[vc_row][vc_column][vc_column_text]
www.tnpsc.academy – TNPSC Current Affairs in Tamil – Oct.28, 2016 (28/10/2016)
தலைப்பு : அரசியல் அறிவியல் – நலம் சார்ந்த அரசு திட்டங்கள், அவற்றின் பயன்பாடு
தமிழ்நாடு நவம்பர் 1 முதல் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தினை செயல்படுத்துகிறது
தமிழ்நாடு மாநில அரசு இறுதியாக நவம்பர் 1 ல் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தினை செயல்படுத்த முடிவு செய்துள்ளது.
இந்த சட்டம் பற்றி:
ஏற்கனவே மாநில அரசு பொது விநியோகத் திட்டத்தின் மூலம் ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு அரிசி வழங்கி வருகிறது. இனிமேல் அரிசி அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படும்.
தலைப்பு: வரலாறு – மாநிலங்களின் தோற்றம் அமைப்பு
ஹைதெராபாத் நட்புறவான வணிகத்தில் முதலிடம்
உலக வங்கியின் அறிக்கையின் படி, ஹைதெராபாத் வணிக ஒப்பந்தங்களை செயல்படுத்துவதில் மற்றும் நொடிந்து போன தொழில் பிரச்சனையை தீர்ப்பது போன்ற இரண்டு காரணிகள் மூலம் தொழில் புரிவதற்கு சுலபமான மாநிலமாக முதல் இடம் மாறுகிறது.
இந்த அறிக்கை பற்றி:
உலக வங்கி தனது அறிக்கையை, ஒரு வணிகம் தொடங்க கட்டுமான அனுமதிகளைப் கையாள்வதல், சொத்துக்களை பதிவு செய்தல், வரி செலுத்துதல், எல்லைகளை கடந்து வர்த்தகம் புரிதல், ஒப்பந்தங்களை செயல்படுத்துதல் மற்றும் நொடித்த தொழிலை தீர்ப்பது போன்ற வணிகக் கட்டுப்பாடுகளை அளவிடும் காரணிகளின் அடிப்படையில் நாடு முழுவதும் 17 நகரங்களில் பொதுமதிப்பாய்வு செய்து இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
ஒட்டுமொத்த எளிதான வணிகம் செய்வதன் அடிப்படையில் முத்துக்களின் நகரமானது லூதியானாவிற்கு அடுத்த நிலையான இரண்டாவது இடத்தில் உள்ளது.
ஒரு புதிய வணிகத்தை தொடங்குவதற்கு பொருந்திய இடம் என்ற அடிப்படையில் ஹைதெராபாத் அங்கு நான்காவது இடத்தைப் பிடிக்கிறது மற்றும் முதல் இடத்தைப் புது தில்லி பெற்றுள்ளது.
தலைப்பு : புவியியல் – சுற்றுச்சூழல் மற்றும் சூழலியல்
காட்டு விலங்குகள் மூன்றில் இரண்டு பங்கு 2020 ம் ஆண்டில் அழிந்து போக கூடிய வாய்ப்பு
லண்டன் உயிரியல் சமூகம் (ZSL) மற்றும் உலக வனவிலங்கு நிதியம் ஆகியவற்றின் வாழக்கூடிய உயிரினங்களின் கணிப்பீட்டின் படி, உலகளாவிய வன விலங்குகளின் மக்கள் தொகை 1970 ஆம் ஆண்டு முதல் 58 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது.
இது தொடர்ந்தால் அந்த சரிவு 2020 ஆம் ஆண்டு, முதுகெலும்பி விலங்குகள் மத்தியில் மூன்றில் இரண்டு பங்கு குறைய வாய்ப்புள்ளது.
சரிவின் காரணம் :
வாழ்விட இழப்பு, வன வர்த்தகம், சுற்றுச்சூழல் மாசு மற்றும் காலநிலை மாற்றம் மற்றும் மனித நடவடிக்கைகள்.
இந்த அறிக்கை பற்றி:
இந்த ஆய்வில், உலகில் இனங்கள் பற்றி பறவைகள், மீன்கள், பாலூட்டிகள், நீர்நில வாழ்வன, ஊர்வன மற்றும் உலகை சுற்றி சுமார் 3700 பல்வேறு இனங்கள் மற்றும் மொத்த எண்ணிக்கை 6 சதவீதம் முதுகெலும்புடன் கூடிய விலங்குகள் ஆகியவற்றை ஆராய்ச்சி செய்து எடுக்கப்பட்டது.
ஆராய்ச்சியாளர்கள் முதுகெலும்பிகளின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் 2% சராசரியாக குறைந்து வருகிறது என்று முடிவு தெரிவித்துள்ளது..
இறுதி அறிக்கை 2014 – ன் படி, உலக வனவிலங்கு மக்கள் கடந்த 40 ஆண்டுகளில் பாதியாக குறைந்துள்ளது என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
தலைப்பு : வரலாறு – மாநிலங்களின் தோற்றம் மற்றும் அமைப்பு
ஹரியானாவின் கரிப் கல்யாண் வருடம் (Garib Kalyan Varsh)
ஹரியானா மாநில முதலமைச்சர் மனோகர் லால், நிதியாண்டில் மாநில அரசு 2017 – யை “கரீப் கல்யாண் வருடம்” என அனுசரிக்க முடிவு செய்துள்ளது என்று கூறினார்.
இந்த திட்டம், அடுத்த ஆண்டுக்கான ஏழை மக்களின் திட்டங்கள் பட்டியலை வடிவமைக்கப்பட்டு அதனை செயல்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது.
தலைப்பு : வரலாறு – மாநிலங்களின் தோற்றம் மற்றும் அமைப்பு
உயர்ந்த வாழ்க்கை தரம் (Highest life expectancy)
ஜம்மு காஷ்மீர், இந்தியாவின் பதிவாளர் கொடுக்கப்பட்ட தரவு படி, ஆயுள் எதிர்பார்ப்பு தவிர(life expectancy at birth), உயர்ந்த வாழ்க்கை எதிர்பார்ப்பு (Highest life expectancy) கொண்டுள்ளது என அறிவித்துள்ளது.
இந்த அறிக்கையில், கேரள அரசு 2010 வரை பட்டியலில் முதலிடத்தில் இருந்தது.
[/vc_column_text][/vc_column][/vc_row]