www.tnpsc.academy – TNPSC Current Affairs in Tamil – Sep.11, 2016 (11/09/2016)
ரியோ ஒலிம்பிக்கில் பதக்கங்கள்:
தமிழ்நாட்டில் இருந்து மாரியப்பன் ரியோ டி ஜெனிரியோவில் நடைபெற்ற ஒலிம்பிக்ப்போட்டியில் ஆண்கள் உயரம் தாண்டுதல் டி 42 பாராலிம்பிக்சில் தங்கப் பதக்கம் வென்றார்.
அவர் உயரம் தாண்டுதலில் 1.89 மீட்டர் தாண்டி இத்தங்கபதக்கத்தை வென்றார்.
நொய்டாவை சேர்ந்த வருண் சிங் பாட்டியா ரியோ டி ஜெனிரியோவில் நடைபெற்ற ஒலிம்பிக்ப்போட்டியில் அதே ஆண்கள் உயரம் தாண்டுதல் டி 42 பாராலிம்பிக்சில் வெண்கல பதக்கம் வென்றார்.
முக்கிய குறிப்புகள்:
மாரியப்பன் பற்றி:
மாரியப்பன் பாராலிம்பிக் ஆண்கள் பிரிவில் ஒலிம்பிக் போட்டிகளில் தங்க பதக்கம் வென்ற முதல் இந்திய வீரராவார்.
அவர் தமிழகத்தை சேர்த்த சேலம் மாவட்டம் பெரியவடக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்.
தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா மாறியப்பனுக்கு பாராட்டுபரிசாக ரூபாய் 2 கோடியை அறிவித்துள்ளார்.
வருண் சிங் பாட்டியா பற்றி:
அவர் நொய்டாவை சேர்ந்தவர். இவர் 1.86 பி மீட்டர் உயரம் தாண்டி வெங்கல பதக்கம் வென்றார்.
வெள்ள மேலாண்மை குழு:
வெள்ள மேலாண்மை பற்றிய ஆலோசனைகளை வழங்க, சென்னை உயர் நீதிமன்றம்
பேரிடர் மேலாண்மை செயல்பாட்டு சட்டத்தின் கீழ் 15 நாட்களுக்குள் ஒரு நிபுணர் குழு அமைக்க மாநில அரசிற்கு உத்தரவிட்டுள்ளது
பேரிடர் மேலாண்மை செயல்பாட்டு சட்டம் பற்றி:
இச்சட்டம் 2005 ஆம் ஆண்டு பேரிடர்கலால் ஏற்படும் இழப்புகளை சரிவர சீர்படுத்தும் நோக்குடன் செயல்படுத்தப்பட்டது.
இச்சட்டம் மூன்று அடுக்காய், அதாவது தேசிய, மாநில, மாவட்ட நிலைகள் கொண்ட குழுவாக செயல்படுகிறது.
NDMA, SDMA, NEC, NDRF, NIDM மற்றும் பிற பேரழிவு தொடர்புடைய நிதி போன்றவை இந்த பேரழிவு மேலாண்மை சட்டம் 2005 கீழ் நடைமுறைப்படுத்தப்படும்.
அங்கீகரிக்கப்படாத நிலங்களுக்கு தடை:
சென்னை உயர் நீதிமன்றம் தமிழகத்திலுள்ள அணைத்து அங்கீகரிக்கப்படாத நிலங்களுக்கும் தடைவிதித்துள்ளது.