Site icon TNPSC Academy

Tnpsc Current Affairs in Tamil – Sep. 15, 2016 (15/09/2016)

tnpsc current affairs

www.tnpsc.academy – TNPSC Current Affairs in Tamil – Sep.15, 2016 (15/09/2016)

 

பாரா ஒலிம்பிக்கில் தேவேந்திர ஜஜாரியாவுக்கு  தங்கப் பதக்கம்

பிரேசிலின் ரியோவில் நடக்கும் 2016 பாரா ஒலிம்பிக்கில் ராஜஸ்தானில் உள்ள சுரு மாவட்டத்தை சேர்ந்த தேவேந்திர ஜஜாரியா ஆடவர் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார்.

இவர் பாரா ஒலிம்பிக்கின் ஆடவர் ஈட்டி எறிதல் போட்டியில் இரண்டு தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்தியராவார்.

ஜஜாரியா பற்றி:

இவர் முன்னரே ஏதென்ஸில் நடைப்பெற்ற பாரா ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றவர்.

தன்னுடைய முந்தைய உலக சாதனையை தானே முறியடித்தார்.

இவர் முதன்முறையாக பத்மஸ்ரீ விருது பெற்ற பாரா ஒலிம்பிக் வீரர் ஆவார்.

 

ஏர்செல் மற்றும் ரிலையன்ஸ் இணைந்தது

ஏர்செல் மற்றும் ரிலையன்ஸ் இணைந்தது.இவ்விணைப்பு இந்தியாவின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு ஒருங்கிணைப்பாகும்.

 

உயர்நீதிமன்றம்  50 சதவீதம் பெண்களுக்கு  இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிட்டுள்ளது

சென்னை உயர் நீதிமன்றம் உள்ளாட்சி தேர்தலில் பெண் வேட்பாளர்களுக்கு  50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

 

இந்திய – அமெரிக்க விஞ்ஞானிக்கு லெமெல்சன்-MIT விருது

இந்திய வம்சாவளி விஞ்ஞானியான  ரமேஷ் ரஸ்கர் அவர்கள் அமெரிக்காவின் லெமெல்சன்-MIT விருதான $500,000 பரிசோலையை தனது முன்மாதிரியான  கண்டுபிடிப்புகளுக்காகவும் இளைஞர்களுக்கான  வழிகாட்டுதலின் அர்ப்பணிப்புக்காகவும் நமது உலகை  மேம்படுத்தும்  நடைமுறை மற்றும் புதுமையான தீர்வுகளின் அர்ப்பணிப்புக்காகவும் பெற்றுள்ளார்.

இந்தியாவின் நாசிக்கில் பிறந்த இவர் அமெரிக்காவில் உள்ள MIT மீடியா லேபில் கேமரா கலாச்சார ஆய்வுக்குழுவை நிறுவி நடத்தி வருகிறார். மற்றும் மீடியா கலை மற்றும் அறிவியல் இணை பேராசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Exit mobile version