் சொசைட்டி புத்தகம்
இந்த புத்தகத்தினை பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து ஜனாதிபதி ராஷ்ட்ரபவனில் வெளியிட்டார்.
இந்த புத்தகம் பற்றி:
புத்தகத்தின் முக்கிய கரு: “எந்த குடிமகனும் அரசியலற்ற குடிமகனாக இருப்பதில்லை. ஒரு குடிமகனுக்கான வரையறை அவன் பொது விவகாரங்களில் கண்டிப்பாக கவனம் செலுத்த வேண்டும் என்பதே ஆகும்”.
இந்த புத்தகம் ஆட்சி அமைப்பு, பாதுகாப்பு மற்றும் அதிகாரமளித்தல் போன்ற பல்வேறு கருப்பொருள்கள் மற்றும் விரிவுரைகள் அடங்கிய ஒரு தொகுப்பு ஆகும்.
இன் – ரெசிடென்ஸ் திட்டம்:
கலைஞர்கள் ஸ்ரீ பரேஷ் மைட்டி மற்றும் அவரது மனைவி, திருமதி. ஜெயஸ்ரீ பர்மன் இன் – ரெசிடென்ஸ் திட்டத்தின் படி, ராஷ்டிரபதி பவனில் தங்கினர்.
அவர்கள் அவ்விடத்தில் 10 நாட்கள் தங்குவர்.
இந்த திட்டம் பற்றி:
இந்திய ஜனாதிபதி, டிசம்பர் 11, 2013 அன்று இந்த “இன் – ரெசிடென்ஸ் திட்டம்” -னை தொடங்கினார்.
இத்திட்டம் எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்களை ராஷ்ட்ரபதிபவனில் தங்க அனுமதித்து அவர்களின் ஆக்கப்பூர்வமான சிந்தனை மற்றும் வளரும் கலை நோக்கங்களை ஊக்குவிக்கும் பொருட்டு அவர்களுக்கு இந்த வாய்ப்பு கொடுக்க படுகிறது.
இது, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரவிருக்கும் இளம் திறமையாளர்களை ஊக்குவிக்க மேற்கொள்ளப்பட்ட செயல்முறை ஆகும்.