[vc_row][vc_column][vc_column_text]
www.tnpsc.academy – TNPSC Current Affairs in Tamil – Oct.21, 2016 (21/10/2016)
தலைப்பு : அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
சீனாவின் உலகின் மிகப்பெரிய வெளிப்புற காற்று தூய்மையாக்கி
சீனாவின் உலகின் மிகப் பெரிய “புகை இல்லா கோபுரம்” அதாவது ஒரு வெளிப்புற காற்று தூய்மையாக்கி ஒரு டச்சு பொறியாளர் மூலம் பெய்ஜிங்கில் வடிவமைக்கப்பட்டு திறப்பு விழாவிற்கு தயாராக உள்ளது.
இந்த கோபுரம் பற்றி:
7 மீட்டர் உயரமுள்ள இந்த கோபுரம், அதன் அருகே உள்ள சுமார் 75 சதவிகித PM 2.5 மற்றும் PM 10 போன்ற மிக சிறிய துகள்களை கைப்பற்றி, பின்னர் அதை சுற்றி “குமிழி” உருவாக்கி சுத்திகரிக்கப்பட்ட புதிய காற்றாக மாற்றி வெளியிட உதவுகிறது.
இந்த கோபுரம், அதனுடைய ஓசோன்-இல்லா அயன் தொழில்நுட்பத்தின் மூலம் ஒரு மணி நேரத்திற்கு 30000 கன மீட்டர் காற்றினை சுத்தம் செய்ய முடியும்.
தலைப்பு: சுற்றுச்சூழல் மற்றும் சூழலியல்
காஷ்மீரின் செந்நிற கலைமான் – அருகிவரும் விலங்கினங்களின் பட்டியலில் சேர்ந்தது
சர்வதேச இயற்கை பாதுகாப்பு ஒன்றியம் (ஐயுசிஎன்), செந்நிற கலைமானை அருகிவிட்ட விலங்கினங்களின் பட்டியலில் பட்டியலிடப்பட்டுள்ளது.
மேலும் இதன் மேல் அதிக கவனமும் பாதுகாப்பும் செலுத்தவும், மற்றும் அதனுடைய மொத்த தொகை குறைவதைபொருட்டு அதனுடைய இனப்பெருக்கத்தை அதிகரிக்கவும் பாதுகாப்பு முயற்சிகள் மேற்கொள்ளும் பொருட்டு இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
அது அட்டவணை- I ன் கீழுள்ள இந்திய வனவிலங்கு சட்டம் (பாதுகாப்பு) 1972 மற்றும் ஜம்மு காஷ்மீர் வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம் 1978 கீழ் பட்டியலிடப்பட்டுள்ளது. மற்றும் இந்திய அரசின் உயர் பாதுகாப்பு முன்னுரிமை குடுக்கவேண்டிய 15 இனங்கள் மத்தியில் பட்டியலிடப்பட்டுள்ளது.
அதன் தொகை வீழ்ச்சிக்கான காரணம் :
அதனுடைய இருப்பிடத்தை அழித்தல், வீட்டு கால்நடைகள் மூலம் அதிகளவில் மேய்ச்சல் மற்றும் வேட்டையாடியதன மூலம் அதன் மொத்தத்தொகை குறைந்தது.
[/vc_column_text][/vc_column][/vc_row]